சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

திங்கள், 14 மே, 2018

      திருப்பூர் இலக்கிய   விருது 2018  
                                               Tiruppur Literary Award  2018
 ( கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு திருப்பூர் இலக்கிய   விருது  )                   
: 3/6/18 ஞாயிறு, பிற்பகல் 5  மணி.                        மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை,  திருப்பூர்
விருது பெறலில்: மதிப்பிற்குரியோர் : குட்டி ரேவதி ( சென்னை ), ரோஸ்லின் ( மதுரை), சாந்தாதத் ( ஹைதராபாத்) ,ராஜாசந்திரசேகர்( சென்னை),  அன்பாதவன் ( விழுப்புரம் ), ஜெயன்மைக்கேல் ( சென்னை),  மு.முருகேஷ் ( வந்தவாசி ), உஷாதீபன்                                   ( சென்னை),   ம.காமுத்துரை ( தேனி ), ஷக்தி ( திருத்துறைப்பூண்டி),                                    மு. ஆனந்தன் ( கோவை ) , முத்துக்குமாரசாமி ( சென்னை),                                             ஆர்.எம். சண்முகம் ( சென்னை),   சொக்கலிங்கனார் (ஈரோடு ),                                  யுகபாரதி  ( பாண்டிச்சேரி ), பொன்குமார் ( சேலம் ), மீனாட்சிசுந்தரம் ( கோவை) , மலையாள எழுத்தாளர்கள் வெள்ளியோடன், சாபி செருமாவிலயி..... வருக ..செவ்வாய், 8 மே, 2018

திருப்பூர்  சக்தி விருது 2018 – வழங்கல்   நிகழ்வு
நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும்,  சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும்  வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும்  என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன்( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும்   இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .
* திருப்பூர்  சக்தி விருது 2018 – வழங்கல்   நிகழ்வு -  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்..,  திருப்பூர்  மாவட்டம் * 6/5/18. ஞாயிறு  அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது .,
2 நூல்கள் வெளியீடப்பட்டன :நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.
     1.* சுப்ரபாரதிமணியன்- மணல் சிறுகதைத் தொகுப்பு
2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு
:கீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்ற்பின்    : பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்
லட்சுமி அம்மா தஞ்சாவூர்., இன்பாசுப்ரமணியன் சென்னை, உமா மோகன் பாண்டி, பத்மபாரதி பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , ,                       கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர்  , சாந்தகுமாரி சிவகடாட்சம் சென்னை ,
அயலகம்: கவுசல்யா சுப்ரமணியன் கனடா, எம் எஸ்.லட்சுமிசீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), .சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா,

* ஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் )         ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .
நடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை  தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.
* நூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட   நூல்கள் பற்றி  முத்துபாரதி  பேசினார்.
ஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )
சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல்
தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல்
பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள்                      ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )
* இதழ்கள் அறிமுகம் :
உயிரோசை, நிழல், பேசும் புதிய சக்தி
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்... வழங்கப்பட்டன.
செய்தி : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488திங்கள், 7 மே, 2018நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும்,  சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும்  வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும்  என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன்( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும்   இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .

* திருப்பூர்  சக்தி விருது 2018 – வழங்கல்   நிகழ்வு -  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்..,  திருப்பூர்  மாவட்டம் * 6/5/18. ஞாயிறு  அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது .,
2 நூல்கள் வெளியீடப்பட்டன :நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.
     1.* சுப்ரபாரதிமணியன்- மணல் சிறுகதைத் தொகுப்பு
2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு
:கீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்ற்பின்    : பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்
லட்சுமி அம்மா தஞ்சாவூர்., இன்பாசுப்ரமணியன் சென்னை, உமா மோகன் பாண்டி, பத்மபாரதி பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , ,                       கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர்  , சாந்தகுமாரி சிவகடாட்சம் சென்னை ,
அயலகம்: கவுசல்யா சுப்ரமணியன் கனடா, எம் எஸ்.லட்சுமிசீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), .சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா,

* ஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் )         ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .
நடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை  தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.
* நூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட   நூல்கள் பற்றி  முத்துபாரதி  பேசினார்.
ஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )
சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல்
தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல்
பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள்                      ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )
* இதழ்கள் அறிமுகம் :
உயிரோசை, நிழல், பேசும் புதிய சக்தி
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்... வழங்கப்பட்டன.
செய்தி : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488
வெள்ளி, 27 ஏப்ரல், 2018

திருப்பூர் சக்தி  விருது 2018  
6/5/18  ஞாயிறு, பிற்பகல் 4  மணி. முதல்
இடம்: மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை திருப்பூர் ( திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் திருப்பூர் திருப்பதி கோவிலிருந்து  கிழக்குப்பகுதியில் 150 மீட்டர் தூரத்தில் உள்ளது ) .
சிறப்புரை: தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் )
விருது பெற்றோர்: மதிப்பிற்குரியோர்
படைப்பிலக்கியம் : லட்சுமி அம்மா –தஞ்சாவூர்., இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை,
கல்வியாளர்கள் : ஸ்ரீலதா-சென்னை , தாரிணி அவிநாசி ,
மொழிபெயர்ப்பாளர்கள் : கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்-  ஹைதராபாத்,
அயலகம்: கவுசல்யா சுப்ரமணியன் –கனடா, எம் எஸ்.லட்சுமி,  சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா,

பிற துறைகள்: சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர்  , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை ,புதன், 18 ஏப்ரல், 2018

ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்...பெருமூச்செடுத்து இரை தேடும்...
முத்தமிழ் விரும்பி


            தமிழில் காவியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்று தொடர்ந்த படைப்பு முயற்சிகள் இன்றைக்கு சிறுகதைகள், நாவல், கவிதைகள் என்பதாகத் தொடர்கின்றன. தமிழில் நாவல் (வடிவமாக) உருவெடுத்து ஒரு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
            நவீன உரைநடை இலக்கியமாக நாவல் இன்று வகை வெளிப்பாட்டுத் தளங்களிலும், வானொலி உள்பட எல்லோராலும் வாசிக்கப்படுகிறது. பொழுதுபோக்காக படிக்கப்பட்ட நாவலானது குடும்ப வெளியை விட்டு புறச்சூழல் தரும் நெருக்கடிகளில் மனிதன் எவ்வாறு போராடுகிறான். எந்த அளவுக்கு இயைந்து நடைபோடுகிறான் என்பதாகவும் தனிமனித வாழ்வு சமூகத்தையும் அதன் கால மாறுபாடுகளையும் பின்புலக் காட்சிகளாகவும் விரித்துப் பேசுகின்றது.
            நாவல் வாசிக்கும் நாமும், நமது எண்ணங்களுக்கு ஒத்தும் மறுத்தும் உரையாடியவாறே கதை மாந்தர்களோடு பயணிக்கிறோம். பிரதி முடிவடைந்தாலும் அப்பிரதி ஏற்படுத்திய தாக்கம் வினாக்களாகவும், விடைகளாகவும் குமிழியிட அடுத்த கணத்தில் நம்மை இயல்புக்கு விடுவிக்க முனையலாம். ஆனாலும் சில தனிமனிதர்களுடைய நேர்வுகள் எதிர்படும் வாழ்வோடு கலந்து நம்மையும் துணையழைத்துச் செல்லும் பெருமூச்சாகிறது.
            எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இன்றைய விழி பிதுங்கும் தொழில் நகரமாம் திருப்பூரை வாழிடமாகக் கொண்டவர். மூச்சு முட்டும் சூழலில் மாறுதலுக்குள்ளான தொழில் நகரத்தில் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் விடியலைத் தேடும் மனிதர்கள்!
            சுப்ரபாரதிமணியன் என்ற சூழலியல் ஆர்வலர், கட்டுரையாளர், கவிஞர், இதழியலாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்ற பன்முகத் தன்மை கொண்டவரது ஆறாவது நாவல் 'தேநீர் இடைவேளை'. வெவ்வேறு நபர்கள் எழுத நினைத்து அல்லது தவிர்த்துவிடும் அன்றாட அவலங்கள் முதல் பாகமாக பத்து கடிதங்களின் வடிவில் எழுதா எழுத்துகளாக வடிவம் பெறுகின்றன. இக்கடிதங்களின் சேரல் முகவரி நமதாகவே இருக்கின்றன. பெரும்பான்மையான வேளைகளில், நமது பிரச்சனைகளே நம்மை வந்தடையும்போது விட்டு வெளியேறாமல் மூழ்கித் தவிக்கிறோம். சில நேரங்களில் அவலங்கள் பொதுத் தன்மையுடன் மூச்சுக்காற்றாய் உள்ளிறங்கி வெம்மையோடு வெளியேறுகின்றன.
            கிராமத்து வாழ்வு பிழைப்பு தேடி நகரத்துள் இரண்டறக் கலக்கும்போது பிழைத்தலே இலக்காகிப் போகிறது ஆனால், நகர்சார் வாழ்வனுபவம் நாயாய்த் துரத்துகிறது. கஷ்டப்பட்ட பழைய வாழ்வை நினைத்து இளைப்பாற வேண்டியதிருக்கிறது. வெகு இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் நாள் எப்படி வாய்க்கும்?

2
            கிராமத்திலிருந்து தொழில் நகரத்துக்கு வந்த மல்லிகா மில்லில் வேலை கொடுப்பதற்கு முன்பு தங்கவைக்கப்பட்ட கட்டடத்தை கொட்டகை என்கிறார்கள்; அவளோ கொட்டடி என்கிறாள். பள்ளியில் சேரச் சொல்லுமளவுக்கு சிறியவளாக இருக்க குழந்தைத் தொழிலாளர்களுக்கான மாலை வகுப்பில் சேர ஆசைப்படுகிறாள். பீரோவும், சேலைகளும் வாங்கி அடுக்க நிறையவே ஆசை.
            "கொட்டகையிலிருந்து, மில்லுக்குப் போகிறவர்களெல்லாம் அவசர கதியில் தான் போகிறார்கள். வருகிறார்கள். களத்து மேட்டுக்கு தூக்குச் சட்டியுடன் நாம் காலாறப் போன மாதிரி யாரும் நடமாடக் காணோம். பத்து மைல் தள்ளிப் போனால் எல்லோரும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு நடமாடுபவர்கள் போல ஆகிப்போவார்களாம். அப்படி வேலையாம். டாலர், பவுண்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள்" என்று சொல்லும் மல்லிகாவுக்கு பிறருக்கு சுமையாக இருக்க விருப்பமில்லை.
               தனிமையிலிருக்கும் ரங்கநாதனுக்குத் துணைதேவை. தன்னையொத்த வயதிலிருக்கும் பெண்கள், விதவைகள், அழகில்லாதவர்கள் என அவரை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்களாம். மனைவி இறந்துவிட மில்லுக்கு வந்தவருக்கு துணையாக எல்லோரையும் எண்ணி அல்லல்படுகிறார். கற்பனை வயப்பட்டு தனிமையை விரட்ட நினைக்கிறார். மகள்கள், பேரக்குழந்தைகளோடு ஊரில் சேர்ந்து வாழ்ந்தாலென்ன? அவர்களிடம் கருணை கிடைத்தாலும் கம்பீரம் இருக்காதென்பது அவருடைய நடைமுறைச் சிக்கல்.
      சின்ன வயது ஷமீம் மூன்றாண்டுகள் தொடர்ந்து மில்லில் வேலை பார்த்தால் மாங்கல்யத் திட்டத்தின்படி முழு பணம் கிடைக்கலாம். கிடைக்க விடுவார்களா முதலாளிகள்? கிடைத்தால் அவளது அக்கா நயா முன்னிஸாவிற்குப் பெருமூச்சுவிடத் தடையிருக்காது. இருப்பினும், முப்பது அறைகளுக்கும் பொதுவாயிருக்கும் கழிவறையைப் பயன்படுத்த இரவிலும் கூச்சம். அந்தரங்கத்தை எப்படி அத்தனை பேர் முன்னிருப்பில் பகிர்ந்து கொள்ள? எத்தனைக் களைப்பிலும் இதுவேறு பிரச்சனையாகப்பட எத்தனை ஷமீம்கள் சிறுநீர்ப் பையில் கற்களைச் சுமக்க, வயிற்றுவழியால் துடிக்க பெரும் மருத்துவச் செலவில்!
            தொழில் நகரத்துக்கு அருகிலிருக்கும் கிராமத்து மில்லுக்கு தந்தி டெலிவரி செய்யும் சேவகனுக்கு மிதிவண்டி மிதிக்க முடியவில்லை எனினும் இருசக்கர வாகனக் கனவு அல்லது இடமாறுதல் தான் கனவு. ஆனால், மல்லிகா போன்றோருக்கு குடும்ப ஆலோசனை மையம். உளநலப் பிரிவு, இலவச சட்ட ஆலோசனைக்கு முகவரி தர முடிகிறது. தண்ணீர் லாரி, பிளாஸ்டிக் அழுக்குத் துணிக்கூடை, தவணை முறையில் பொருள் விற்பவர்கள், எப்.எம். ரேடியோ, தொலைக்காட்சித் தொடர், வட்டிக்குப் பணம் தரும் ராஜேஷ் சிங், வசூலில் இருந்து மீள அவனுடன் இரு தினங்கள் தங்கிவரும் பெண், வட்டிக்கு பணம் தர வட்டிக்கு வாங்கிச் சிக்கியதால் தற்கொலை செய்து கொண்ட கெய்க்வாட், தமிழகத்துத் தொழில் நகரத்தில் இருந்தாலும் மீரட், டெல்லி, காஸியாபாத் போன்ற தன் பக்கத்து ஊர்கள் மாசுபடுவது குறித்துக் கவலைப்படும் வடக்கத்தியர்கள் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து தங்களது கடவுளுக்குத் தாராளமாகச் செலவு செய்கிறார்கள்.
      வடக்கத்தியர்கள் ஆக்கிரமிப்பு என கவலைப்படும் ரங்கநாதன் அருக்காணியோடு லாட்ஜுக்குப் போனாலும் போலீஸ் தொல்லையால் கொட்டடி திரும்பி அதிகாலையில் மல்லிகாவை பலாத்காரம் செய்ய முயற்சித்து, அவள் தப்பித்துவிட அவளது பெருங்கருணைப் பார்வையிலிருந்து தப்பிக்க வேறொரு மில்லுக்குப் பயணிக்கிறார்.
      புதிய மில்லில் தன்னைவிட வயதில் சற்று இளையவரான அந்தோணிராஜ் தொழிற்சங்கம். புத்தக வாசிப்பு என்றிருக்க அதுபோல மாறும் நம்பிக்கையில் மல்லிகாவுக்கு எழுதுகிறார். எழுதப்படாத பத்தாவது கடிதத்தில்.

நாவலின் இரண்டாவது பாகம்
      பிரம்மச்சரிய வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட அந்தோணிராஜ் எழுதிய டைரிக் குறிப்புகளில் .எம்.எஸ். நம்பூதிபாடு வாழ்க்கைக் குறிப்புகள். நம்பூதிரிப் பெண்களின் திருமண வாழ்வின் துயரங்கள், பெண் தொழிற்சங்க வாதிகளின் போராட்ட வாழ்க்கை, ஷமீம் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஈடுபாடு, 1943ல் கோவை வசந்தா ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட பிளேக் நோய் மரணம், தடுப்பு நடவடிக்கையில் தொழிற்சங்க வாதிகள், கோவைப் பகுதி தொழிலாளர் பிரச்சனைகள். ஆதிவாசிகளின் போராட்டம், கேட் மீட்டிங் நடத்த விடாமல் ஆலை முதலாளிகள் சாலையோரத்தில் முள்வேலி போட்டு சாலையோரப் பூங்கா வளர்ப்பது என்றெல்லாம் இருக்கின்றன.இளமைக்கால நட்பு குறித்து மகிழ்ச்சி கொள்ளும் அந்தோணிராஜ், ரங்கநாதனின் அவலம், நம்பிக்கையின்மை பற்றியும் டைரியில் குறித்து வைக்கிறார்.
      "சோசலிசம் மிகச் சிறப்பான வாழ்க்கை முறை. அதன் உண்மையான மகத்துவம் அனைத்து மக்களுக்கும் அதிகாரத்தை அளிப்பது மற்றும் பொதுவான பொருளாதார வளர்ச்சி இவற்றில் அடங்கியுள்ளது. நவீனமயமாக்கம் என்பது பொருளாதார முனையிலும், தத்துவார்த்த கலாச்சார முனையிலும் ஆக இரு முனைகளிலும் நடத்தப்பட வேண்டும். சோசலிச சீர்திருத்தத்தைத் தவிர நமக்கு மாற்று இல்லை" என்றெழுதும் அந்தோணிராஜ், சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்கள் பற்றி அக்கறை கொள்ளும் இவர், இலக்குகளை மங்கலாக்கிவிடும் தன்மைகள் கொண்ட பாலியல் ஆசைகள், உணர்வுகள், சபலங்களை டைரியில் பதிவு செய்வதில் உடன்பாடில்லாதவர். ஆனால், சமூக மாற்றமே இவரது நம்பிக்கையை நகர்த்துவதால், சங்க நடவடிக்கைக்காக அடிக்கடி இடம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் தொழிற்சங்கவாதி. ஆனால், வரலாற்றுணர்வோடு செயல்பட்டு குறிப்புகள் எழுதுகிறார். வாழ்நாட்கள் பாதியைக் கடந்தாலும் போராடத் தூண்டும் அந்தோணிராஜ் பெருநகர் வாழ்வில் தவிர்க்கவியலா மனித உந்து சக்தி.
            சமூக அக்கறையுடைய ஒரு இளைஞனது நாட்குறிப்பில் என்னென்ன இருக்கும்? அதுவும் இலக்கியம் படிக்கும் பழக்கம் இருந்துவிட்டால்... கொட்டடி வாழ்வு தரும் பெரு நகரத்தில் வாசிப்பதே சொர்க்கம்; நூல் நிலையம் போய்வர வாடகை சைக்கிள்.
            மக்களுக்கான கல்வி இயக்கத்தின் தேவை. குடிப்பது பற்றிய இலக்கிய சர்ச்சைகள், குறிப்புகள், தானொரு பத்திரிகையாளன் என்று கூறிய காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் மற்றும் அவரது எழுத்து வாசிக்கும் பழக்கம் பற்றிய பெருமிதம்.
            நிதானமாய் நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இலக்கியத்தை விட வேறு வெளிப்பாடு என்ன? என டைரி எழுதும் செந்திலுக்கு சிநேகாவையும் (படமிட்ட சுவரொட்டியும்) பிடிக்கிறது. சிறை வாழ்வில் 14-15 மணிநேரம் படித்த காஸ்ட்ரோவையும் பிடிக்கிறது. இயற்கை வேளாண்மையைக் குறித்து வைக்குமளவுக்கு இயற்கை ஈடுபாடுள்ள செந்தில் இரண்டு தின விடுமுறையெடுக்க உறவினைச் சாகடித்து மதுரையில் குறும்பட விழா பார்த்து வரத்தான் வேண்டியிருக்கிறது கொட்டடி வாழ்வுக்கு.
            "படைப்பு என்பது மனித வாழ்வின் இருட்டு மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. இயற்கையின் வெளிப்பாடும் படைப்பாகிறது. அழகின் பொதுவான அம்சம் இயற்கையின் பதிவுகளில் இருப்பது போல உலகின் நீட்சியைப் படைப்பென்ற புள்ளியில் குவிந்து வைக்கும் வாசிப்பு வாழ்க்கையை ஊடுருவிச் செல்ல இப்போதைக்கு உதவுகிறது."
            என்கிறது நாவலின் மூன்றாவது பாகம். நாவல் தரும் தொழில்நகரம் சார்ந்த பெருவெளியில் ரங்கநாதன், மல்லிகா, ஷமீம், செந்தில், அந்தோணிராஜ் எல்லோரும் திருப்பூர் என்ற நிலைக்களத்திலிருந்து வெளியேறி சூழலெனும் பெருவட்டத்துள்ளிலிருந்து கேட்கிறார்கள் சில ஊரறிந்த உண்மைகளை,
            "உங்களைப் போன்ற நிறுவனங்களைக் கவர...
            நாங்கள் மலைகளைத் தரைமட்டமாக்கினோம்.
           
அடர்ந்த காடுகளை மொட்டையடித்தோம்
            விளைநிலங்களைத் தரிசுகளாக்கினோம்
            நதிகளின் வழியையே மாற்றினோம்
            நகரங்களைக் கூட இடமாற்றம் செய்தோம்...
           
உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் இங்குவந்து
            தொழில் செய்ய வசதியாக இருக்கட்டும் என்று..."

            -பிலிப்பைன்ஸ் அரசு ஃபார்சூன் பத்திரிகையில் கொடுத்த விளம்பரம் நமது வளர்ந்துவரும் தொழில் நகரங்களுக்குப் பொருந்தாதா?
            நிலம், நீர், காற்று என இயற்கையைப் பங்குபோட்டு, அனுபவிக்கும் தொழிற்சாலைகள் தமது செயல்பாடுகளினால் ஏதாவது மாசு ஏற்பட்டால் தடுத்தாட்கொள்ள என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டன? வளர்ச்சியில் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதும் சில நூறு  பேருக்கு வேலைவாய்ப்பும் பங்குகளாகுமா? நிலத்தடி நீருக்கு,நொய்யல், அமராவதி போன்ற நதிகளுக்கு வளர்ச்சித் திட்டத்தில் என்னென்ன காப்புகள் தந்திருக்கிறோம்.
      வேலை தருவதாகச் சொன்ன நிறுவனங்கள், வளர்ச்சி பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் சிறு நகரங்களில் வேலைதேடும் கிராமத்து மனிதர்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.
      அமெரிக்க ஐக்கிய நாடுகள், சில ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளிடம் இந்தியாவின் சில ஊர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றிற்குச் செல்ல வேண்டாமென்று எச்சரித்து அனுப்புகின்றனர். போபால், பத்தஞ்சேறு, கல்பாக்கம், வேலூர், கடலூர் என்ற இப்பட்டியலில் சமீப காலமாக திருப்பூரும் இடம் பெற்றுள்ளதாக 'கிரீன்பீஸ்' அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
            இவ்வேளையில், சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை நாவல் நவீனமயமாக்கலில் கிராமத்து மனிதர்கள் எப்படி இயந்திர கதியாக்கப்பட்டு சிதைவுகளூடே புதிய வாழ்க்கையை பரிதவிப்புடன் கடத்துகிறார்கள்; தொழிற்சங்க வரலாற்றுடன் படிக்கும் பழக்கத்துடன் இருக்கும் மனிதர்களின் இயங்கியல், வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் இளைஞர்கள் என்பதாக எழுதப்படாத கடிதங்களாக எழுதப்பட்ட நாட்குறிப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
            பகிர்ந்து கொள்வதன் மூலம் இறுக்கம் தளர்த்தி தேநீர் இடைவேளையில் இளைப்பாறிக் கொள்ளலாம்; மீண்டுமொரு போராட்டக் களத்தில் இந்த வாழ்வு பெருமூச்செடுத்து இரைதேட விரைகிறது.
புத்துமண்நாவல்
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------
குளத்துமீனாகவிரும்புமாபாத்திரத்துமீன்?