சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 26 டிசம்பர், 2009

கொஞ்சம் மண்ணும் ,சூரியனும்

தமிழ் திரைப்பட உலகத்தை அரசியல் வாரிசுகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.தெலுங்கு திரைப்பட உலகத்தில் திரைப்பட வாரிசுகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.நாகேஸ்வராவின் மகன் நாகார்ஜுனனுக்கு 50 வயதிற்கு மேலாகிறது இன்னும் ஏக்சன் ஹீரோவாக விளங்குகிறார். நாகார்ஜுனனின் மகன் நாக் சைத்தன்யா இன்றைய இளம் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர்.

(அமலா நாகார்ஜுனனின் மகன் இன்னும் 10 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாவார்)


சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் , தேர்தல்கள் திருப்தியாக இல்லை அவருக்கு.சமீபத்திய Greater Hyderabad தேர௎0��் உரிமை மறுக்கப்பட்ட வாழ்க்கையின் துயரங்களை அவர்கள் வெறுமனே கடலிடம் தான் முறையிட்டுக் கொள்கிறார்கள்.

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஈரம் "சிறுகதை"

கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணர்ந்திருந்தான்.

செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத் திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும்: "முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"

அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்.

அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு சீக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.

அணை நிரம்பி விட்டது. வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளைத் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்ணீரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்க்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.

கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்ணீர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தடதடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அணைக்கட்டும், சுற்றியுள்ள நிலமும் சாயம் பூத்து விட்டன. குடிப்பதற்கு லாயக்கற்றுப் போய்விட்டபோது நாற்பது கி.மீ.க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்ணீரை ஏற்றி வரும் தண்ணீர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்ணீர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.

ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினோதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளைக் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் கொள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.

"பறக்கிற டைனோசர் இருக்கா?”

" இருந்திருக்கும். இல்லீன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா ". அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்ணீரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித் தண்ணீரின் சுவையை விட மினரல் கேன் தண்ணீரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின்போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சலடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கலவை அவனுக்குப் பிடித்திருந்தது. "நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.

தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது. இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.

வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைகளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிறபோது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம். ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.

புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும், நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது.

வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெட்ரோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.

மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும். தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கலாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் தட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்தபோது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.

* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் இருந்து வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.

சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி: "ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பித்தீர்கள்"

ரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிறபோது ராட்சத பூச்சியின் நகங்களைச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.

"படத்தில் ராட்சத மனிதர்களையெல்லாம் செத்த எலிகளைத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். "என்ன எதிர்பார்க்கிறீர்கள். எனது ராட்சதப் பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலாத்காரம் செய்ய வேண்டுமா" சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வசீகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஓர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் காட்சியளித்தது.

"நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம்." கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது. மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அது அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.

"சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே" சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்.

" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம்". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.

"தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும்." கலைந்து போவதில் சீரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொரக் கன்னத்தைத் தடவினாள். பூச்சி கிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது.

"சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே". இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியினைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "பெர்லின் போயிருந்தபோது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.

வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத் திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.

- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)

புதன், 2 டிசம்பர், 2009

பிங்கி ஸ்மைல்

குறும்படங்கள் :2



பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.

உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..

பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.

இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.




subrabharathi@gmail.com

திங்கள், 23 நவம்பர், 2009

குறு குறு குறும்படங்கள்

குறுகுறு குறும்படங்கள்
=====================

1. Texture of Soul ( Direction : Deepath Gera )
--------------------------------------------------------------------

தொழு நோய் பற்றிய படம். ஒரு வகுப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ம் 2ம் எவ்வளவு என்று கேட்கிறார். மாணவர்கள் 4 என்கிறார்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையை மேலே நீட்டி “ 0 “ என்கிறான். அவனின் கைகளில் விரல்கள் இல்லை.


2. Stair case ( Direction : George Mangalath Thomas )

முதிய பெண்ணொருத்தி கதவை பூட்டி விட்டு மாடியிலிருந்து கீழ் இறங்குகிறாள். இறங்க சிரமப்படுகிறாள். தரைப்பகுதிக்கு வந்த பின் மேலே பார்க்கிறாள். மீண்டும் படியேறுகிறாள். இறங்கியதை விட ஏறுவதற்கு வெகு சிரமப்படுகிறாள். வெகுவாக சிரமப்படுகிறாள். மாடிக்குச் சென்று கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறாள். பேன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அணைப்பதற்காக ஸ்விட்சை பார்த்து, ஆப் செய்கிறாள். பேன் நிற்கிறது. மிகுந்த சிரமத்துடன் மீண்டும் படிகளில் இறங்குகிறாள்.


3. மலைகளை.... ( இயக்கம் : ராஜா சந்திரசேகர் )

” மலைகளை வரைகிறவன் ஏறிக் கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே” என்ற கவிதைவரிகளுக்கான ஓவிய சித்திரம் இது. இதையடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மூதாட்டி என்ற கவிதையின் ஒளி வெளிப்பாடும் மிகவும் உருக்கமானது.


4. மரம்.. மரம் அறிய ஆவல் ( இயக்கம்: தி. சின்ராஜ்)

ஒரு நிமிடப்படம் இது. மரங்கள் வெட்டப்படுவதன் வலியை மலையின் இயற்கை அழகு மூலமும், மரத்தை வெட்டி கோடாரிக்கு கைப்பிடியாவதும், அதுவும் மரம் வெட்டப் பயன்படுவதும், குருவிகளின் கதறலாய் மரம் பற்றிய வாசகமும் கொண்ட படம்.

கொஞ்சம் மண்ணும், கொஞ்சம் சூரியனும்




குறும்படங்கள்: 1

15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் கபீரை முன் வைத்து அயோத்தி ராமனின் "போராளி"த்தனத்தை அலசுவதற்கு "கபீர் காடா பஜார் மெய்ன்" என்ற படம் உருவாகக்கப்ப்ட்டிருக்கிறது. பிராமணன் பெரியவனா, வேதம் பெரிதா, மனிதத்துவம் பெரிதா என்ற கேள்வியை, ராமன் அயோத்தி பிரச்சினையை முன் வைத்து யோசித்தவர் போல்"நன்றாய் இருப்பவை ஒன்றே" என்கிறார் கபீர். ஆனந்த் பட்வர்த்தனைப் போல் அயோத்திப் பிரச்சினையை அலசுவதற்கு இந்தப்படம் உதவியது என்றாலும் , ராமனை முன் வைத்து கபீரினுள் சென்று நோக்குவதற்குமான உபாயமாக இருக்கிறது . கபீரைப்பற்றிய பல தொன்மங்கள் உள்ளன.

1.கபீர் முஸ்லீம் நெசவாளி. ஆனால் பிரார்த்தனைகள், சடங்குகளில் நம்பிக்கையில்லாததால் முஸ்லீம்கள் அவரி நிராகரிக்ககிறார்கள். கபீர் என்ற சொல்லுக்கு "அல்லாஹ்" என்ற பொருளுமுண்டு.

2. கபீர் இந்து. மூஸ்லீமால் வளர்க்கப்பட்டவர்.

3. தாமரை மலரில் பிறந்தவர். சாதாரண மனிதரல்ல.அவதாரபுருசர்.

4. விஸ்ணுவின் அவதாரம்

5. ஒரு சூபி, நாட்டுப்புறக்கலைஞன்

இந்த வெவ்வேறு கோணங்கள் பற்றிய பார்வைகளை பலர் முன் வைத்திருக்கிறார்கள். அந்த அவதானிப்பபுகளில் அவரவர் பக்கமிருந்து சான்றுகளை அந்தந்த தரப்பினர் முன் வைக்கிறார்கள். மரத்தின் வேர்களை அறிய முடியாதது போல கபீரின் மூலத்தையும் அறிய முடியாமலிருக்கிறது. சாதாரண மனிதராக இருந்து அதி அற்புத பிறவியாக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் சப்னம் வீரமணி கபீரின் கவிதைகளைப் பாடும் கவிஞர்களையும், பாடகர்களையும் தேடிச் சென்று பேட்டி கண்டிருக்கிறார். கபீரை ஆதர்ச மூச்சாகக் கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். இந்தத் தேடலை இந்தியாவில் மட்டுமல்ல பாக்கிஸ்தானுக்கும் சப்னம்வீரமணி நீட்டித்திருக்கிறார்.

நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கமும், பாடும் முறைகளும் கபீருக்குள் இருப்பதைக் கண்டறிந்து நாட்டுப்புறப்பாடகர்கள், அவரைக் கொண்டாடுகிறார்கள். சூபி கவிஞர்களும் , பாடகர்களும் நாங்கள் அவரை உள்வாங்கிக் கொண்டதைப் போல யாரும் உள்வாங்கி தெளிவு பெற்று விட முடியாது என்கிறார்கள். ஒரு கவிஞன் என்ற அளவில் சாதாரண மக்களின் மனதில் இவ்வளவு ஆழப்பதிந்திருப்பதைப் பார்க்கும் போது இந்த அளவு தென்னிந்தியாவில் யாராவது மக்களின் மனதில் ஆழத்திற்கு சென்றிருப்பார்களா என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. கபீர் என்னும் கவிஞன் அதிர்ஷ்டசாலி என்று தோன்றுகிறது. ராமன் பற்றி கபீர் சொன்ன மாயாவாதங்களை இப்படத்தில் ராமனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசும் மக்கள் தங்களைத் திரும்பிப் பார்த்ததுக்கொள்ள இப்படம் ஏதுவாகலாம்.

குறிப்புகள்:

1. எனது ‘சாயத்திரை’ நாவலை ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி மொழிபெயர்த்திருக்கிறார். கன்னடத்தில் தமிழ் செல்வி ‘ பண்ணத்திரா’ என்ற தலைப்பிலும், மலையாளத்தில் ஸ்டேன்லி ‘ சாயம் புரண்ட திர’ என்ற தலைப்புகளிலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீனாட்சி பூரி ‘ ரங்ரங்கிலி சாதர் மெஹெலி’ என்று தலைப்பிட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்டபோது கபீரை வடஇந்தியர்கள் நன்கறிவார்கள். சாதாரணமக்களுக்கும் பரிச்சயமானவர். அவர் ஒரு நெசவாளி. நெசவு, சாயத்தோடு சம்பந்தம் கொண்டது என்பதால் இத்தலைப்பினை கபீரின் கவிதைகளில் இருந்து எடுத்தேன் என்றார். சுற்றுச்சூழலை மையமாக வைத்துத் தலைப்பிட்டால் சட்டென்று விளங்காமல் போய்விடும்.

2. கபீரை நாடகமாக்குகிற ஒரு நாடகாசிரியர்.: கபீர் பற்றின மூலம் சர்ச்சசைக்குரியதே. கபீருக்கு எந்த வகையில் தாடி வைப்பது, எப்படி தொப்பி வைப்பது, எந்த வகை உடைகளை அணிவிப்பது என்பது ஒவ்வொருமுறையும் சர்ச்சசைக்குறியதாகிறது. நானும் என் மனநிலை தோன்றுவதற்கேற்ப தாடி வைக்கிறேன்,தொப்பி, உடைகளை வடிவமைக்கிறேன். சர்ச்சையும் தீராது. கபீர் இன்றைக்கும் சர்ச்சைக்குறிய கவி புருசர்தான்.

3. ‘சப்னம்’ வீரமணியின் இன்னொரு விவரணப்படம் ‘ கோல் சுந்தர் ஹை’ கபீரின் பாடல்களை மேடைகளில் பாடுபவரான குமாரகவுரவ்வை முன் வைத்து கபீரைப்பற்றின ஒரு மீள் பார்வையை இதில் வெளிப்படடுத்துகிறார். குமார் 1947ல் பிறந்தவர். மிகவும் இள வயதிலேயே பாடகராகப் பரிணமித்தவர். 23 வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார். பாடுவதற்குத் தடையிருந்தது.1952ல் அதிலிருந்து மீண்டு, மீண்டும் கச்சேரிகள் செய்கிறார். கபீரை முமுமையாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியவர் என இதில் இடம்பெற்றிருக்கிற பல்வேறு பேட்டிகளில் சிலாகரிக்கப்படுகிறார். சுபாமுக்தல், ராம்பிராசாத், திபாங்கே போன்றோரின் விளக்கமானப் பேட்டிகளும் கபீர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட இடங்களும், குமாரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இதில் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன. "ஒருவன் செத்தால் தூக்கம் சில நாளைக்குக் கூட வரும். ஞானவான் செத்தால் அவர் கூடவே இருப்பார். கபீர் ஞானவான்" என்கிறார் ஒரு நாட்டுப்புறப்பாடகர்.

subrabharathi@gmail.com

வியாழன், 12 நவம்பர், 2009

திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்

==திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
=================================

* டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில்
* கட்டணம் ரூ 1,700/ மட்டும்
* சிறப்பு பயிற்சியாளர்கள்:

இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் ( உதய கீதம் ) அ, நந்தினி ( திரு திரு துறு துறு )
எழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், சுப்ரபாரதிமணியன்
ஒளிப்ப‌திவாள‌ர் தாமு, ப‌ட‌த்தொகுப்பாள‌ர் உத‌ய‌ச‌ங்க‌ர், இசைய‌மைப்பாள‌ர் சுரேஸ் தேவ்
ப‌திவுக்கு: VRP Academy of Arts, 1503, ஞான‌கிரி சாலை, காம‌ராஜ‌புர‌ம் கால‌னி, சிவ‌காசி 626 189 கைபேசி: 99524 24292, manohar_vrp@yahoo.com
===========================================================

திருப்பூர் அரிமா விருதுகள்
===========================

* அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்)
* அரிமா சக்தி விருது ( கடந்த 2 ஆண்டுகளில் வந்த பெண் எழுத்தாளர்களுக்கானப்
நூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் )
* சென்றாண்டு பரிசு பெற்றோர்:

அரிமா குறும்பட விருது :
1. கார்த்திக் சோமசுந்தரம் , சென்னை( நானும் என் விக்கியும் )
2. பாலு மணிவண்ணன், சென்னை ( அம்மாவும், மம்மியும் )
3. ஜோதிகுமார் , திருப்பூர் ( வறுமையின் கனவு )
4. வி.ஜெகதீஸ்வரன், தேனி ( தொடர்பு எல்லைக்கு வெளியே )
5. தாண்டவக்கோன், திருப்பூர் ( இப்படிக்கு பேராண்டி )
6.எஸ். ராஜகுமாரன், சென்னை ( 21 இ, சுடலைமாடன் தெ
7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)
8. விஜயகுமார், சேலம் ( குப்பை)
9.மணிமேகலை நாகலிங்கம்,சென்னை( த்தூ)
10. நா. செல்வன், நெய்வேலி ( இருட்டறை வெளிச்சங்கள் )

சிறப்புப் பரிசுகள்:
1. து.சோ.பிரபாகர், திருப்பூர் ( தக்காளி )
2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம் ( மரம், மரம் அறிய ஆவல் )
3. நம்பி, அவிநாசி ( Stop child trafficking )
* அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை
* அரிமா நாடக விருது : சி.எச். ஜெயராவ், சென்னை

அரிமா சக்தி விருது
===================

1. அர‌ங்க‌ ம‌ல்லிகா, சென்னை ( நீர்கிழிக்கும் மீன், ‍க‌விதைக‌ள்)
2. ச‌.விஜ‌ய‌ல‌ட்சுமி, சென்னை ( பெருவெளிப்பெண், ‍க‌விதைக‌ள்)
3. மு.ஜீவா, கோவை ( பின்ந‌வீன‌த்துவ‌மும், பெண்ணிய‌ செய‌ல்பாடுக‌ளும்)
4.மித்ரா, சித‌ம்ப‌ர‌ம் ( ஜ‌ப்பானிய‌ த‌மிழ் ஹைக்கூக்க‌ள்‍,க‌ட்டுரைக‌ள்)
5.ச‌க்தி ஜோதி, திண்டுக்க‌ல் ( நில‌ம்புகும் சொற்கள்,‍க‌விதைக‌ள்)
6.ர‌த்திகா, திருச்சி (தேய்பிறையின் முத‌ல் நாளிலிருந்து க‌விதைக‌ள்)
7.ச‌க்தி அருளான‌ந்த‌ம், சேல‌ம் (பறவைகள் புறக்கணித்த நகரம் ‍‍,‍கவிதைகள்)
சிற‌ப்புப் ப‌ரிசுக‌ள்
==============
1.ச‌ந்திர‌வ‌த‌னா, ஜெர்ம‌னி ( ம‌ன‌ஓசை, சிறுகதைகள்)
2.ஜெயந்தி சங்க‌ர், சிங்க‌ப்பூர் ( ம‌ன‌ப்பிரிகை, நாவ‌ல்)
3.நா.ச‌ண்முக‌வ‌டிவு, கோவை(வான்விய‌ல் சாஸ்திர‌ம்)
4.மு.ச‌.பூங்குழ‌லி, ப‌ழ‌னி (எரிம‌லைப்பூக்க‌ள், கட்டுரைக‌ள்)

அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி:
========================

ம‌த்திய‌ அரிமா ச‌ங்க‌ம், 39/1 ஸ்டேட் பேங்க் கால‌னி,
காந்திந‌க‌ர், திருப்பூர் 641 603.
தொலைபேசி: 0421 645188, 09344690640,09443559215

===============================================================

திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்

திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்
==========================================
1. சிட்டுக்குருவிகளைத் தொலைத்த மனிதர்களின் கதை: ( கோவை சதாசிவம் )‌

சிட்டுக்குருவிகளின் வகைகள், அறிவியல் பெயர், அவற்றின் சுபாவம் இவற்றோடு அவற்றின் இருப்பு குறைந்து வருவதைப் பற்றி சொல்லும் படம். அவற்றின் அழிவுக்குக் காரணமான விசயங்களையே ஆராய்கிறது. 16 நிமிட குறும்படத்தில் அவசரம் துரத்தும் தார் சாலைகளில் குருவிகளைப் பற்றின அக்கறையைச் சொல்லும் படம்


2. வறுமையின் கனவு : ( ஜோதிகுமார்)

ஜோதிகுமாரின் இரண்டாவது குறும்படம் இது. வட்டிக் கொடுமையைச் சித்திகரிக்கிறது. வட்டி வாங்குபனின் க‌ழிவிரக்கம், வட்டி கொடுப்பவனின் அதிராம் இவற்றினூடே தென்படும் மனித முகங்களை ஒருங்கே இணைத்துள்ளார். சமூக அவலம் என்ற வகையில் அதை முன்னிருத்துவதில் நிறை பெறுகிறது.எஸ்.ஏ பாலகிருஸ்ணன், நாகராஜன் போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
3. தூரம் அதிகமில்லை ( ராகுல் நக்டா)

பள்ளிச் சிறுவன் மனதில் ஏற்படும் எண்ண மாறுபாட்டையும் அதை அவன் கல்வியினூடே களைந்து கொள்வதையும் குறிக்கிறது. மாணவர்களைப் பற்றிய ஒரு கல்லூரி மாணவனின் படம்.

4. த‌க்காளி : ( து சோ பிர‌பாக‌ர் )

ம‌டிந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் அதன் வேராய் இருக்கும் தொழிலாள‌ர்களையும் த‌ட்டி எழுப்பும் சிறு முய‌ற்சி என்கிறார் பிரபாகர். தக்காளி என்ற விளை பொருளை முன் வைத்து விவசாயிகளின் நிலையை எடுத்துக் கூறுகிறது. பின்ன‌ணி உரையாடல் மூலம் கதை போல் நகர்த்திச் செல்வது நல்ல முயற்சி .

5. சும‌ங்க‌லி : ( ர‌விக்குமார்/சுப்ர‌பார‌திம‌ணிய‌ன் )

நவீனக் கொத்தடிமைத்தனமாய் இன்றைக்கு பஞ்சாலை தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலை வாங்கும் திட்டமும், அது சார்ந்த விமர்சனமும் இந்தக் குறும்படத்தில் பதிவாகியிருக்கிறது.கவிஞர் சுபமுகியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது

சனி, 7 நவம்பர், 2009

சாயக்கழிவு

இந்த இடம்
தடை செய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்துவிடும் போங்களேன்
இந்த இடம்
நதியும், சாயக்கழிவும், ஒன்று சேரும்
இடம்
இதற்கப்புறம் நதி
சாயக்கழிவுகளின் சங்கமம்தான்
பிறர் வருகைக்கென்று
இந்த இடம் தடைசெய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்து விட்டுப் போங்களேன்


சுப்ரபாரதிமணியன்

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்



ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் " இரு நகரங்களின் கதை " என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.



உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ர‌ஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரண‌மான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன‌. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.


பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.



கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.

சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் என‌வரவேற்ற ஆவணங்கள் இருந்தன.


மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு " We are pigs, we need Stalin " என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .


துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.


இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இல‌க்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.




=சுப்ரபாரதிமணியன்



( thinnai.com) 

திங்கள், 2 நவம்பர், 2009

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
====================================================


க‌விஞ‌ர் சிற்பி பால‌சுப்ர‌ம‌ணியனின் தேர்ந்தேடுக்க‌ப்ப‌ட்ட‌க் க‌விதைக‌ளின் மொழிபெய‌ர்ப்பு ஆங்கில‌ நூலாக‌ ' SIRPI POEMS : A JOURNEY ' வெளிவ‌ந்துள்ள‌து. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார். " ஓடும் நதி " கவிதைத் தொகுதிக்காகவும் ( 20030), அக்னிசாட்சி மலையாள நாவல் மொழிபெயர்ப்புப் பணிக்காகவும். சாகித்திய அகாதமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது உள்ளார். ‌டாக்ட‌ர் கே எஸ் சுப்ர‌ம‌ணிய‌ன் மொழிபெய‌ர்த்திருக்கிறார்.அக்க‌விதைகள் 1968லிருந்து 2005 வ‌ரை சிற்பியால் எழுதப்ப‌ட்டவற்றில் சில ஆகும். ( ரூ 100, 136 ப‌க்க‌ங்க‌ள்: வெளியீடு: கோல‌ம், 106( 50 ), அழ‌க‌ப்பா குடியிருப்பு, பொள்ளாச்சி 641 001.) டாக்ட‌ர் கேஎஸ் எஸ் இதுவரை 6 நாவ‌ல்க‌ள், 4 குறுநாவ‌ல் தொகுப்புக‌ள், மூன்று த‌மிழ் க‌விதை‌த் தொகுப்புக‌ள் ஆகிய‌வ‌ற்றை மொழிபெய‌ர்ப்பில் வெளியிட்டுள்ளார். அவ‌ரின் நானு க‌ட்டுரைத் தொகுப்புக‌ள் வெளிவ‌ந்துள்ள‌ன‌.

டாக்ட‌ர் கே எஸ் சுப்ர‌ம‌ணிய‌ன் சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு பற்றி கூறுகிறார்: Sirpi a major poet in the modern era of Tamil Literature. His reputation as a poet is not merely based on the many awards which have come his way e.g. the Sahitya Akademi Award. The quality and range of his poetic creativity , his significant contribution to the genere of Tamil New Poetry spanning about four decades; his immersion in modern Tamil literature , which being deeeply rooted in the rich and ancient Tamil poetic tradition; and a rare capacity to combine in himself depth of scholarship with creative sensitivity-these attributes account for his position in the modern Tamil literary field. I consider it a pleasant privilege to produce a book of translation of selected poems of this respected poet, and a dear friend.


Sirpi scales the peaks of his creative outpouring in his award winning collection " Oru Gramaththu Nadhi " . "The river of a village " revisiting his
formative years in is native village. This is a delectable string of charming vignettes of lyrical nostaligia. The poet is also facinated and overwhemlmed by the 'vishwaroopa' of the universe , and the awesome power and fury of nature' and can conjure up a stunning vision of the sun being trashed into the bowels of distant space, plunging the earth into an open ended epoch of unrelieved Darkness. These pen pictures are riveting and find a prominent place in this volume.




ஒரு க‌விதை மொழிபெய‌ர்ப்பில்:
THE BODY THE MIND
===================
He
Slowly sinking
into quicksand.
Frightened eyes
Saw Knees disappearing
Struggling hands
Buried
Sand covered the chest.
Sand
Creeping up the neck
Lo, In his eyes
Rapture bloomed.
At some distance
A young shepherdes
Sans blouse.
( Udalum Ullamum : 2005)

சனி, 17 அக்டோபர், 2009

சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு

சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
======================================================


சாகித்திய அகாதமி சார்பில் சென்னையில் தமிழ், கன்னட எழுத்தாளர்கள், ஓவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,.சாகித்திய அக்காதமியின் செயலாளர் அக்ரஹார கிருஸ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தும் போது வள்ளுவர், சர்வஜ்னா சிலைகள் திறப்பு முதல் ரஜினிகாந்த் வரையிலான தொடர்புகளைக் குறிபிட்டார்.கவிஞர் சிற்பி சமணமதம் பற்றிய வரலாற்றையும், கொங்கு மண்டலத்தில் சமணம் ஆட்சி செய்த
வரலாற்றையும் முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார். உடுமலை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களில் இருக்கும் சமண நினைவுச் சின்னங்களைப் ப்ற்றி அவை தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் பதிவுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
திரைப்பட கலை இய்க்குனர் தோட்டத்தாரணி தனது ஆரம்ப கால திரைப்பட முயற்சிகளில் கன்னடத்திரைப்ப‌டங்கள்குறிப்பிடத்தக்கதாக இருந்ததைக் குறிப்பிட்டார்.

கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் இந்திரன், மனுஸ்யபுத்திரன், நா முத்துகுமார் , மதுமிதா, லீனா மணிமேகலை ( தமிழ் ), வைதேகி, பிரதிபாநந்தகுமார், சி கே ரவீந்திர குமார், பி சந்திரிகா ( கன்னடம் ) ஆகியோர் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வாசித்தனர்.

திரைப்பட இயக்குனர் ஞான ராசசேகரன் தாய் மொழி அக்கறை மனித வாழ்வில் எப்படி முக்கியத்துவம் கொண்டது என்பதை இந்திய, உலக சம்பவங்களுடன் விளக்கினார். கர்னாடகத்தின் சிவானந்த ஹெக்டே குழுவினரின் யக்சகானா நிகழ்வும், ஹரிகிருஸ்ணனின் சேலம் தெருக்கூத்துப் பட்டறையின் பாஞ்சாலி சபதமும் இடம்பெற்றன. ‌


இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்செல்வி, எஸ் நடராஜ புடலு, மம்தாசாகர் கன்னடத்திலும், மலர்விழி, இறையடியான் ஆகியோர் தமிழிலும் திருவள்ளுவர் , சர்வஜ்னா ஆகியோர் பற்றின அறிமுகங்களான கட்டுரைகளை வாசித்தனர்.

: " எனது உலகம் , என‌து ஓவியம் " என்ற தலைப்பில் ஓவியர்களின் படைப்பாக்க முறை பற்றின பேச்சுகள் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தன‌, ஓவியர்கள் வாசுதேவ், ஹரிதாஸ், அல்போன்சோ அருள் தாஸ், சாந்தாமணி, கோபிநாத், குல்கர்னி, மகேந்திரன், ரூபா கிருஸ்ணா, ஜாக்கோப் ஜெப்ஹாராஜ், விவேக் ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

A dialogue with Painting, The scuptural Energy என்ற இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன.இயக்குனர் : இந்திரன் . இந்திரனின் பன்முக ஆளுமையில் இபடங்களின் அறிமுகத் தன்மை பற்றி ராம. பழனியப்பன் விரிவாகப் பேசினார்.

ராமகுருநாதனின் உரை கன்னட தமிழ் எழுத்தாளர்களுக்கான உரையாடல் நவீன இலக்கியத்தளத்திலும்,திருவள்ளுவர், சர்வஜ்னா இருவரின் படைப்புகளிலும் எவ்வாறு இருந்த்து என்பது பற்றி விளக்கமானதாக இருந்தது.பி எம் பெல்லியப்பா நிறைவு நிகழ்ச்சிக்குதலைமை தாங்கினார். எனது நிறைவுரை திருவள்ளுவர், சர்வஜ்னா இருவரின் ப்டைபுகளை முன் வைத்து இடம் பெயர்வு, அக‌தி வாழ்வு, உலகமயமாக்கல் , பாலியல், உடலரசியல் உட்பட பல விசயங்களைப் பற்றி பேச இரண்டு நாள் கருத்தரங்கம் இருந்த‌தைப் பற்றின மையமாக இருந்த‌து .

மேலும் 1. பாவண்ணன் தொகுத்து கனவு வெளியிட்ட நவீன கன்னடக்கவிதை சிறப்பிதழின் அம்சங்களாக நவீன தன்மையுடன் மரபு ரீதியான விசயங்களும் , வாய் மொழி இலக்கியமும், நாட்டார் மர‌பும் இணைந்திருந்ததை நினையூட்டினேன்.

2.வாசந்தி வெளியிட்ட இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் தாய் மொழியைக் கன்னடமாகக் கொண்டு தமிழில் எழுதி வரும் எழுத்தாளன் என்ற பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது குறித்தான சர்ச்சை .

3.எனது சாய்த்திரை நாவல் சமீபத்தில் " பண்ணத்திர " என்ற தலைப்பில் தமிழ் செல்வி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நவயுக பதிப்பகம், பெங்களூருவில் இருந்து வெளிவந்திருப்பதையும், கன்னடம் படிக்க இயலாத நிலையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வுணர்ச்சி பற்றியும்.

யாளி அமைப்பின் பூஜா சர்மா நன்றி உரை வழங்கினார்.யாளி அமைப்பின்
முக்கிய நிர்வாகியான கவிஞர் இந்திரனின் அக்கறை, தீவிரம் இரண்டு நாள் நிகழ்ச்சியின் தேர்ச்சியில் காண நேர்ந்தது.

= சுப்ரபாரதிமணியன்

புதன், 14 அக்டோபர், 2009

முனைவர் ப க பொன்னுசாமி யின் நாவல் "படுகளம்'

முனைவர் ப க பொன்னுசாமி யின் நாவல் "படுகளம்'
===================================================


முன்னாள் துணைவேந்தர் ப க பொன்னுசாமியின் புதிய நாவல் "படுகளம்" நூல் பற்றிய அறிமுகக் கூட்டம் உடுமலை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மருத்துவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.நாவலினை சுப்ரபாரதிமணியன், கிருஸ்ணராஜ், பள்ளபாளையம் ஆறுமுகம் ஆகியோர் விமர்சித்துப் பேசினர். ( " "படுகளம் " ' நாவல் மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு, விலை ரூ300 )

ப‌ க‌ பொன்னுசாமியின் " நூற்றாண்டுத் தமிழ் " நூலை முன் வைத்து எழுதப்பட்ட கட்டுரையை மோகன செல்வி வாசித்தார்.


சுப்ரபாரதிமணியனின் " ஆழம் " சிறுகதைத் தொகுதியை ப க பொன்னுசாமி வெளியிட மடத்துக்குளம் பஞ்சலிங்கம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ( ஆழம் சிறுகதைத் தொகுதி, அறிவு பதிப்பகம் வெளியீடு விலை ரூ 65 )



ப க பொன்னுசாமி ஏற்புரை நிகழ்த்தினார். " கொங்கு மண்ணின் ஒரு பகுதியான உடுமலை மக்களின் கிராம வாழ்க்கையை முப்பதாண்டு கால அளவில் இதில் முன் வைத்துள்ளேன். என் கிராம மனிதர்களின் மனித நேயம், நற்குணங்கள், விவசாயம், கரும்பு நடல் உட்பட பல விசயங்கள் நாவலில் தளமாகி உள்ளன. ப்டுகளம் என்பது கவுண்டர் ஜாதியில் நடக்கும் ஒரு சடங்கு என்றாலும் , இன்றைக்கு உலகமே சமூக, ஜாதீய பிரச்சினைகளால் படுகளமாகி போராட்டமாய் விளங்குவதை சித்தரித்துள்ளேன். எனது முந்தின ஆறு நூல்களும் அறிவியல் நூல்கள். அறிவியல் வளரும். ஆனால் இலக்கியம் வாழும் என்பதால் நம் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பதிவு செயவதற்காக இந்த நாவலை எழுதினேன். எனது அடுத்த நாவல் இந்த நாவலில் நாம் சந்திக்கிற மனிதர்களின் அடுத்தத் தலைமுறைகளைப் பற்றியதாக இருக்கும். ஆங்கிலத்திலும் அதை ஒரே சமயத்தில் வெளியிடுவேன். "

மஞ்சளாதேவி, சுப்ரமணிய சிவா, மருத்துவர் ஜனனி உட்பட பலர் பேசினர் . கனவு இலக்கிய வட்டம் இந்த கூட்டத்தை நடத்தியது.



" படுகளம் " நாவல் பற்றின எனது கட்டுரையை " தீராநதி " ஜூலை இதழில் வாசியுங்கள் .

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சமநிலையை குலைக்கும் சமன்பாடுகள்


கோடை தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருடம் போல எப்போதும் இல்லை. இந்தக் கொடுமையை எப்படி சகித்துக் கொள்வது? எவ்வளவு மழையென்றாலும் சகித்துக் கொள்ளலாம். எவ்வளவு பனி என்றாலும் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் இந்த வெயிலின் கொடுமையை மட்டும் தாங்க முடியாது என்ற புலம்பல் கேட்பதுண்டு. சென்றாண்டின் கோடையில் நண்பர் ஒருவர் தனது சிறு மகிழ்வுந்துவின் ஓட்டுனரை என் கண் முன்னால் வேலை நீக்கம் செய்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த ஓட்டுனர் வீதிகளில் சென்று கொண்டிருக்கும்போது அழுக்கானவர்களை, வீதிகளில் நிற்கிற மனநோயாளிகளைக் கண்டால் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கி, கும்பிடுவார். தீர்க்கமாய்ப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார். பக்கத்தில் கடைகள் ஏதாவது தென்பட்டால் ஓரிரு வாழைப் பழங்களை வாங்கி பிரசாதத்தைத் தருவது போலவோ, குருவிற்கு தட்சணை தரும் பாவனையிலோ அதைத் தருவார். அவர்களை ‘சித்தர்கள்’, ‘ஞானி’ என்பார். அவர் ‘சித்தரை’ தினந்தோறும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். மகிழ்வுந்துவின் சொந்தக்காரரான நண்பருக்கு மனநோயாளிகள் என்றாலே அலர்ஜி. பார்த்து பயப்படுவார். அவர்கள் பார்வையில் படாதவாறு ஓடி ஒளிவார். ஓட்டுனரின் ‘சித்த தரிசனம்’ அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அவரை வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த ஓட்டுனர் அவருடன் இருந்தவரை எவ்வித விபத்தும் நடந்ததில்லை. ஆனால் வேறு ஓட்டுனர்கள் அவரின் ஊர்தியை உபயோகிக்கும்போது விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அந்த ஓட்டுனரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில் அவருக்கு நிறைய சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஓட்டுனரைப் போல மனநோயாளிகளை சித்தர்கள் என்று 'கணித்து' கொண்டாடுபவர்கள் உண்டு. அதே சமயம் அவர்களின் அழுக்கான உடல், பதற்றம், நிலையில்லாமல் இருத்தல், பிறரைத் தாக்குதல், வீட்டுப் பொருட்களை துவம்சமாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் அவர்களை நிரந்தர வியாதியஸ்தர்களாகக் கண்டு பயப்படுகிறவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

வீட்டில் அவ்வகை நோயாளிகளைப் பாதுகாத்துப் பேணி வருகையில் உண்டாகும் மனப்பதற்றத்திற்கு அளவேயில்லை என்று சொல்லலாம். யார் வேண்டுமானாலும் நோயாளியின் நோய்த் தன்மையை முன் வைத்துக் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். தப்பித்துவிட முடியாது. வேறு எந்த நபரின் குடும்பச் சூழலிலும், அந்தரங்கத்திலும் யாரும் தலையிட்டு எந்தச் சிறு கேள்வியையும் கேட்டுவிட முடியாது. ஆனால் மனநோயாளி பற்றி எழுப்பப்படும் எவ்வகைக் கேள்விக்கும் ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டியிருக்கும். பதில் சொல்லாத போது அந்த நோய்க்கான காரணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தலைவர் மீது சுலபமாக சுமத்தப்பட்டுவிடும்.

என்னிடம் அவ்வகைக் கேள்விகள் குடும்ப உறவுகள், நண்பர்கள், தெருவில் வருவோர் போவோர் உட்பட பலரால் கேட்கப் பட்டு நான் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்த நோயின் மூலம் என்ன என்ற கேள்வி சாதாரணமாய் எல்லோராலும் வைக்கப்படுவதுண்டு. “எப்பிடி வந்தது”. அவர்களின் குடும்பத்தில் வேறு யாருக்கோ இருந்திருக்கலாம் என்ற மரபியல் சார்ந்து காரணம் சொல்லப்படுவதை யாரும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டதில்லை. அப்படியென்றால் அவர்களின் குடும்பத்தில் மற்றவர்களுக்கு ஏன் அது வரவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததில்லை. அடுத்த கட்டமாய் மூளையிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். மூளை திரவத்துள் மிதக்கிறது. தண்ணீரில் வெண்ணையைப் போட்டால் மிதப்பது போல. அந்த திரவம் வற்றிவிட்டாலோ, திரவம் சுரக்கும் சுரபியில் கோளாறு என்றாலோ இவ்வகைத் தடுமாற்றமும் கோளாறும் வருவதுண்டு. அதனால்தான் கிராமங்களில் கோபமும், எரிச்சலுமாய் அலைகிறவர்களைக் கண்டு “மூளைத் தண்ணி வத்திப் போச்சா” என்று சாதாரணமாய்க் கேட்கப்படுவதுண்டு. இன்சுலின் சுரக்காத போது அது ஏற்படுத்தும் தொல்லைகளைப் பட்டியலிட்டுவிட்டு அதைச் சுரக்க வைப்பதற்காக ஊசியும் மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுவது போல மூளையின் சுரப்பி செயல்பாடுகளுக்காக ஊசி, மாத்திரைகள் மனநல மருத்துவர்களிடம் பெற வேண்டியிருக்கிறது என்று சொல்வேன். மூட்லே திரவம் வத்திப்போனா மூட்டு வீங்கி நடக்க முடியாதே, அது மாதிரி என்றும்.

அந்த ஊசிகளும், மாத்திரைகளும் அவர்களைத் தொடர்ந்து தூங்க வைத்துக் கொண்டேயிருக்கும். அவித்த உணவுப்பண்டம் போல கிடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தது ஐந்து மாத்திரைகளாவது இருக்கும். பல சமயங்களில் முந்தின வேளையில் சாப்பிட்ட மாத்திரையின் வீர்யம் இன்னும் குறையாத நிலையில் அடுத்த வேளை மாத்திரையைச் சாப்பிட கண்களைத் திறக்க முடியாதபடி கண் இமைகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைமை மோசமாகிற போது தரப்படும் மின் அதிர்வு அதிர்ச்சி முறை இன்னும் பார்க்க வேதனைப்படுத்தும். இரண்டு சுற்று, மூன்று சுற்று மின் அதிர்வு சிகிச்சைக்குப் பிறகுகூட சற்றும் தெளிவு வந்திருக்காது. இன்னும் ஓரிரு சுற்று மின் அதிர்வு சிகிச்சைக்குப் பின்னரே சற்று தெளிவு கிடைக்கும். “என்ன டாக்டர் எப்பப் பாத்தாலும் இப்பிடியே தூங்க வேண்டியிருக்கு?”

டாக்டர் : “நீங்களாவது தூங்குங்கம்மா. நாங்க பேசண்ட்டுகளை தினமும் ராத்திரி பதினோரு, பனிரண்டு மணி வரைக்கும் பாக்க வேண்டியிருக்கு, தூங்கக்கூட நேரம் கெடைக்கறதில்லை.” - மனநல தனியார் மருத்துவமனைகள் இரவிலும் நிரம்பி வழிகின்றன. அதில் ஒரு மருத்துவர் சொன்னது இது. அவர் ஒரு மனநல விடுதி ஆரம்பித்தார். இருக்கும் மனநல விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை, சிகிச்சைமுறை சரியில்லை என்று குற்றம் சாட்டினார். அவரிடம் சேர்க்கைக்காக அணுகியபோது அவர் சொன்னார் : “ஒரு லட்சம் ரூபாய் திருப்பித் தர முடியாத பணம் எனக்கட்ட வேண்டும். No refundable deposit. அப்புறம் மாதம் ஆறாயிரம். “தொகை அதிகமாய் இருப்பதாய்ச் சொன்னால் வரும் பதில் : “வீட்ல வச்சு பாக்கறப்போ எவ்வளவு சிரமப்படறீங்க. தெரியுமில்லே”. மனநல மருத்துவம் பற்றி பத்திரிகை நடத்தும் ஒரு மனநல மருத்துவர் முதியோர் இல்லம் நடத்துகிறார். அவரிடம் மனநல விடுதி ஏன் அவர் தொடங்கவில்லை என்று கேட்டு வைத்தேன். “முதியோர்னா நூறு பேரை கவனிக்க ஒரு ஆளு போதும். மனநோயாளிகள்னா ஒரு ஆளைப் பாக்க நூறு பேர் வேணும். சிவாஜி பட டைலாக் மாதிரி இருக்கில்ல...”

நோயாளிகளின் செயல்கள் குடும்பச் சூழலில் பெருத்த பதற்றத்தை உண்டாக்கிவிடும். Half way Home என்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டு பயிற்சிகள் தரப்பட்டாலும் (வீட்டில் இருக்கும்போது அவர்கள் மனச்சோர்வு இல்லாமல் வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம், முறைகள், ஓய்வு நேரத்தைக் கழிக்கும் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி தொடர்ந்து சொல்லித்தரப்பட்டாலும்) அவர்கள் வீடுகளில் இருக்கும்போது சுற்றியுள்ளவர்களின் பேச்சு, நடவடிக்கைகளாலும் அவர்கள் சமநிலையில் இருக்க முடியாமல் போய்விடுகிறது. அப்படி அவர்கள் தனித்திருந்தாலும் தொலைக்காட்சி தரும் வன்முறை, பாலியல் சார்ந்த காட்சிகள் அவர்களை வெகுவாக சமநிலையிலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும். (இன்றைக்கு விளிம்பு நிலை மாந்தர்களாக அவர்கள் பட்டியல் போடப்படுவதற்கு இதுதான் காரணமோ. பின் நவீனத்துவக் கூறுகளைக் கொண்டவர்களாக அவர்களின் செயல்பாடும் நிலைகளும் மாறிப் போய்விடுகின்றன. அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்கிறவர்களாகிறார்கள்.) அதனால்தான் என்னவோ பின்நவீனத்துவம் கொண்டாடும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளுக்குள் அவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனரோ என்னவோ. சிறு தெய்வ வழிபாட்டு விதிகளிலுள்ள மந்திரித்துக் கட்டுதல், கெடாவெட்டுதல், பூஜை புனஸ்காரங்கள், மாவில் பாவை செய்து ஊசி குத்துதல், கோயில் கிணற்று நீரில் குளித்தல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைகளிலோ, விடுதிகளிலோ தங்க வைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்ட பின்பு ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ளும் போது நோயாளிக்கு நோய்க் கூறுகளை உண்டாக்கும் சமூகச் சூழலுக்குள் அவர்கள் மீண்டும் மீண்டும் தள்ளப்படுவதுகூட ஒருவகை வன்முறையோ, அதிகாரமோ என்று படுகிறது. செய்வினை காரணமாக இது வந்து சேர்ந்துவிட்டது என்று நம்புகிற சதவிகிதமே அதிகமாக இருக்கிறது. ஓஷோவின் சீடர் ஒருவர்; பல வருடங்களில் அவரின் கம்யூனில் வாழ்ந்தவர், தியானமும், யோகமும் பயிற்சி செய்கிறவர், ஓரளவு இயற்கை உணவு உண்பவர்; இந்தச் செய்வினையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். எந்தப் பகுத்தறிவு, விஞ் ஞானக் கருத்துகளையும் இதன் பொருட்டு ஏற்றுக் கொள்வதில்லை. அவர் இதை மூளை சம்பந்தமான நோயல்ல, செய்வினையினால் வந்தது என்று வாதாடுவார். அவர் குடியிருந்த இடத்தை காலி செய்யச் சொன்னார்கள். அவர் மறுத்த அடுத்த நாள் அவரது இடதுகால் இயங்க மறுத்தது. நடக்க முடியவில்லை. இது அந்த வீட்டுக்காரனின் சூனியம் வைக்கத் தெரிந்த சகோதரியின் செய்வினை என்று திடமாக நம்பினார். செய்வினைக்கு சிகிச்சை பெற மறுத்து மாதக்கணக்கில் அப்படியே இருந்தார். படித்தவர்களுக்கே இது ‘செய்வினை’ வியாதி என்ற ‘பெரும் நம்பிக்கை’ இருக்கிறது.

வியாதி வந்தவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துருதுருத்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்க்கும் மருத்துவரும் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டும் என்று கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிரசவம் என்று வந்துவிட்டால் சிசேரியனுக்கு பெண்களை உடனே தயார்படுத்துவது போல, இவ்வகை நோயாளிகளின் பரபரப்பைப் பார்க்கிறபோது மருத்துவர்களும் “ஏதாவது செய்ய வேண்டும்” என்று சிசேரியன் வகையில் 'மின்அதிர்வு சிகிச்சைக்கு' போய்விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்து கூட இருக்கிறவர்கள் வெகுவாகக் கலக்கமடைந்து விடுவார்கள். இந்தக் கலக்கத்தைப் பார்த்து பல மருத்துவர்களுக்குக் குழப்பம் வந்துவிடும். பல சமயங்களில் “நீங்கதானே பேஷண்ட்” என்று என்னிடம் கேட்டு விடுவார்கள். தலையசைத்து மறுத்தால் நம்பமாட்டார்கள். நின்று நிதானித்து பேசுவதைக் கவனித்து விட்டு “நீ பேஷண்ட் இல்லை” என்று ஒப்புதல் தந்து விலக்கி விடுவார்கள். (“நீயும் சீக்கிரம் பேஷண்ட் ஆகப் போகிறவன்தா” என்ற கேலிப் பார்வையுடன் பார்ப்பது போல இருக்கும்). நண்பர் ஒருவர் மருத்துவமனைக்கு கூடப் போனவரை ‘பேஷண்ட்’ என்று ‘பேஷண்ட்டே’ அடையாளம் காட்டிவிட, அவர் ‘பேஷண்ட்டுகளுள்’ அடைக்கப்பட்டார். அது ஒரு தனிக்கதை.

அதிகமாக எழுதுவதே நோய்த்தன்மையினால் என்பார்கள். இந்த மனச்சோர்வு வியாதி படைப்பிலக்கியத்திற்கும் வழி வகுப்பதை, பல இலக்கியவாதிகளின் பெயர்களை முன் வைத்துச் சொல்லிவிடலாம். படைப்பிலக்கியம், எழுத்து இவற்றுக்கு இந்த மூளை நோய் எப்படி மூலமாகிறது என்று உளவியலாளர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

மீண்டும் கோடைக் காலத்திற்குத் திரும்பலாம். கோடை தகிக்கிறது. இந்தக் கோடைக்காலத்தில் பெரும்பாலும் மனநல மருத்துவமனைகள் நிரம்பி வழியும். ஆசியக் கண்டத்தின் சுட்டெரிக்கும் வெயில் இப்பகுதியில் இந்த நோய்க்கான முக்கியமான காரணமாய் சொல்லப்படுவதுண்டு. பௌர்ணமி, அமாவாசை மற்றும் அவற்றின் முன் பின் தினங்களில் அவர்களின் பரபரப்பும், படும் அவஸ்தைகளும் சொல்லிமாளாது. ஏதாவது விபரீதமாய் நடந்தே தீரும். எதையாவது உடைத்து, யாரையாவது காயப்படுத்தி, அல்லது அவர்களே காயப்படுத்திக் கொள்வர். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் அவர்களின் பரபரப்பு செயல்பாடுகளுக்கான நியாயங்களை உளவியலாளர்கள் வெயில் காலத்தை முன் வைத்தும் விளக்குவது நல்லது. நான் பல மருத்துவர்களிடம் இதை முன் வைத்திருக்கிறேன். “ரொம்ப பிஸி, இதுக்கெல்லா பதில் சொல்ற மாதிரி நேரம் இல்லை. அப்புறம் பார்க்கலாம்”. ஆனால் அவர்களே நோயாளிக்கான ‘கவுன்சிலிங்கிற்கு’ பணம் கட்டி சீட்டு பெற்று நோயாளிகளை உட்காரவைத்து கேள்விகள் கேட்டு பதில் பெற்று காசு சம்பாதிக்க நேரம் ஒதுக்குவதுண்டு. ஆல்பர்ட் காம்யுவின் ‘அந்நியனில்’ வரும் பிரதான பாத்திரம் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தைச் சொல்கிறபோது சுட்டெரிக்கும் வெயிலைக் குற்றம் சாட்டுவது ஞாபகம் வருகிறது. கோடையில் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.

மாரடைப்போ, தற்கொலையோ, வயதாகி இறத்தலோ என்று நிகழ்ந்து இந்தக் கொடுமையான கோடையில் இருந்து‘தப்பித்தவர்கள்’ குறித்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களுக்கான அஞ்சலியை சற்றே நிதானமாய் எவ்விதப் பரபரப்பும், துருதுருப்பும் இல்லாமல் செலுத்துவதில் பெருமூச்சு கிளம்புகிறது.


http://www.uyirmmai.com

தொலைந்து போனவர்கள்

சிங்கப்பூர் என்பதே மிகப்பெரிய பொருட்களின் விற்பனை சந்தை ‘ஷாப்பிங் சென்டராக’ இருக்கிறது. பத்துப் பெரிய ‘மால்களை’ ஒன்று சேர்த்து கொஞ்சம் குடியிருப்புகளையும், கொஞ்சம் மக்களையும் கொஞ்சம் அலுவலகங்களையும் கூட்டிச் சேர்த்த சந்தை அங்காடிதான் சிங்கப்பூர். ‘ஷாப்பிங் மால்’ என்பது சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த விஷயமாகிவிட்டது. பொருட்களை வாங்கச் செல்லும் இடமாக இருந்தது முன்பு. பின்னால் நாளின் வேலை நேரத்தைத் தவிர பெரும்பான்மையான நேரத்தை இங்கு பலர் கழிக்கிறார்கள். பொழுதுபோகிறது. குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து அவர்களை விடுவித்துக் கொள்ள மிகச் சிறந்த உபாயமாக இருக்கிறது. புகலிடமாகவும் இருக்கிறது.

இப்படி ஷாப்பிங் மாலில் அடைக்கலமாகிற மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படம் ‘Gone Shopping’. இவ்வாண்டில் வெளிவந்திருக்கும் ‘My Magic’ என்ற படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு முக்கியப் பரிசுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. அதில் வரும் குடிகார அப்பாவும், அவரது வளரும் பையனும் முக்கியமாக இடம் பெறுகிறார்கள். குடிகார அப்பா வளரும் பையனை ஒட்டி அவரது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடிவெடுப்பதை அந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது. ‘Gone Shopping’ ஒரு பெண் இயக்குனரின் முதன் முயற்சி என்ற வகையில் குறிப்பிடத்தக்க படமாகும்.

அறுபதுகளில் சிங்கப்பூரை மலாய், சீனப்படங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. 1965இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றபின் குறிப்பிடத்தக்கபடி படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. 1997இல் கேன்ஸ் திரைப்படவிழாவில் ‘12 Storeys’ படம் நுழைந்தபோது சிங்கப்பூர் படங்களுக்கான முதல் அங்கீகாரம் உலக அளவில் கிடைத்தது. 1999இல் எட்டுப் படங்கள் வெளிவந்தது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. 2005இல் அதிக அளவில் படங்கள் தயாரிக்கப்பட்டன. 2008இல் வெளிவந்த எரிக் கூஸின் ‘My Magic’ கொடுத்த வெற்றியும் உலக அளவிலான அங்கீகாரமும் சிங்கப்பூரின் தனித்தன்மையான படங்கள் பற்றி மும்மாதிரிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனா, மலாய், தமிழ் ஆகியவை ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. எனவே இம்மொழிகள் சார்ந்த மக்களின் கலாச்சார வாழ்க்கையின் கலவைப் பிரதிபலிப்பாக சிங்கப்பூர் திகழ்கிறது. பூர்வக்குடிகளான ஆட்சி மொழியைப் பேசும் மக்களூடே சீனா, இந்தியா, மலாய், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்தவர்களும், இடம் பெயர்ந்து வந்தவர்களுமாக சிங்கப்பூர் நிரம்பி வழிகிறது.

பலமாடிக் கட்டடங்கள் அவர்களுக்குப் புகலிடமாகிறது. மாடிக் கட்டடங்களில் அவர்களின் வாழ்க்கை விசித்திரமாகக் கூட அமைந்துவிடுகிறது. ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் ஒரே சமயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமூட்டக் கூடியதாகும். இந்திய வம்சாவளி குடும்ப பூப்பு நன்னீராட்டு விழாவோ, சீனக்குடும்பத்தினரின் சவ இறுதிச் சடங்கோ, மலாய் குடும்பத்தினரின் திருமணமோ ஒரே கட்டடத்தில்கூட சர்வ சாதாரணமாய் நிகழ்வதுண்டு. தென்னிந்திய உணவுப் பொருட்களையோ, வாழை இலைச் சாப்பாட்டையோ சுலபமாகப் பெறமுடியும். சிங்கப்பூரின் 40 சதவீத மக்கள் புத்தமதத்தைப் பின்பற்றுகிறவர்கள். தாவோயிசம், கன்பூசியனிசம், கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டவர்கள் 14 சதம் இருக்கிறார்கள். 7 சதவீதம் இந்திய இந்துவினர் உள்ளனர். 14 சதவீதம் எந்த மதத்தையும் சாராமல் தங்களை சுய சிந்தனையாளர்களாக அறிவித்துக் கொள்கிறார்கள். ஆனால் சுயசிந்தனை வெளிப்பாடுகளுக்கும், எதிர்க் குரல்களுக்கும் சிங்கப்பூர் ஜனநாயகம் என்றைக்கும் பெரியதாக கௌரவம் தந்ததில்லை என்று சொல்லப்படுவதுண்டு. ‘ஷாப்பிங் மால்’களுக்குச் செல்வது சாப்பிடுவது ஆகியவை அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்த விஷயங்கள். பெரும்பான்மையான மக்கள் வேலை நேரத்தைத் தவிர ஒரு பகுதி நேரத்தை இங்குதான் கழிக்கிறார்கள். ‘பல் மருத்துவரைப் பார்க்கக் கூட அங்குதான் செல்லவேண்டும்’ என்கிறார்கள். நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளங்கள் என்று விரிவான அளவில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக அவை இருக்கின்றன.

பெண் இயக்குனர் லி வின் வீ 23 வயதில் தன் முதல் குறும்படத்தை எடுத்திருக்கிறார். எழுத்தாளராயும் அவர் இருக்கிற காரணத்தால் திரைப்படத்துறையில் சுயாட்சியுடன் அவரால் இயங்க முடிகிறது. 2007இல் வெளிவந்த ‘Autograph book’ என்ற குறும்படம் அவரின் முக்கியமான முயற்சியாகக் கணிக்கப்படுகிறது. அவரின் முதல் திரைப்பட முயற்சியாக ‘Gone shopping’ மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

முஸ்தப்பா போன்ற மிகப் பெரிய ‘ஷாப்பிங் மால்கள்’ 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தூங்காத நகரத்தில் தூங்காத அங்காடிகள் அவை. அதில் அடைக்கலம் பெறும் மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது இப்படம். அவர்கள் தங்களின் மற்ற இறுக்கங்களிலிருந்து விடுபட அங்காடிக்குள் அடைக்கலமாகிறார்கள். 40 வயதுப் பெண் பெரிய செல்வந்தராக இருக்கிறார். வீட்டில் அவளின் தனிமை அவளைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. தனிமையிலிருந்து தப்புவதற்காக முஸ்தபாவிற்குள் வந்து எதையாவது வாங்கிக் கொண்டிருப்பாள். தினமும் வருகிறவள் என்ற வகையில் எல்லோர்க்கும் பரிச்சயமானவளாக இருப்பாள். தேவைப்பட்டதோ தேவைப்படாததோ வாங்கணும் என்று நினைப்பதையெல்லாம் வாங்கிக் கொண்டிருப்பாள். அவளின் பழைய காதலனைச் சந்திப்பவளுக்கு இங்கேயே இருந்து விடலாம் போலிருக்கிறது. ஆனால் அங்கு எப்போதுமாக இருந்துவிடமுடியாது. அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே அவளுக்குச் சித்திரவதையாக இருக்கிறது. உள்ளேயே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாள். உள்ளேயிருக்கும் எல்லோரும் பரிச்சயமானவர்கள் என்றாலும் அந்நியமாகவே உணர்கிறாள். பொருட்களை வாங்குவதில் உள்ள பொறாமை சிலரை தூரம் போக வைக்கிறது. சிலரை புன்னகையுடன் எதிர்கொள்கிறாள். அங்கேயே தூங்க வேண்டும் போலிருக்கிறது. தூங்குகிறாள். எதிர்ப்புக் குரலாய்க் கத்தவேண்டும் போலிருக்கிறது. கத்துகிறாள். அழுகிறாள். அங்கிருந்து அவளை வெளியேற்றச் செய்வதுகூட காவலாளிகளுக்குச் சிரமம் தருவதாகும். அங்கிருந்து வெளியேறுவது என்பது அவளுக்கு வேதனையாக இருக்கிறது. 8 வயது தமிழ் பெண் குழந்தையொன்று முஸ்தபாவிற்குள் வந்த பெற்றோரிடமிருந்து பிரிந்து விடுகிறது. அக்குழந்தை ரேணு காணாமல் போனவர்கள் பற்றி அறிவிப்பு தரும் இடத்தில் ஐக்கியமாகிறாள். ‘என்னை ஏன் விட்டுவிட்டுச் சென்றீர்கள்’ என்று மைக்கில் அறிவித்துக் கெஞ்சுகிறாள். பொம்மைகளுடன் விளையாடுகிறாள். காவலாளியின் மிரட்டலை எதிர்க்கிறாள். அங்கேயே தூங்கியும் போகிறாள். பெற்றோருக்கான அவளது அழைப்பு முஸ்தபாவிற்குள் அலைந்து திரிந்து கொண்டேயிருக்கிறது. இன்னொரு இளைஞன் 22 வயதுக்காரன் பிரதானமாகிறான். அவனின் நண்பனின் சகோதரியுடன் அங்கு பொழுதைக் கழிக்கிறான். நினைவுச் சின்னமான கத்தியொன்றை வாங்குகிறான். சிறு சிறு கும்பல்களுடன் சண்டையிடுகிறான். நண்பியைப் பிரிக்கும் முயற்சிகளை எதிர்க்கும் அவன் தினசரி காலைமுதல் இரவு வரை வேலைபார்க்கும் இயந்திரத் தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு முஸ்தபாவிற்குள் நுழைந்தவன். அவன் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற அழைப்பை நிராகரித்துவிட்டு அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறான். காவலாளியிடம் பிடிபட்டு கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறான்.

தாங்கள் அடைக்கலமாகியிருக்கும் இடம் தங்களுக்கு புகலிடமாக இருப்பதை மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. எங்களை இங்கேயே இப்படியே விட்டு விடுங்கள் என்று மனதுள் கதறுகிறார்கள்.

கிடைக்கிற நேரங்களையெல்லாம் பெரும் அங்காடிகளுக்குள் அலைந்து திரிந்து நூடில்சும், காபியும் சாப்பிட்டு பிரிய மனமில்லாமல் வெளியேறும் மக்களின் கூட்டங்களாய் அவை நிரம்பி வழிகின்றன. இத்தகைய பெரிய அங்காடிகள் இந்திய நகரங்களிலும் தற்போது காணக் கிடைக்கின்றன. அங்கும் இதேபோல் 40 வயது திருமணமான பெண்ணையோ, 8 வயது தொலைந்து போன சிறுமியையோ, 22 வயது அலுவலகம் பிடிக்காமல் அலைந்து கொண்டிருக்கும் இளைஞனையோ காணமுடியும்.

இதன் இயக்குனர் லி வின் வீயை பெரும் அங்காடிகள் பெரிய அளவில் பாதித்திருக்கின்றன. அவளின் பள்ளி சிங்கப்பூரின் மிக முக்கியமான சாலையான ஆர்கிட் சாலையில் இருந்திருக்கிறது. பள்ளி முடிந்தபின்பு அவளின் பொழுதுகள் ஆர்கிட் சாலையின் பெரிய அங்காடிகளுக்குள்தான் கழிந்திருக்கின்றன. வார இறுதி நாட்களிலும் பெரும்பான்மையான விடுமுறை நாட்களிலும் பெரிய அங்காடிகளில் அலைந்து திரிவதுதான் அவளின் பிடித்த விஷயமாகியிருக்கிறது. பெரும் அங்காடிகள் ஆசுவாசப் பட வைத்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தப் படம் என்கிறார்.

‘சிங்கப்பூருக்கு வாருங்கள்’

‘சிங்கப்பூரில் ஷாப்பிங் செய்யுங்கள்’

என்று வரவேற்புப் பலகைகள் எங்கும் வரவேற்கின்றன. ‘ஷாப்பிங்’ செய்வதற்காகவே மேல்தட்டினர் சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். இந்தியத் தமிழர்களுக்கும் மாரியம்மன் கோவிலும், ஷெராங் தெருவும்,தைப்பூசத் திருவிழாவும் போல பெரும் அங்காடிகளும் வெகுவாக ஆசுவாசப்படுத்துகின்றன. ‘முஸ்தப்பாக்கள்’ அவர்களை உள்ளிழுத்து நுகர்வுப் பொருட்களை பட்டியலிட்டு வாங்கும் இயந்திரங்களாக்கிவிட்டன. இந்த இயந்திரங்கள் மக்களுக்குள்இருந்து புன்னகை புரிந்து இருப்பை மறந்து தொலைந்துபோகிற மற்றும் அலைந்து திரிகிறவர்களின் குறியீடுகளை லி வின் வீ இப்படத்தில் முன்வைக்கிறார்.


http://www.uyirmmai.com

சாகித்திய அகாதமி: பெங்களூரில் " அபிவ்யக்தி "

சாகித்திய அகாதமி: பெங்களூரில் " அபிவ்யக்தி " ==============================================


பெங்களூரில் சாகித்திய அக்காதமி மொழிபெயர்ப்பு பரிசளிப்பு விழாவின் போது " அபிவ்யக்தி" நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.தமிழ் கதை வாசிப்பு நிகழ்ச்சியில் ‌
இந்திரனின் கதை பெரும் வரவேற்பைப் பெற்றது.Diary of husband என்ற அக்கதையில் வரும் ராஜலட்சுமிக்கு மற்றவர்களின் டைரிகளைப் படிப்பது தவறு என்று தெரிந்தாலும் அவற்றைப் படிப்பதில் சுவாரஸ்யம் கொண்டவள். அவளின் கண‌வன் டைரி அப்படித்தான் அவளுக்கு. அதில் இருக்கும் ஒரு பெண்ணின் படம் அவளுக்கு பல கற்பனைகளை தருகிறது. தூங்கமுடியாமல் அவஸ்தைப்படுகிறாள். டைரி கடலில் மிதந்து ஆச்சர்யப்படுத்துகிறது சத்தமாகப் படிக்கும் தஙக‌ மீன். சப்தமில்லாமல் படிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆண், பெண் பட்டாம்பூச்சிகள் வெவ்வேறு மணங்களுடன் மிதந்து ஆரவாரிக்கின்றன.பேன்டசி உலகில் தவிக்கிறாள் . கனவு கலையும் போது
" யாருக்காக அழுதாய் " என் கேட்கப்படுகிறது. சுவாரஸ்யமான கதை. இந்திரன் இதை தமிழில் பிரசுரிக்கலாம்.



சிற்பி பால‌சுப்ர‌ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளின் " பெல்ஜிய‌ம் க‌ண்ணாடி" உடைந்து போகிற‌ போது எழுப்பும் நினைவ‌லைக‌ள் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்துப‌வை. ச‌ல்மாவின் க‌விதை வ‌ழ‌க்க‌ம் போல் உட‌ல‌ர‌சிய‌ல் பேசிய‌ திரும்ப‌த் திரும்ப‌ வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதை.ப‌ரிசு பெற்ற‌ கொங்க‌னி நூல் திருக்குற‌ளை மொழிபெய‌ர்த்த‌ற்காக‌. த‌மிழ் நவீன‌ இல‌க்கிய‌ம் அவ‌ர்க‌ளை எட்டாத‌த‌ற்குக் கார‌ண‌ம் முறையான‌ ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ள் பெருமளவில் இல்லாத‌தே.சுவ‌ர்ண‌ஜிட் சாவியின் ப‌ஞ்சாபி கவிதை ஓவியத்தன்மை கொண்டிருந்த்து. கன்னடத்து கம்பாரின் நாட்டுப்புறப்பாடல் நவீனத்துவத்துடனும் இசையுடனும் சிறந்து விளங்கியது." மர நிழல் குளத்தில் விழுகிறது.மர வேர் நிழ்லின் வேரில் தொடங்கி..."
சனியாவின் மராத்திக் கவிதை சாதாரண விசயங்களுக்கெல்லாம் சண்டை போடும் தம்பதிகள் பற்றியது.வெகு சுவாரஸ்யாமானது.‌ வெவ்வேறு ப‌ரிமாண‌ங்களையும், அனுபவங்களையும் கொண்டதாக கதை, கவிதை வாசிப்புகள் இருந்தன.

செனனையில் ந‌டைபெற்ற‌ இரு சா. அ. நிக‌ழ்ச்சிக‌ள்:

1. " என‌னை செதுக்கிய‌ நூல்‌க‌ள் " உரை: ராஜேந்திர‌ன் ( துணைவேந்த‌ர், த‌ஞ்சைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் )

2.ப‌ன்மொழிப்புல‌வ‌ர் கா. அப்பாதுரையார் நூற்றாண்டு விழா

க‌ட்டுரையாள‌ர்க‌ள் : இராம‌ குருநாத‌ன், சிற்பி, அலெக்சாண்ட‌ர் ஜேசுதாச‌ன், இந்திர‌ன், அறிவுந‌ம்பி, செய‌தேவ‌ன் , மா ரா அர‌சு, இரா மோக‌ன், அந்ததோணி டேவிட்நாதன், மு முத்துவேல்
.================================

சாகித்திய அகாதமி

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில்
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
=========================================================
ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் " இரு நகரங்களின் கதை " என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.


உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ர‌ஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரண‌மான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன‌. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.

பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.


கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.
சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் என‌வரவேற்ற ஆவணங்கள் இருந்தன.

மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு " We are pigs, we need Stalin " என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .

துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.

இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இல‌க்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.



=சுப்ரபாரதிமணியன்

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

கவிதைச்சுழல் - 1 (30/08/2009)(செய்தி - பதியம் )



.



கவிதைச்சுழல் - 1 (30/08/2009)(செய்தி - பதியம் )





25 கவிஞர்கள் ஒன்று கூடினால் என்ன நடக்கும்,,,, ஆளுக்கொரு அரிவாளும. வெட்டும் குத்தும் (உபயம் டாஸ்மாக்) நடக்கும். 28 குழுக்களாகப்பிரிந்து - ஆளுக்கொரு பிரபல சிற்றிதழ்களில் பக்கம்பக்கமாக விணை, எதிர்விணை எழுதிக்குவிப்பார்கள். தொடர்ந்து ஏழெட்டு இதழ்கள் அவர்கள் எழுத- வாசகர்கள் அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு அதிபுத்திசாலிகளாக விமர்சனமெழுத..... அப்பப்பா...

இதெல்லாம் எதுமின்றி 25 கவிஞர்கள் ஒன்றுகூடி கவிதைகுறித்து விவாதம்செய்தது ஆரோக்கியமான நிகழ்வாக அமைந்தது.

பதியம் ஏற்பாடுசெய்திருந்த கவிதைச்சுழல் நிகழ்வு 30-08-09 ஞாயிறுமாலை 5மணிக்கு துவங்கி இரவு 8.30 மணிவரை தென்னம்பாளையம் பள்ளியில் நடைபெற்றது. பாரதிவாசன் தலைமையுரையில் - இலங்கைச்சூழல், எந்தவொரு நிகழ்விற்கும் மனமொப்பாததாலேயே - (இளவுவீட்டில் கொண்டாட்டமா என்கிற மனநிலையில்) - பதியம் எந்த நிகழ்வையும் ஒருங்கிணைக்கவில்லை. நீண்ட மௌனத்திற்குப்பின் - கவிதை குறித்து ஒரு நிகழ்வை ஏற்பாடுசெய்திருக்கிறோம். கவிதை வாசிப்பு. அதுகுறித்து விவாதம் என்கிற முறையில் நிகழ்ச்சி அமையும் - என்றார்.

முதல்அமர்விற்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்துப்பேசினார். இன்றைய கவிதைகளின் போக்கு, அதுகுறித்தான இப்படியான விவாதங்கள் வரவேற்க வேண்டியவை என்றார்.

தொடர்ந்து முதலாவதாக கவிதை வாசிக்க வந்த கே.பொன்னுச்சாமி, தான்கொண்டு வந்திருந்த கவிதைத்தாளின் நகலச்சுக்களை (விவாதிப்பதற்கு ஏதுவாக அனைத்துக்கவிஞர்களையும் தத்தமது கவிதைகளை 25 நகலச்சு(ஜெராக்ஸ்) எடுத்துவரக் கூறியிருந்தோம்) அனைவருக்கும் கொடுத்து - பின் கவிதை வாசிக்கத் தொடங்கினார், விடியுமா? என்கிற தலைப்பில் அவர் வாசித்த கவிதைக்கு - பரவலாக விமர்சிக்கப்பட்டது. தொழிற்சங்கவாதியான பொன்னுச்சாமி இலக்கிவாதியாகி கவிதைவாசித்தது - அவர் தன்னை - நான்முதலில் இலக்கியவாதி, பின்பு தான் தொழிற்சங்கவாதி என்று கூறியது ஆச்சர்யப்படவைத்தது.

தொடர்ந்து - இளஞாயிறு, தமிழவன், சுப்ரபாரதிமணியன், செங்கதிர், அ.கார்த்திகேயன், இளஞ்சேரல், செல்வக்குமார், தமிழ்முதல்வன், அருணாச்சலம், அனுப்பட்டி பிரகாஸ், வான்மதி வேலுச்சாமி, யாழ்மதி, செந்தில்முருகள், வைகை ஆறுமுகம், பாரதிவாசன், ஷெய்கிருஸ்ணன், சுரேஸ், சுரேஸ்வரன் உட்பட பலரும் கவிதை வாசித்து - ஒவ்வொருவர் கவிதைவாசித்து முடித்தவுடன் அந்த கவிதை விமர்சனத்தில் துவங்கி - பொதுவான கவிதைச்சுழல் வரை அலசப்பட்டன. கவிதைகளில் ஈழம் சார்ந்த கவிதைகளே கூடுதலாக வாசிக்கப்பட்டு - இன்றைய ஈழ நிலவரம், அதை அந்த கவிதை சொன்ன விதம் என்று விவாதம் நடைபெற்றன.

தமிழவனின் கவிதை தலித்தியம் சார்ந்து பேசியது. டி.என். ராஜ்குமார் கவிதை வீரியத்துடன் வெளிப்பட்டது கவிதை.

கவிதைவாசிப்பிற்குப்பின்னான நீண்ட மௌனமே கவிதை வெற்றியாக பாவிக்கபடவேண்டியது - என்றார், இளஞ்சேரல்.

கவிஞர் தமிழவனுக்கு தான் கொண்டு வந்திருந்த டி.என்.ராஷ்குமாரின் -கல்விளக்குகள்- கவிதைப்புத்தகம் பகிர்ந்தார் (கவிதை வாசிப்புக்கு வருகிற அனைவரையும் ஒரு கவிதைத்தொகுப்பு வாங்கிவர பணித்திருந்தோம். வருகிற அனைத்துக்கவிஞர்களும் அனைவருக்கும் புத்தகம் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காக. வாசிப்புத்தளத்தை விரிபடுத்துகிற சின்ன ஆவலில்)

அடுத்து - அனுப்பட்டி பிரகாஸ் தான் வாழ்ந்த கிராமம் - அதன் நினைவுகள் குறித்தான கவிதை வாசித்தார். மற்றும் கோவை இராஹவ வாகனம் தாக்குதல் வழக்கில் கைதி சிறையிலிருந்த போது எழுதப்பட்ட ஈழம் பற்றிய கவிதையும் வாசித்தார்.

செந்தில் முருகன் மரணம் குறித்தான தனது பதிவினை கவிதையாக்கியிருந்தார். இடம்பெயர்தல் குறித்த கவிதையினை பாரதிவாசனும், ஈழம் அதன் தொடர்ச்சியான தமிழ்த்தேசியம் குறித்து செங்கதிரும் கவிதை வாசித்தனர். பெண்ணியம் குறித்து செல்வக்குமாரும், ஈழம் குறித்து இந்திய இடதுசாரி களின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இளஞாயிறும், மதுமாலை தலைப்பில் கார்த்திகேயனும், துணுக்குக்கவிதைகளாய் ஜெய்கிருஷ்ணன், ஈழம் பற்றி வான்மதி வேலுச்சாமியும். ஈழ நிலைபாட்டில் மிப்பெரும் தவறிழைத்த கருணாநிதி விமர்சித்து - மற்றும் தமிழக அரசை விமர்சித்து சுரேஷூம் கவிதை வாசித்தனர்.

இரண்டாவது அமர்வாக சேலத்திலிருந்து அ.கார்த்திகேயனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இனிது இனிது கவிதைச் சிற்றிதழை முனைவர் இரா.இரமேஸ்குமார் அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மனம் நிறைவானவொரு கவிதை அமர்வாக அமைந்திருந்தது. தொடர்ந்து மாதாமாதம் இப்படியான கவிச்சுழல் அமர்வு நடத்தவேண்டும் என்கிற அனைத்துக்கவிஞர்களின் விருப்பத்துடன் - நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நிறைவுபெற்றது.

- வதனன்
(நன்றி பதியம்)

எழுத்துப் பெருவெளியில்...

எழுத்துப் பெருவெளியில்...
=========================

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 50 புத்தகங்களாவது திரைப்பட வடிவம் பெற்றுவிடுகின்றன. வெவ்வேறு நாடுகளின் பிராந்திய மொழிப் படங்கள் இந்தக் கணக்கில் வராது. படைப்புகள் திரைப்படமாவது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எழுத்தாளனின் கூர்மையான விவரிப்பும் அவதானமும் இன்னொரு வடிவத்தில் முற்றிலும் பிம்பங்களாக வெளிப்படுகின்றன. எழுத்தாளன் எத்தனை சதம் அதில் சொந்தம் கொண்டாடலாம் என்றிருந்தாலும் மூலமாக அவன் இருக்கிறான். இலக்கியப் படைப்புகளை வெகுஜனத்திரளில் கொண்டு போகவும், திரைப்படமாக ஆனது என்ற காரணத்திற்காகவே இலக்கியப் படைப்பு கவனிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. 13வது கேரளத் திரைப்படவிழா 2008ல் தென்பட்ட சில இலக்கியப் பிரதிகள் கவனத்திற்கு வந்தன.

ஷோஸ் சரமாகோ என்ற போர்ச்சுகல் நாவலாசிரியரின் 1995ல் வெளிவந்த நாவல் ஙிறீவீஸீபீஸீமீss என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. மூலமான நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1999ல் வெளிவந்தபின் பலர் அதைத் திரைப்படமாக்க முயன்றிருக்கின்றனர். சரமாகோ தன் நாவலில் பெயரில்லாத தேசமும், பெயரில்லாத மனிதர்களும் கொண்ட உலகத்தை திரைப்படத்தில் சுலபமாகச் சித்தரித்துவிட முடியாது என்று பல இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் நிராகரித்திருக்கிறார். சமீபத்திலேயே அவரது ஒத்துழைப்பால் திரைப்படமாகியிருக்கிறது.

மருத்துவர் ஒருவருக்கு காலையில் எழுந்ததும் கண்பார்வை குறைந்து விட்டது தெரிகிறது. முந்தின இரவு திடீரென கண்பார்வை இழந்த ஒருவருக்கு சிகிச்சையளித்திருக்கிறார். மருத்துவ மனையில் அவரைப்போலவே பலர் குவிகிறார்கள். இது பரவும் என்று தனியாக அடைக்கப்படு கிறார்கள். மருத்துவரின் மனைவியும் தனக்கும் கண் பார்வை போய்விட்டது என்று சொல்லி கூடவே தங்குகிறார். அவர்களுக்கு வார்டு 3 ஒதுக்கப்படுகிறது. திடீரென கண்பார்வை இழந்து போன உலகத்தை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. ஓய்வென்று ஒதுக்கவும் முடியவில்லை. சிறுசிறு தடுமாற்றங்கள் குழப்பங்களாகின்றன. தொடுகையும், வார்த்தைகளும் ஆறுதலானவை. உணவு பெரும் பிரச்னையாகிறது. தரப்படும் உணவு பங்கிடுவதில் சிக்கல்கள். மருத்துவரின் மனைவி ஒத்துழைக்கிறாள். அவர்களுக்குள் எழும் அதிகாரக்குரலால் ஒருவன் தலைவனாகிறான். அவன் எல்லோரையும் மிரட்டுகிறான். அவர்கள் அணிந்திருக்கும் விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துக் கொள்கிறார்கள். தாதாவை மருத்துவர் மனைவி கொலை செய்கிறாள். பாலியல் ரீதி யான ஆக்கிரமிப்புகள் முறைதவறி நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் கட்டுப்பாடில்லா மல் போகிறது. விபத்தும் ஏற்படுகிறது. நாலைந்து பேரை மீட்டு அவள் வெளியே வருகிறாள். உலகமே குருடர்களின் துயர நாடகமாகிவிட்டது. அந்த நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. உணவுப் பொருட்களுக்கான போராட்டம். அவள் வீட்டைக் கண்டுபிடித்து விடுகிறாள். இயல்பாகிறார்கள். அவர்களின் ஒருவனுக்கு கண் பார்வை தெரிய ஆரம்பிக்கிற நம்பிக்கையுடன் படம் முடிகிறது.

துயர உலகிற்குள் தள்ளப்படும் வேதனை படம் பார்ப்பவர்களையும் அழுத்திக்கொண்டே இருக்கிறது.பெர்னான்டோ டெய்ரிலீஸ் இயக்கி இருக்கிறார். கண் பார்வை இழந்தவர்கள் மற்றவர் கள் முன்னால் பார்க்கப்படும் அனுதாபப் பார்வையும், பார்வை இழந்து போனவர்களின் உலகமும் என்று இந்தப் படம் அமைந்திருக்கிறது. மருத்துவரின் மனைவி உலகம், அவளது கணவனுடனான உலகம், தட்டுப்படுபவர்களெல்லாம் அவளின் பராமரிப்புக்கு உள்ளாக வேண்டிய உலகம் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. பாரமாய் அழுத்தும் சமூக அவலங்களால் நிலையற்றுப் போகும் மனிதர்களின் குறியீடாய் பார்வை இழப்பு மூலம் படம் அமைகிறது.

Farewell Gulsary படம் சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐஸ்வாவ்வின் நாவலாகும். 1966இல் ரஷ்ய மொழியிலு:ம 1979ல் ஆங்கிலத்திலும் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. 1968லேயே சோவியத் நாட்டில் இது முதலில் படமாக்கப்பட்டிருக்கிறது. ககாகிஸ்தான் சோவியத்தின் ஒரு பகுதி யாக இருந்த காலத்தை இப்படம் சித்தரிக்கிறது. போர் வீரனானவனுக்கு கூட்டுப் பண் ணையில் கால்நடைகளைப் பராமரிக்கிற வேலை தரப்படுகிறது. குல்சாரி என்ற குதிரை அவனின் பிரிய மானது. அதனுடனான அவனின் பரிமாற்றங்கள் ஆத்மார்த்தமானவை. புதிய கட்சி தலைவர் அப் பிரிவிற்கு வரும்போது குல்சாரியை தந்துவிடக் கேட்கிறார். குல்சாரி முரண்டு பிடித்து போவதும்

அவனிடமே திரும்பி வருவதும் நிகழ்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கையன்று அவனை சீர்குலைக்கிறது. ஆடுகளை நிர்வகிக்கும் இன்னொரு கூட்டுப்பண்ணைக்கு மாற்றப்படுகிறான். மழைக்குத் தாங்காத அப்பண்ணைக் கட்டிடம் இடிந்து விழுந்து சிரமத்திற்குள்ளாகிறது. மனைவியும் முடமாகிறாள். சோசலிசத்தை அமைப்பதிலும், ஸ்டாலினிய நடவடிக்கைகளிலு:ம இருக்கும் சிக்கல்கள் அவனைத் துவளச் செய்கின்றன. பிரியமானத் தோழர்களின் மரணங்களும் அவனை சோர்வாக்குகின்றன. குல்சாரி மரணம் அடைவதோடு படம் நிறைவடைகிறது. கட்சி பற்றியும், ஸ்டாலினிய நடவடிக்கை பற்றியும் பல விமர்சனங்களை படம் உள்ளடக்கியிருக்கிறது. சிங்கிஸின் ஜமிலா நாவல் புகழ் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகள் பொன்வண்ணன் இயக்கிய படமொன்றில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு குதிரையை முன் வைத்து வாழ்க்கை மீதான தேசமும், கூட்டுப்பண்ணை அமைப்பு பற்றியும், சோசலிச கட்டுமானம் பற்றியுமான சித்திரத்தை இப்படம் கட்டமைக்கிறது.

ஆகாச கோபுரம் என்ற மலையாளத் திரைப்படம் ஹென்றி இப்சனின் படைப்பை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆல்பர்ட் சாம்சன் என்ற மத்திய வயது கட்டிடப் பொறியாளனின் கலை மீதான ஆர்வமும், பாலியல் வாழ்க்கையும் என்றமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட விழாவின் போட்டிப்பிரிவில் உலக இலக்கியப் படைப்பாளிகளிலிருந்து திரைப்படமாகும் வகையில் ஆண்டு தோறும் மலையாளத்திலிருந்து ஒரு படைப்பாவது காணக் கிடைப்பது ஆரோக்கியமானமதாகும். சென்றாண்டில் போட்டிப் பிரிவில் தென்பட்ட ஒரே கடல் சுனில் கங்கோபாத்யாயின் நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மம்முட்டி, ரம்யா கிருஷ்ணன், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் ஷியாம் பிரசாத் இயக்கியிருந்தார். பிரிதிவ்ராஜ் நடித்த தலப்பாவு என்ற படம் வர்கிஸ் என்ற புரட்சிக்காரன் என்கௌன்டரில் கொல்லப்படுவதை ராமச்சந்திரன் பிள்ளை விவரிப்பதாய் அமைந்திருப்பதாகும். இதன் மலையாள வடிவ நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்த் பாக்கிஸ்தானி என்ற பாக்கிஸ்தான் படம் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வெளிவந்த சில சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதன் தயாரிப் பாளர் பாக்கிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் மகள் ஜாவத் ஜப்பர் இதை இயக்கியிருக்கிறார். இந்திய வெகுஜன திரைப்படத்தின் வன்முறையும், பாலியல் விஷயங்களும் ததும்பி வழியும் பாக்கிஸ்தான் திரைப்படங்களின் மத்தியில் வெகு அபூர்வமாகவே நல்ல படங்கள் தென்படுகின்றன. 2003ல் வெளிவந்த காமோஷ் பாணி என்ற படத்திற்குப் பிறகு பாக்கிஸ்தான் படங்கள் எதுவும் கவனிப்புப் பெறவில்லை.

"Little Terrorrist" என்ற குறும்படமொன்று பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்குள் வந்துவிடுகிற ஒரு சிறுவனை இந்து குடும்பமொன்று காப்பாற்றி பராமரித்து வருவது பற்றியதாகும். ராம்சந்த் பாக்கிஸ்தானியில் 2002ல் எல்லையில் பதட்டம் இருந்த காலத்தில் தலித் சிறுவன் ஒருவன் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இந்திய எல்லைக் குள் நுழைந்துவிடுகிறான். அவனைத் தேடிக் கொண்டுவரும் அவன் அப்பாவும் எல்லையைத் தாண்டுவதால் இந்திய ராணுவத்தால் பிடிக்கப்பட்டு உளவாளிகளென சிறையில் அடைக்கப் படுகிறார்கள். சிறைமுகாம் அனுபவங்க்ள் சித்ரவதையாகவே அமைந்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள்.

சிறை முகாமில் பல்வேறு தேசத்தைச் சார்ந்த வர்கள் இருக்கிறார்கள். அழுதும் சிரித்தும் காலம் கழிப்பவர்கள். அதனுள்ளேயே தாதாவாகி மிளிர் கிறவர்கள் பலர். ஓரின பாலியலுக்குத் துண்டுபவர்கள். சிறுவனுக்கு கல்வி தரவரும் இளம் காவல் துறை பெண். விடுதலை என்று ஆனபின்பு டில்லி வரை சென்று திரும்புகிறவர்கள். சிறுவனின் தாய் நந்திதா தாஸ் இருவரையும் எதிர்பார்த்து ஏமாறுகிறாள். தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டு கூலியாக வாழ்க்கையைத் தொடர்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவன் விடுதலையாகி நந்திதாவைக் காண்கிறான். அவள் விவசாயக் கொத்தடிமையாக வாழ்க்கையை நடத்தி வந்தவள். இந்திய சிறை முகாமின் சித்ரவதை வெகு ஜாக்கிரதையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பாக்கிஸ்தான் சிறை முகாம்களில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பல்வேறு தேசத்தினரைப் பற்றிய விவரணப் படங்களும் வந்திருக்கின்றன. மத ரீதியான அடிப்படை வாதங்களைப் பற்றி பிரதானப்படுத்தாமல், எல்லையைக் கடந்துவிடும் அப்பாவிகளின் துயரத்தையும் அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் இது சித்தரிக்கிறது. மனித உரிமை மீறல்கள் பற்றின விடயங்களை முன்வைக்கிற அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க திரைப்பட உலகின் தந்தை என்று கணிக்கப்படுகிற பெர்ணான்டோ பிர்ரி A Very Old Man with Enormous Wings என்ற படத்தில் கிழவனாக பிரதானப் பாத்திரத்தில் நடித் திருக்கிறார். இது கார்சியா மார்கவஸின் குறுநாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மார்க்வெஸ் இப்படத்தின் திரைப்பட ஆக்கத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். பிடரல் காஸ்ட் ரோவின் நெருங்கிய நண்பரான பெர்ரியின் படங்களின் ரெட்ரோஸ்பெக்டிவ் கேரள திரைப்பட விழாவில் இடம் பெற்றது. இவர் 1960ல் எடுத்த Toss&Dime என்ற ஆவணப்படம் முதல் லத்தின் அமெரிக்க ஆவணப்படமாகும். சமூக விமர்சனமாகவும், அர்ஜன்டைனா மக்களின் வாழ்க்கையை முன்வைத்த ஆவணப்படமாகும் இது. பெர்ணான்டோ பிர்ரி எனது மகன் சேகுவேரா என்றொரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். சே பற்றிய அவரின் தந்தையின் நினைவலைகளாய் இது அமைந் திருக்கிறது.

சேவின் அர்ஜன்டைனா பிறப்பு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றியது, பிடரல் காஸ்ட்ரோ சந்திப்பு என்று விரிகிறது. A Very Old Man with Enormous Wings 1998ல் திரைப்படமாகி யுள்ளது. இது தமிழில் கூத்துப் பட்டறையினரால் நாடக வடிவமாகவும் நடிக்கப்பட்டுள்ளது. சிறகுகளைக் கொண்ட கிழவன் ஒருவன் புயல் நாளன்றில் கரீபியன் கடற்கரையில் ஓதுங்குகிறார். ஏழைக் குடும்பமொன்று கோழி அடைக்கும் இடத்தில் அடைக்கலம் தருகிறது. பலரின் பார்வைக்கு அவர் இலக்காகிறார். மரண தேவதை என்று அடையாயப்படுத்தப்படுகிறார். கூட்டம் சேர்கிறது, உள்ளூர் பாதிரியாருக்கு கூட்டம் பிடிப்பதில்லை. ரோமிற்கு எழுதின கடிதங்களைக் கொண்டுவந்து படித்து ஆவியை துரத்த முயல்கிறார். டாக்குவிசாட் போன்று பலரின் சிரிப்பிற்கும் உள்ளாகிறார். அவ்விடம் திருவிழா கோலமாகிறது. பணம் சம்பாதிக்கிறார்கள். சிதைந்துபோன சிறகுகளைப் புதுப் பித்துக் கொள்கிறார் கிழவர். இறகுகளைப் பிரித்தெடுத்துவிட்டு ஆசுவாசம் கொள்கிறார். தேவதை என்ற ரகசியம் மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகிறது. சிலந்திப் பெண் ஒருத்தி குழுவினருடன் வந்து அவருக்கு இணையாக பெரும் கூட்டத்தைச் சேர்க்கிறாள். கடல் கடவுளின் குறியீடாக கிழவரைப் பார்த்து ஆசுவாசம் கொள்ளும் கூட்டம் அவர் திரும்பவும் இறகுகளைப் படபடக்கவைத்து கிளம் பிப் போவதை வேடிக்கை பார்க்கிறது. அச்சூழலை மாற்றவந்த குறியீட்டு அம்சமாக வந்து மறைந்து போவதில் மாயயதார்த்தம் வெளிப்படுகிறது. ஸ்பானிய மொழிப்படம் இது காப்ரியஸ் மாக்க்கூசின் ஆறு படைப்புகள் இதுபோல் திரைப்படங்களாகியுள்ளன.

அடுத்து வரும் ஆண்டில் திரைப்படமாக உள்ள உலகின் தலைசிறந்த நூல்களின் பட்டியல் சற்றே ஆச்சரியப்படுத்துகிறது. வாசக வெளியை திரைப்பட பிம்பங்களாய் வெளிப்படுத்தும் முயற்சி யில் உலகமெங்கும் உள்ள திரைப்படத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 2009ன் ஆரம்பத்தில் டான் பிரௌனின் நாவல் தேவதைகளும் சாத்தான்களும் திரைப்பட வடிவத்தில் வெளிவர உள் ளது. டான் பிரௌனின் டாவின்சி கோடு மூன்றாண்டுகளுக்கு முன் திரைப்படமாக வெளிவந்தது. தேவதைகளும் சாத்தான்களும் நாவலில் இறந்து போகும் மருத்துவர் ஒருவரின் நெஞ்சில் இருக்கும் அடையாளம் ஒன்று அவரது மூதாதையர்கள் யார் என்ற கேள்விக்கும் தீவிரமான தேடுதலுக்கும் இட்டுச் செல்கிறது.


= சுப்ரபாரதிமணியன்



பூக்குட்டி: தாண்டவக்கோனின் புதிய‌ குறும்படம்

பூக்குட்டி: தாண்டவக்கோனின் புதிய‌ குறும்படம்
=============================================


யதார்த்த நிகழ்வுகளை திரைத் தொடர்பு மொழியில் நாடகீயமாக வெளிப்படுத்துவதில் இருக்கும் சுவாரஸ்யத்தின் பலத்தை திருப்பூர் தாண்டவக்கோனின் குறும்படங்களில் காண முடிவது ஒரு சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய " பூக்குட்டி" குறும்படத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகள் அப்படி நாடகீயமாகியிருக்கின்றன.


தாண்டவக்கோனின் முந்திய படமொன்றில் உலக உருண்டை பிளாஸ்டிக பையில் அடைபடும் படிமத்தை ஒரு செய்தியாய் வெளிப்படுத்தியிருந்தார்.இதில் உடல் உறுப்பு தானம் என்ற செய்தி உணர்ச்சிகரமான நாடகமாக வெளிப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான கலைஞர்கள் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

தாண்டவக்கோனின் பிற குறிப்பிடத்தக்க குறும்படங்கள் ( சற்றே நீளமானவை ) :
பூங்கா, பேராண்டி



"பூக்குட்டி "பற்றிய விரிவான விமர்சன‌த்திற்கு தில்லியிலிருந்து வரும் " வடக்கு வாசல் " இதழின் ஆகஸ்ட் இதழ் பாருங்கள் . ( தாண்டவக்கோன் =
திருப்பூர் . 9360254206 )

= சுப்ர‌பார‌திம‌ணிய‌ன்


பேராண்டி - குறும்படம்
======================

தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற "கை", குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய "பாலிபேக்" அவற்றிலும் காணமுடியும்.

"பூங்கா"வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. "இப்படிக்கு பேராண்டி" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)

குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.

தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.

இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் "நாடக நடிகர்களாகி" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தாபாட்டி வேணும்' என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது. இந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம் தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.

(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)

ஆவணப்பட இயக்குனர்: மைக்கல் மூர்

ஆவணப்பட இயக்குனர்: மைக்கல் மூர்
====================================

34 வது டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா 10 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கல்மூரின் " Capitalism, A Love story " என்ற ஆவணப்படம் குறிப்பிட்ட கவனம் பெற்றிருக்கிற‌து.

" நான் பொருளாதாரவாதிய‌ல்ல. மாற்றுப் பொருளாதாரத்திட்டத்தை தருவதற்கு நான் இல்லை, நான் ஒரு திரைப்பட கலைஞ‌ன்.நான் பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுக்கிறேன்.கார்ப்பரேட் முதலைகள் அவர்களின் பணத்தை மட்டும் நேசிப்பதில்லை. உங்களின் பணத்தையும் நேசிக்கிறார்கள். போதும் என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இல்லை." அமெரிக்காவின் பொருளாதாரநிலைகளை தொடர்ந்து விமர்சிக்கிறார்.


அவரின் " சிக்கோ ' ஆவணப்படம் பற்றி ' கனவு " 60 வது இதழில் ஒரு கட்டுரை எழுதிஉள்ளேன். அமெரிக்கா வலிமையான தேசம். பிச்சைக்காரர்கள் இல்லாத தேசெம் . செல்வம் கொழிக்கும் பூமியில் மருத்துவ வசதிக்குக் குறைவில்லை . அமெரிக்கர்கள் சுபிச்சமாக வாழ்கிறார்கள் என்ற வழக்கமான சாமான்ய கருத்துக்கள் பல ஆண்டுகளாக தகர்ந்து கொண்டிருக்கின்றன். மூரின் :" சிக்கோ" ஆவண‌ப்படம் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவ பாதுகாப்பு இன்சூரன்ஸ் பர்றிய உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது வெற்றிப்படங்களின் வசுல் தரத்தில் இந்த ஆவணப்படம் நல்ல வசூலை திரட்டியிருக்கும் அளவு அப்படத்தை மக்கள் பாரத்திருக்கிறார்க‌ள் . குடிமககளின் உடல்நல பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தராத அமெரிக்காவின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றின கேள்வியை மைக்கல் மூர் வெகு திடத்துடன் இப்படதி முன் வைத்திருக்கிறார்.


இக்கட்டுரையின் முழுமைக்கு கனவு 60ம் இதழ் படியுங்கள் ( 8./2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641 602 ., ஆண்டு சந்தா ரூ50 )

சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு

சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
================================================

இவ்வாண்டின் சாகித்திய அகாதமி பரிசு‍ =மொழிபெயர்ப்புக்காக = ஆனந்தகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.மலையாற்றூர் ராமகிருஸ்ணனின் " இயந்திரம் " நாவலினை அவர் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.அது பரிசு பெற்றிருக்கிறது.காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணிபுரிகிறார்.
அவரின் வெளிவந்திருக்கிற பிற நூல்கள்: குஞ்ஞுண்ணி கவிதைகள், கிருஸ்னையரின் இந்திய நீதித்துறை, NBT வெளியிட்ட விழிப்போடு இருப்போம்

பெங்களூரில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாதமியின் தலைவர் சுனில் கங்கோபாத்தியாய பரிசு வழங்கியிருக்கிறார். இவ்வாண்டில் பரிசு பெற்றவர்களில் மூவர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர்: ஏ வி சுப்ரமணியன் , சென்னை( சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு )., மீனாட்சி சிவராமன் பாலக்காடு(‌ இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு )

" இயந்திரம் " மொழிபெயர்ப்பு தனக்கு சவாலாக இருந்தது என்கிறார். மலையாற்றூர் ராமகிருஸ்ணன் IAS அதிகாரி என்பதாலும்,நிர்வாக அமைப்பு குறித்த களம் என்பதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், காவல்துறையினர் பலரைச் சந்தித்து பல நிர்வாக வார்த்தைகளின் சரியான அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டியிருந்தது." இயந்திரத்தில்" பிரிட்டிஸ் கால வார்த்தைகள் ஆங்கிலத்தில் அப்படியே பயன் படுத்தப்பட்டவற்றை முறையாக தமிழ் படுத்தியிருந்தேன்.நீதித்துறை, நிர்வாக வரலாறுகளையும், உளவியல் விசயங்களையும் இணையாகப் படிக்க வேண்டியிருந்தது. குங்குமம் இதழில் தொடராக நீண்டு வந்தது என்பதாலும், பல இடதுசாரி கருத்துக்களும், பாலியல் வர்ணனைகளும் நீக்கப்பட்டு தமிழ் பதிப்பில் வந்திருக்கிறது. சவாலான அனுபவமாக இருந்தது. மலையாற்றூர் ராமகிருஸ்ணனை அவர் உயிருடன் இருந்த போது சந்திக்க முயன்றதை பரிசு வாங்கிய போது நினைத்துக்கொண்டேன் என்கிறார்.



= சுப்ரபாரதிமணிய‌ன்

புதன், 23 செப்டம்பர், 2009

சாகித்திய அகாதமி : பாலா மறைவு

சாகித்திய அகாதமி : பாலா மறைவு
====================================

சாகித்திய அகாதமியின் மத்திய குழு உறுப்பினராகவும், சாகித்திய அகாதமி தமிழ் மாநில ஒருங்கிணைப்பு கன்வீனராகவும் செயலாற்றிய பாலா ( டாக்டர் பால‌ சந்திரன் )
22 09 09 அன்று உடல் நலமின்மையால் காலமடைந்தார்.

அவரின் பொறுப்பு காலத்தில் அதிக பட்சமான சா. அ கருத்தரங்குகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

" புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை"., சர்ரியலிசம், போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்கள். இன்னொரு மனிதர்கள் ( கவிதைகள் ), வித்தியாபதியின் காதல் கவிதைகள் ( மொழிபெயர்ப்பு ) அவரின் இன்னும் சில புத்தகங்கள் . ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு நிறைய செய்திருந்தாலும் சொற்பமானவைதான் புத்தகவடிவம் பெற்றுள்ளன. Stalin Plays and other essays என்ற ஆங்கில நூலை வெளியிட்டிருக்கிறார். சுவடு என்ற சிற்றிதழ் புதுக்கோட்டையிலிருந்து கொண்டு வந்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த பேச்சாளர்.அவரின் பூத உடல் ஞாயிறு அன்று புதுக்கோட்டை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

அஞ்சுவண்ணம் தெரு

அஞ்சுவண்ணம் தெரு=தோப்பில்மீரானின் நாவல்
===============================================

இஸ்லாம் சமூகம் பற்றிய யதார்த்தமான சித்தரிப்பை மனிதாபிமானம் ததும்ப தன் படைப்புகளில் கையாள்கிறவர் தோப்பில் முகமது மீரான். அவரின் துறைமுகம்,சாய்வு நாற்காலி, கடலோரத்து கிராமத்துக் கதை போன்ற நாவல்களுக்குப் பிறகு தற்போது வெளிவந்திருக்கும் நாவல் " அஞ்சுவண்ணம் தெரு " மூஸ்லீம் சமுக மக்களின் மரபான வாழ்க்கையை தொன்மங்களோடும் ஆசாரங்களோடும், சிதைந்த அவர்களின் கனவுகளோடும் சித்தரிக்கிறது.
" அஞ்சு வண்ணம் தெரு " வில் வெவ்வேறு வகைப்பட்ட கதாப்பாத்திரங்களை விவரித்துக்கொண்டு போவதாலே முஸ்லீம் சமூகம் பற்றிய மாற்றங்களையும் , கால மாற்ற‌த்தின் முன் அச்சமூகம் திணறி, மூச்சுத்திணறும் ஜாதிய முரண்பாட்டுச் சூழல்களையும் முன் வைக்கிறார்.


வழக்கமான யதார்த்த கதை சொல்லல் பாணியே தோப்பிலின் பாணியாகும். அந்தப் பாணியில் தான் அறிந்த முஸ்லீம் சமூக மக்களின் வாழ்க்கையை திறம்பட எளிமையுடனும் எள்ளல் தன்மையுடனும் சொல்வது அவருக்கு இயல்பாக இருக்கிறது. நாஞ்சில்நாட்டின் ஒரு சிறிய தெருவின், மனிதர்களின் வாழ்க்கையை சமூக ஆவணச் சாட்சிகளாக நிலைநிறுத்துகிறார்.
=சுப்ரபாரதிமணியன்
( முழுமையான கட்டுரைக்கு " தீராநதி " செப்டம்பர் இதழ் பாருங்கள் )

அஞ்சுவண்ணம் தெரு =தோப்பில் மீரான் நாவல்
அடையாளம் வெளியீடு , 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி
விலை ரூ 130/

திங்கள், 14 செப்டம்பர், 2009

மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்

மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்
=================================

காஞ்சீவரம் பற்றி " இனி ஒரு"வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமத‌மாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன்.

நான் எழுதிய " பட்டு " திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான பெண் கவிஞர், ஒரு மலையாள இயக்குனர் , ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார்யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. "ஒரு ரவுண்டு 'போய் விட்டு வந்து இந்த ரூப‌மூம் அடைந்திருக்கலாம். "சினிமாமாவுலே இதெல்லாம் சகஜமப்பா " என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு. எனது திரைக்கதை சுதந்திரப்போராட்டகாலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண் பாத்திரத்தை பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.

மலர் மன்னன் நான் குறிப்பிட்ட " முதல் மரியாதை ' அனுபவம் பற்றி கேட்டிருந்தார். " முதல் மரியாதை" படம் எனது " கவுண்டர் கிளப் " குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் "தீபம்" இதழில் வந்தது.இயக்குனர் பாரதிராஜா, கதாசிரியர் செல்வராஜ் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன்.இரண்டு முறை திரும்பி வந்தன. மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார் அவரின் வழக்கறிஞர் மூலம்: " கடிதம் அனுப்பி இருக்கும் ஆர் பி சுப்ரமணியனுக்கும் . சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை " ஆர் பி சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான் தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்கவேண்டியுருந்தது. அப்போது தீபம் பத்திரிககை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என் ஆர் தாசனை சந்தித்தேன். அவரின் " வெறும் மண் ' என்ற நாடகத்தைத் தழுவி பாலச்சந்தர் ' அபூர்வ ராகங்கள் " எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தவர்.அவரின் அனுபவத்தைச் சொன்னார்:
" முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான், பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது 1000 ரூபாய் அப‌ராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறிர்கள். சென்னைக்கு அலைய முடியுமா " . நான் அப்போது ஹைதாராபாத்தில் வசித்து வந்தேன். எனவே வழக்கை விட்டு விட்டேன்.


எனது " கவுண்டர் கிளப் " மையம் இது; கவுண்டர் ஒருவர் கிராமம் ஒன்றில் கிளப்‍‍=டீ கடை வைத்திருப்பார் . மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் ‍=தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள் தந்தையுடன். கவுண்டரின் நிர்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள்.ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப் பெண் தற்கொளை செய்து கொள்வாள்.அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும்.தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.

படத்தில் சிவாஜி, ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை, சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. .படத்தில் கி ராஜநாரயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.


எனது " சாயத்திரை "நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருநததை பெற்றுக்கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போதைக்கு 5 பேர் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் "ஆன் லைனில் "ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை " ஆன் லைனில் " எழுதி முடித்தேன்.அது என்ன பாடுபடப் போகிறதோ.


திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: 'பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதா சன்மானம்முன்னு அனுப்பிச்சிருவாங்க."



சினிமாவுலே இதைல்லாம் சகஜமப்பா..

= சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

செய்தி சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
==================================================


சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர் விஜயகுமார் குனிச்சேரி நாவலை வெளியிட்டுப் பேசினார். " மூன்றாம் உலக நாடுகளின் ச்ற்றுச்சூழல் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்து மனித உரிமை விசயங்களாக மாறி வருகின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் சார்ந்த அக்கறையை கலைப்படைப்புகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை " நாவல் வலியுறுத்துகிறது. " என்றார்.

" சாயம் புரண்ட திர " நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருப்பவர் கோவையைச் சார்ந்த ஸ்டேன்லி ஆவார். திருப்பூரின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையாமாகக் கொண்டும் , நொய்யலை ஒரு கதாபாத்திரமாகவும் கொண்ட " சாயத்திரை " நாவல் ஆங்கிலத்திலும் ( டாக்டர் ராஜ்ஜா மொழிபெயர்ப்பு ‍ The coloured curtaiந் ), ஹிந்தியிலும் ( மீனாட்சிபுரி மொழிபெயர்ப்பு ‍ Reng Rengli sadhar meiheli ) முன்பே மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. கனனடத்தில் தமிழ்ச்செல்வி மொழிபெயர்த்து 2 ஆண்டுகள்ல ஆகி விட்டது. அது விரைவில் வெளி வரலாம்.

" சாயம் புரண்ட திர " நூலை திருவனந்தபுரம் " சிந்த " பதிப்பகம் வெளியிட்டுள்ளது . விலை ரூ 85



செய்தி : issundarakkannan7@gmail.com

-------------------------------------------------------------------------------------
சாயத்திரைகள்




சுற்றுச் சூழல் சீர்கேட்டில் சாயப்பட்டறைகள் குறித்த எந்தவொரு முனுமுனுப்பையும் சகித்துக் கொள்ளாதபடி தொழில் சமூகம் இருந்தது. மூடப்பட வேண்டிய சாயப்பட்டறைகளின் பட்டியல்கள் நீதிமன்றங்களும் மாத கட்டுப்பாது வாரியல்களும், அரசும் அறிவிக்கிற போது தொழிலாளர் நலனை முன்னிருத்தி அவை பயங்கரவாத செயல்களாக பேசப்படுவது கேளிக்குறியது. சுற்றுச் சூழல் பற்றின அக்கறை நியாய வணிகத்தின் நெறிமுறைகள் திரும்ப திரும்ப பல்வேறு வகையான ஏற்றுமதிக் கொள்கைகள் மனித உரிமை அம்சங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை அலட்சியப்படுத்தப்படும் போதும் தொழில் சமுகம் இவ்வகை நெருக்கடிகள் குறித்து யோசிக்காதது இன்னும் கேலிக்குள்ளானது.

சாயப்பட்டறை சலவை ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று கடலில் கலக்கம் செய்ய வேண்டும். இது மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி என்கிறார். நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் நகராட்சியின் தலைவருமான ஒருவர் சுனாமியில் பாதிக்கப்பட்ட காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் மக்களுக்கு இன்னும் அதிர்ச்சி தரும் இந்த சுனாமி செய்தி இப்பிரச்சனைக்கு சாயப்பட்டறைகள் மட்டுமா காரணம் என்று கொதிக்கிறார்க்ள் சாயப்பட்டறை உரிமையாளர்கள். பின்னலாடை தயாரிப்பில் 6000 கோடி அன்னிய செலவாணியை ஈட்டித் தருவதில் சாயப்பட்டறைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டால் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறையும். நிலத்தடி நீர் தில்சூர் மட்டுமல்ல அதையொட்டிய ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விவசாய பயன்களுக்காக கட்டப்பட்ட ஒரத்துப்பளையம் அரசு தில்சூர் சாயக்கழிவுகளை தேக்கி வைத்திருக்கிற வெடிகுண்டாக இருக்கிறது. அதில் தேங்கியிருக்கும் சாய நீரை வெளியேற்றுவது குறித்து பல சர்ச்சைகள் உள்ள அணையைத் திறந்து விடாதீர்கள் என்று விவசாயிகள் கூக்குரல் இடுவது சாதரணமாகி விட்டது. உலக சுற்றுச் சூழல் தினத்தில் அணையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகும் இளைஞர்கள் அவ்வப்போது அணையில் மதகுகளை திறக்க வேண்டாம் என்று சொல்லி மறியலில் கைதாகும் விவசாயிகளின் நம்பிக்கைகளும் தகர்ந்து கொண்டிருக்கின்றன அவர்களை வழி நடத்தும் சிறு சிறு குழுக்களின் தலைவர்கள் பல்வேறு தரப்பிலிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். தங்கள் வீடுகளின் கல்யாணம், சாவு காரியங்கள் ஊர் பொது கோவிலில் திருப்பணிகள் காரணமாய் இப்பிரச்சனையில் தாங்கள் ஈடுபட முடியாமல் இருப்பதாக அவ்வப்போது தெரிவிக்கிறார்கள். ஓரத்துப்பiளாயம் சாயக்கழிவு குறித்த போராட்டத்தை முன் நின்று நடத்திச் செய்ய தன்னார்வக் குழுக்களும் தயங்குகின்றன. அப்பகுதியின் விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றினைவதில் பல தடைகள் நிர்பந்தங்கள் உள்ளன. விவசாயிகளே சட்ட ரீதியான அலோசனைகளுக்கு கூட தங்களை தயார்படுத்திக் கொண்டு தன்னார்வ குழுக்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெறத் தயங்கும் போது போராட்ட செயல்பாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன.

ஓரத்துப்பாளையம் சாயக்கழிவை சுத்தம் செய்ய ரூபாய் 6 கோடி என்ற சாதாரண நஷ்ட ஈட்டுத் தொகையை உயர்நீதிமன்றம் உத்தரவாக சாயப்பட்டறைகளுக்கு வழங்கியது. அதில் சொற்ப பணமாக ரூபாய் 1 கோடி மட்டும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிலும் முதல் தவணையாக ரூபாய் 1 கோடி மட்டும் பெயருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் சொன்ன நஷ்ட ஈட்டுத்தொகையை கட்டுதல் மற்றும் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி முறைக்கு உள்ளாக்கி தொழிலைத் தொடர்தல் என்பது மட்டுமே இன்றைக்குள்ளத் தீர்வாக உள்ளது. சுமார் ஆயிரம் சாயப்பட்டறைகள் உள்ள ஊரில் 5ரூ சாயப்பட்டறைகள் மட்டுமே ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் என்ற சாயக்கழிவு நீரை மறுசுழற்சி சுத்தமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். கழிவுநீர் மறுசுழற்சி முறைக்காக ஆகும் செலவு லாபத்தை குறைக்கும் என்பதே தயாரிக்ககுறியதாகிறது பொது சுத்திகரிப்பு முறை என்பது பெரிதாக முன் வைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை கை கொள்ளாதவர்கள் தொழிலில் இருந்து துரத்தப்படுவார்கள் என்பது தொழில் சமூகத் தரப்பிலிருந்தே பல ஆண்டுகளாய் எச்சரிக்கையாய் விடுக்கப்பட்டதை மறுத்ததால் சிறிய சாயப்பட்டறையினர் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

சாயக்கழிவு நிர் பிரச்சனைக்கு சாயப்பட்டறையினர் மட்டுமே காரணமல்ல பணியின் உற்பத்தியாளர்களும் எனவே நஷ்டஈட்டை அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிப்பதில் மேற்கத்திய நாடுகள் அக்கறை கொண்டிருக்கும் நேரத்தில் பணியின் சாயக் கழிவால் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித உரிமை பிரச்சனையாக விருவரூபம் எடுப்பது மேலை நாடுகள் தங்களின் தொழில் அக்கறையை திருப்பூரிலிருந்து வேறு ஊர்களுக்கு நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடும் சூழல்கள் உருவாகியுள்ளன.

சமீபத்தில் சில சாயப்பட்டறைகள் மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவில் அதிர்ச்சி அடைந்த சாயப்பட்டறைகள் உரிமையாளர்கள் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தமே தொழிலாளர், முதலாளிகள் தரப்பில் பல வகை அச்சங்களைக் கிளப்புவதாக இருந்தது சாயப்பட்டறைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் அதை பயத்துடன் ஓய்வு தினமாக எடுத்து கொண்டனர் ஆனால் ஒரே நாளில் சாயப்பட்டறைகளுக்கு பயன்படும் உப்பு, சாயம், ரசாயனம், விறகு, தண்ணீர் ஆகியவற்றின் விற்பனையான ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டது. திருப்பூர் சாய ஆலைகளில் ஒரு மாதத்தில் 400 டன் சாயமும், 500 டன் சோடா வாஷ், காஸ்டிக் சோடா, உள்ளிட்ட ரசாயனப் பொருட்களும் 1000 லோடு சோடியம் குளோரைடு உப்பும் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர இதனால் அரசுக்கு வரும் வருமான இழப்பும் பெரிய தொகையாகும் சாய சலவை தங்களுக்கு ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் பயன்பாடாகிறது. இவை முழுக்க வாலிகள் மூலமே கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீர் கொண்டு வரப்படுத்தலிலும் சிக்கல்கள் தொடர்கின்றன அவை எடுத்து வரப்படும் பக்கத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் கிராமவாசிகள் நடத்தும் மறியல் போராட்டங்கள் தொடர்வதால் இன்னும் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. பவானியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பொதுமக்களும் சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது தொழில் நலத்தை முன்னிட்ட துரோகச் செல் என்று வெளிக்காட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

சாயப்பட்டறைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திருப்பூர் தண்ணீர் திட்டம் தெற்காசியாவிலேயே கட்டி, உரிமையாக்கி இயக்கி மாற்வம் திட்டம் எனப்படுகிறது. பவானி ஆற்று நீர் இதற்கு பயன்படப் போகிறது. இதில் நாளொன்றுக்கு 1150 இலட்சம் லிட்டர் நீரை பின்னலாடைத் துறையினர் பெறுவர். திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கும் இத்திட்டத்தில் மகேந்திரா மகேந்திரா (இந்தியா) பெச்டெல் (அமெரிக்கா), யுனைட்டெட் யூடிலிட்டி (இங்கிலாந்து) முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆயிரம் லிட்டருக்கு நாற்பத்தைந்து ரூபாய் தண்ணீர் கட்டணம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோகத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு ஐந்து ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது பவானியில் நீர் குறைந்து போவது மற்றும் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை உருவாகும்போது பன்னாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்திலிருந்து நழுவிக் கொள்வது திருப்பூரை பாலைவனமாக்கும்.

தமிழகத்தின் தண்ணீர் மயமாக்கம் திட்டத்தின் முன்னோடியான திருப்பூர் பல சந்தேகங்களையும், சங்கடங்களையும், உருவாக்கியுள்ளது பின்னர் பசி சாவுகள் போல தாக சாவுகளும் ஏற்படும் செய்திகள் விஷக்காய்ச்சலால் பரவும் கண்களை மறைக்க பல திரைகள் உள்ளன.