சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 மே, 2010

இஸ்லாமும், தீவிரவாதமும்

இஸ்லாமை மதமாக மட்டுமின்றி வாழ்க்கை முறையாகவும் எடுத்துக் கொண்டு வாழும் மக்கள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும்மேல் இருக்கிறார்கள். பங்களாதேஷ், எகிப்து, பாகிஸ்தான், இந்தோனேஷியா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். ஆனால் வறுமையும், படிப்பறிவின்மையும் அவர்களை வாட்டி வதைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரக் கேடுகளின் மத்தியில் வாழக் கற்றுக் கொண்ட மனிதர்களாய் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நெருக்கடிகளும், வன்முறைகளும் அவர்களைப் புறக்கணிப்பிற்குள்ளாகி இருப்பவர்களாக்கியிருக்கிறது. வேலையில்லாத முஸ்லிம் இளைஞர்கள் தங்களது இஸ்லாமியக் கொள்கைகளை நிலைநாட்டும் பொருட்டு வன்முறையாளர்களாக மாறி அலைக்கழிகிறார்கள். இங்கிலாந்து போன்ற நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. அவர்களில் பாதிக்கும்மேல் நடுவயதிற்குட்பட்ட இளைஞர்கள். இதில் பத்து சதவிகிதம் பெண்களும் அடக்கம். ஆயுதம், போதைப் பொருட்கள் கடத்தலிலும் சுலபமாக ஈடுபடுகிறார்கள். இளைஞர்களின் வாழ்க்கைக்கான படிப்போ, ஆரோக்கியமான சூழலோ கிடைக்காதபோது வன்முறை, பாலியல் தொடர்பான குற்றங்கள், கடத்தல் போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்கள். மின்மினிப் பூச்சிகளாகி மறைந்து போகிறார்கள்.
உலகளவில் இந்தோனேஷியா, பாகிஸ்தானுக்கு அடுத்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா. ‘இந்தியாவை விரும்புகிறோம். நேசிக்கிறோம். ஆனால் எங்கள் சகோதரர்கள் தொடர்ந்து கொல்லப்படும்போதும் எங்கள் சகோதரிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும்போதும் எங்கள் நேசிப்பை மீறி கோபம்தான் மிஞ்சுகிறது’ என்கிறார்கள். அதுவும் பாபர் மசூதி பிரச்சினைக்குப் பிறகு இந்துக்கள் மீதான அவநம்பிக்கை வெகுவாகக் கூடிவிட்டது. இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஒரு காலத்திய ஆட்சி ஈன்றுகள் சுவடுகளாய் மிஞ்சியிருக்கும்போது அவர்களின் மீதான சமூகப் புறக்கணிப்பும், நிராகரிப்பும் அவர்களை நீதி குறித்தும் கோபம் கொள்ளச் செய்கிறவர்களாக மாற்றியிருக்கிறது. இருபத்தைந்து சதவீத முஸ்லிம் குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்களாக இருக்கிறார்கள். வறுமை அவர்களை வாட்டுகிறது. வேலையின்மை இன்னும் சிரமத்திற்குள்ளாக்குகிறது. சுயதொழில்கள், சிறு தொழில்களில் பெரும்பான்மையோர் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைகளில் முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனாலும் ஆறுதல் வார்த்தைகளாலேயே அவர்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பராக் ஒபாமா கூட அவரின் தந்தை பல தலைமுறைகளாக முஸ்லிம்களாய் வாழ்ந்துவரும் குடும்பத்தைச் சார்ந்தவர் என்கிறார். இஸ்லாம் மார்க்கத்தின் மூலம் மேன்மையையும் சமாதானத்தையும் கண்டடைந்த சமூகத்தினரிடையில் பணிபுரிந்தும், வரலாற்று மாணவனாக இஸ்லாமின் நாகரீகப் பங்களிப்பை உணர்ந்திருப்பதாக சொல்கிறார். இஸ்லாம் சகிப்புத்தன்மை குறித்த பெருமைக்குரிய மரபைக் கொண்டது. உலகமக்கள் அனைவரும் சமாதானத்துடன் இணைந்து வாழமுடியும். அதுதான் கடவுளின் நோக்கம் என்பது நமக்குத் தெரியும். தற்போது இப்பூமியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து வாழும் சூழலை உருவாக்குவதுதான் நமது வேலை என்கிறார்.
ஆனால் முஸ்லிம்கள் மேல் உலகெங்கும் தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளின் பின்புலத்தில் அமெரிக்கா இருக்கிறது. எதிர் வன்முறைகளால் அமெரிக்கா திகிலடைந்து இருக்கிறது. முஸ்லிம் சமூகப் பெரியவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளவும் இஸ்லாத்தைக் காத்துக் கொள்ளவும் உயிரைத் துச்சமாக்குகிறார்கள். மனித வெடிகுண்டாகிறது. பெண்களும் மனித வெடிகுண்டாகிற அவலத்தை ‘ஏ ஸ்டெப் இன்ட்டு தி டார்க்னஸ்’ என்ற துருக்கியப் படம் தெரிவிக்கிறது.
அமெரிக்கர்கள் ஈராக்கின் ஒரு கிராமத்தை முழுக்க அழித்தொழிக்கிறார்கள். அதிலிருந்து தப்பும் சென்னட் என்ற இளம் பெண் தன் மூத்த சகோதரன் கிர்கிக் நகரில் இருப்பதால் அவனைத் தேடி வருகிறாள். அங்கு வந்தபின் அவன் வெடிகுண்டு விபத்தொன்றில் சிக்கி துருக்கிக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பதை அறிகிறாள். ஈராக்கின் வடக்கு பகுதி மலைகளின் வழியாக துருக்கிக்கு சட்ட விரோதமாகச் சில கடத்தல்காரர்களுடன் செல்ல முயல்கிறாள். பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். தற்கொலை முயற்சியின்போது இஸ்லாமிய அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்களால் காப்பாற்றப்பட்டு இஸ்தான்புல்லுக்கு அழைத்துவரப்படுகிறாள். அங்கு சகோதரனைத் தேடுகிறாள். மதத் தலைவர் ஒருவரின் பிடியில் அகப்படும் சில பெண்களுள் சென்னட்டும் ஒருவராகிறாள். மனித வெடிகுண்டாகிறாள். குண்டுவெடிப்பிற்கான நேரத்தில் மன சஞ்சலத்தில் குண்டைத் தவறவிடுகிறாள். அவளது சகோதரன் அந்த நகரில் இன்னொரு இடத்தில் ஒரு கால் அகற்றப்பட்ட நிலையில் இருக்கிறான்.
எல்லா மதங்களின் இதயத்திலும் ஒரே ஒரு சத்தியவாக்குதான் பதிந்திருக்கிறது. நமக்குப் பிறர் எதைச் செய்யவேண்டும் என நாம் விரும்புகிறோமோ அதையே நாம் பிறருக்குச் செய்யவேண்டும் என்பதே அது. சமாதானத்தைக் கொண்டு வருவதே நமது முழுமையான தாக்கம் என்கிறார் பராக் ஒபாமா தனது புகழ்பெற்ற கெய்ரோ உரையில். இந்தத் தொனியில் நம்பிக்கை தரும் படம் ‘ரோமு மு சங்கமம்’ என்ற இந்திப் படமாகும். அமித் ராய் என்ற இளைஞரின் படம் இது. பனிரெண்டு வயது முதலே நாடக இயக்கங்களில் பங்கு பெற்றவர். 20க்கும் மேற்பட்ட முழுநீள நாடகங்களை இயக்கியவர். ஹஸ்மா உல்லா முஸ்லிம் மெக்கானிக்கிற்கு போர்டு இன்ஜின் ஒன்று பழுது பார்க்க வருகிறது. அந்த இன்ஜின் மகாத்மா காந்தியின் அஸ்தியைச் சுமந்து கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தினது. நகரத்தில் நடக்கும் ஒரு வெடிகுண்டு விபத்தையொட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து கடையடைப்பு நிகழ்கிறது. வாகன இன்ஜின் அவசரமாய் தேவை என்று அணுகுகிறவர்கள் அது காந்தியின் அஸ்தி ஊர்வல வாகனம் என்ற தகவலைச் சொல்ல ஹஸ்மர் உல்லா அதைச் சரியாக்கி உடனே தந்துவிட நினைக்கிறார். ஆனால் தொடர்ந்த கடையடைப்பில், முஸ்லிம் பெரியவர்கள் விதி தளர்த்தப்படாது என்கிறார்கள். காந்தி வாகனம் தரும் அக்கறை உல்லாவை முஸ்லிம் பெரியவர்களை எதிர்த்து, கடையைத் திறந்து இன்ஜினைப் பழுதுபார்க்க வைக்கிறது அவர் முஸ்லிம் சமூகத்திலிருந்து அந்நியமாக்கப்படுகிறார். வாகனம் தயாராகி அஸ்தி ஊர்வல நாள் நெருங்குகிறது. முஸ்லிம் பெரியவர்களிடம் இந்தியர்களாக இருந்து அவர்கள் செய்யவேண்டிய பணிகள் பற்றி எடுத்துரைக்கிறார். அந்நியமாகிக் கொண்டிருக்கிற முஸ்லிம் சமூகம் இந்து மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது பற்றிச் சொல்கிறார். அஸ்தி வாகன ஊர்வல நாளில் ஒன்றுபடுகிறார்கள். மத நல்லிணக்கம் குறித்த அக்கறையை வெகு சரியாக வெளிப்படுத்தும் படம். காந்தியின் பேரன் துசார் காந்தியும் இதில் சில காட்சிகளில் வருகிறார்.
‘சுபி சொன்ன கதை’ ராமன்னியின் மலையாள நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. அது திரைப்படமாக பிரியநந்தனால் இயக்கப்பட்டு வந்திருக்கிறது. ‘நெய்துக்காரன்’, ‘புலிஜென்மம்’ போன்ற குறிப்பிடத்தக்க படங்களை எடுத்தவர் பிரியநந்தன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மலபார் பகுதி ஆங்கில ஆட்சியின்கீழ் இருந்தபோது நிகழ்ந்த சில நிகழ்வுகளை இப்படம் கோருகிறது. இந்த நாயர் குடும்பத்தைச் சார்ந்த கார்த்தி என்ற பெண் மம்முட்டி என்ற முஸ்லிம் மீது காதல் கொள்கிறாள். முஸ்லிமாக மாறுகிறாள். கணவனுடனான வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. வீட்டுவேலையில் கிடைக்கும் ஒரு கிராம அம்மன் சிலை கார்த்தியைக் கோவில்கட்டி வழிபாடு செய்ய வைக்கிறது. முஸ்லிம் சம்பிரதாயங்களிலிருந்து விலகாமலும் இருக்கிறாள். ஆனால் குடும்ப, முஸ்லிம் சமூகப் புறக்கணிப்பு அவளை வேறு பக்கம் துரத்துகிறது. கணவனும் முஸ்லிம் சமூகத்தினராலேயே கொல்லப்படுகிறான். கடலில் மூழ்கி அவள் வழிபடும் தெய்வமாகிறாள். முஸ்லிம் சமூகத்தின் குரூர நடவடிக்கைகளையும் கொலை பாதகத்தையும் கோடிடுகிறது.
சுகுமாரன் நாயரின் ‘ரமணம்’ திரைப்படத்திலும் முஸ்லிம் சமூகம் பற்றிய விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. நீலி என்ற நிர்க்கதியாக்கப்பட்ட பெண் பிரசவத்தில் இறந்து போகிறாள். தங்கல் என்ற ஒரு முஸ்லிம் எடுத்து அந்தப் பையனை வளர்க்கிறார். ஆனால் முஸ்லிமின் மனைவி அதை விரும்புவதில்லை. தங்கலின் மகள் நங்கையர் கூத்தைக் கற்றுத் தேர்கிறாள். ஆனால் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினைக்குப் பின்னதான நிகழ்வுகளின் காரணமாக உள்ளூர் கோவிலில் அக்கூத்தை அரங்கேற்றம் செய்ய, ஏற்படும் சிக்கல்களை முன்வைத்து முஸ்லிம்-இந்து பிரச்சினை பற்றின விவாதமாகிறது இப்படத்தில். சமூக, கலாச்சார, அழகியல், அரசியல் தளங்களில் பெரும் மாற்றங்களை உள்ளடக்கிய மலையாளிகளின் உலகத்திலும் முஸ்லிம்கள் அந்நியப்பட்டுப் போகிற, குரூரமாய் வேர்விட்டிருக்கிற சூழல்கள் அதிர்ச்சி தருபவையே.