சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 9 ஜனவரி, 2012

ஜெயமோகனுக்கு “முகம் “ விருது

சுப்ரபாரதிமணியன்


கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் குக்கூ இயக்கம் சார்பில் “முகம்” விருது ஜெயமோகனுக்கு 27/12/11 அன்று அளிக்கப்பட்டது திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி முருங்கப்பாளையும், கோதாபாளையம் பகுதிகளில் 300 மாணவர்களைக்கொண்டு 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் நிர்வாகி முருகசாமியும் காது கேளாத விளிம்பு நிலை மனிதரே.குக்கூ இயக்கம் குழந்தைகளின் மத்தியில் கல்வி, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக சிவராஜின் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் சார்பில் “ முகம் “ விருது இயற்கைவேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், பழங்குடியினமக்கள் தலைவர் விபி குணசேகரன்., ,ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட மரங்கள் நாகராஜ் போன்றோருக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு ஜெயமோகனின் “ அறம் “ சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது. ”””””””’””” வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமில்லை. அறம் சார்ந்த விழுமியங்களுடன் வெற்றி பெறுவதே சிறந்தது. அதையே அறம் தொகுப்புக்கதைகள் வலியுறுத்துகின்றன. தன் நலனுக்காக தர்மத்தை கைவிடாத மனிதர்களின் கதையே அறம். ” என்றார் ஜெயமோகன் விருதைப்பெற்றுக் கொண்டு பேசும்போது.. அவர் பேச்சு மகா .பாரதத்துக் கதையொன்றில் பாண்டவர்கள் சொர்க்கம் புகும் வாய்ப்பை முன் வைத்து அமைந்திருந்தது.” ஒவ்வொரு மனிதனும் பணம், புகழ் சம்பாதித்து பெறுவது வெற்றியல்ல. கடைசிவரை தர்மத்தின் வழி நடப்பவனே வெற்றி பெற்றவன் “ ஜெயமோகனின் “யானை டாக்டர்”””’” “ கதையை மையமாகக் கொண்டு அப்பள்ளி மாணவமாணவியர் 30 ஓவியங்களைத் தீட்டியிருந்தது கண்காட்சியாகியிருந்தது. புகைப்படக்கலையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பார்வையிழந்தோர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி, குக்கூ குழந்தைகளுக்கான 1500 நூல்கள் கொண்ட நூலகம் ஆகியவை திறக்கப்பட்டன. பாரம்பரியமான 10 ஆயிரம் விதைகள் பயிரிடப்பட்ட நாற்றுப்பண்ணை துவங்கப்பட்டது.குழந்தைகளின் ஆரவாரமும், உற்சாகமும் வினோதமான ஓசையாய் வெளிப்பட்டு மனதை நெகிழச்செய்தது.அப்பள்ளி பற்றிய ஒரு குறும்படம் அவர்களுக்கான கல்வி கற்பித்தலில் இருக்கும் அர்ப்பணிப்பையும், பள்ளிச் சூழலையும் நேர்த்தியாக, வருடும் இசைப் பின்னணியில் வெளிப்படுத்தியது. இயக்குனர் கும்பகோணம் சரவணன். பன்னாட்டு நிறுவன எதிர்ப்பில் பலியான கென்சரோவிவாவின் புகைப்படம் மட்டுமே இருந்தமேடை இலைகளாலும், புற்களாலும் வெள்ளைத்துணியின் பரப்பில் விசேசமானதாக அமைந்திருந்தது. அக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் அவர்களின் உடல் குறையை மீறிய அற்புத அசைவுகளில் திறமை வெளிப்பட்டது. தாளம், அசைவுகளின் மூலமும், அதிர்வுகளின் மூலமும் பயிற்சி பெற்ற பாரம்பரிய கிராமியக்கலை அம்சங்களை அவை கொண்டிருந்தன. மேடையைச்சுற்றி இருந்த இடங்களில் நெய்விளக்கு தீபங்கள், ஈர விதைகள் நிரம்பிய மண் கலயங்கள், அழகான மரங்கள், கட்டிடங்களில் அபூர்வமான வர்ண புகைப்படங்கள் அச்சூழலை ரம்மியமாக்கியிருந்தது.குக்கூ இயக்கம் சார்பில் வழியெங்கும் நடப்பட்ட புதிய 2000 மரங்கள், வருகையாளர்களைக் கொண்டு நடப்பட்ட பல்வேறு தானியங்களின் ஈர விதைகளின் மணம், லேசான பனி சூழ்ந்த சூழல் இவ்விருது வழங்க உரிய இடமாக்கியிருந்தது காதுகேளாதோர் பள்ளியை..விழாவில் தென்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களின் செயல்பாடு ஒருமித்ததாய் அமைந்ததால் .நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகியிருந்தது. ( அறம் தொகுப்பு வெளியீடு: வம்சி பதிப்பகம், 19 டிஎம் சாரோன், திருவண்ணாமலை .விலை ரூ 250) . காது கேளாதோர் பள்ளி , முருகம்பாளையம், திருப்பூர் 641687 . தொலைபேசி: 0421-2261201, 5533962. subrabharathi@gmail.com