சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 20 ஏப்ரல், 2015

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்: த.ஜெ.பிரபு நாவல்
500 பக்க நாவல் : ரூ 250 : வெளியிடு அவரே.(  J_raja.prabhu@yahoo.com )
வெவ்வேறு துறை சார்ந்த நாவல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் காலம் இது.பொறியியல் பேராசிரியர் ஒருவர் பொறியியல் துறை சார்ந்த கல்வி அனுபவங்களையும், கல்விப்படிப்பிற்குப் பின்னால்  பல மாணவர்களின் வாழக்கையின் தடம் புரள்வதையோ, புதிய திசைகளை நோக்கிச் செல்வதையோ இந்நாவல் எடுத்துரைக்கிறது எனலாம்.
ஆசிரியர் பாடத்திட்டம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டிருப்பவர். அதனால் மாணவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அதனால் மாணவர்களின் உலகத்தையும் துல்லியமாகத் தெரிந்திருப்பவர்,மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, விடுதி வாழ்க்கையை விரிவாகச் சொல்கிறார்.அக்காலத்தில் அவர்களின் அரசியல் அக்கறையையும், அரசியல் விவாதங்களையும் இந்நாவல் விரிவாகச் சொல்லியிருகிறது என்ற காரணத்தால் இது ஒரு அரசியல் நாவல் என்ற பரிமாணத்தை ஆரம்ப அத்தியாயங்கள் தந்து விடுகின்றன. பின்னர் அந்த மாணவர்களின் தனிமனித வாழக்கை பற்றிய பல்வேறு போக்குகளை மீதி அத்தியாயங்களில் சொல்கிறார்.ஆறு பாகங்கள் கொண்டது இந்நாவல்.
கல்லூரி வாழ்க்கையில் அரசியல் விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சோவியத் ரஷ்யா, சீனாவை முன்வைத்த த்த்துவர்த விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொதுவுடமை இயக்கம் சார்ந்த எழுச்சிகளும் வரலாறுகளும் மோதல்களும் விரிவாகவே சொல்லப்பட்டிருகின்றன.இதில் தீவிர வாதப்போக்கு எண்ணங்களும் உண்டு.இந்திய பொதுவுடமைக்கட்சிகளின் வரலாறு பற்றிய பல பதிவுகளையும் அக்கட்சிகளீன் போக்குகளையும் நடுநிலையோடு சொல்லியிருக்கிறார். இன்னொரு புறம் வழக்கமான மதம், ஆன்மீகம் சார்ந்த கட்சியினரின் வாதம், பிரதி வாதம் என்ற போக்கும் உள்ளது. ஏறத்தாள  50 ஆண்டுகளை உள்ளடக்கியதாக இந்நாவல் அமைந்துள்ளது.
கல்லூரி வாழ்க்க்கை முடிந்து மாணவர்கள் லவுகீக வாழ்க்கைக்குள் புகுகிற போது இருக்கும் சிக்கல்கள் , காதல் திருமணம் பிள்ளை குட்டி பெற்றுக் கொள்வது என்பதெல்லாம் சகஜமாகிவிடுகிறது.தன்நலம் சுயநலம் என்றப் போக்குகளில் மனிதர்களின் வாழ்க்கை ஓடுவதைக் காட்டுகிறார். இதில் பொதுவுடமை சார்ந்து கல்லூரியில் இயங்கியவர்கள் சாதாரண மனிதர்களாகிப்போவதும் நடக்கிறது. சொத்து சேர்க்கிறார்கள். வெளிநாடு போகிறார்கள். சவுகரியமாக இருக்கிறார்கள். இது அந்த இயக்கங்களை சார்ந்தவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் போக்கிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மறுபுறமான ஆன்மீக எண்ணங்களைக் கொண்டவர்கள்  வாழ்க்கையிலும் நிறைய தடுமாற்றங்கள் சங்கடங்கள். சிலர் மனநிலை மாறி பைத்தியத்திற்கு உள்ளாகிப்போவதும் நடக்கிறது.
இவற்றை விவரிக்கும் முறையில் எளிமையும் அனுபவ விஸ்தரிப்பும் பிரபு அவர்களின் தனித் தன்மையுடன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சொல்லப்பட்டிருப்ப்தே அவரின் தனித் தன்மை எனலாம். அனுபவ விவரிப்பு சார்ந்த எழுத்து முறை. எனவே செயற்கைத்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை. நதி நீரின் இயக்கம் போல் செல்கிறது. பல துறைகளில் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காண்கிறவர்கள் இதில் வருகிறார்கள். கம்யூசிசமும் ஆன்மிகமும் இணைந்து இந்திய ஆன்மீகம் பிரவகிக்க வேண்டும் என்று கனவு காண்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கனவுகளின் போக்கையும் சிதைவையும் சொல்கிறதில் பிரபு தேர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்,கல்வித்துறை சார்ந்த பாடநூல்களாகட்டும் , கல்வித்துறை சார்ந்த அனுபவ்ங்களை படைப்பாக்கும் முயற்சிளாகட்டும் நேர்மையும் இயல்பும் கலந்த முன்னுதாரணமாக  பிரபு தொடர்ந்து இயங்கி வருகிறார்  என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 



எழுத்தாளனின் கருத்து/படைப்பு சுதந்திரமும், திரைப்படமும்:
 திருப்பூர் அறம் வாசகர் வட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அறம் வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாதக்கூட்டம் : 12/4/15 மாலை 5 மணிக்கு மகாகவி வித்யாலயா, icici வங்கி அருகில் , அவினாசி சாலை,திருப்பூரில் நடைற்றது.
சத்யநாராயணன் தலைமை வகித்தார்.
காலச்சுவடுபதிப்பகம்  வெளியிட்ட இந்தி நாவலாசிரியர் நிர்மல் வர்மாவின் “ சிகப்பு தகரக்கூரை “ என்ற இந்தி நாவல் மொழிபெயர்ப்பு நூலை உதயம் பக்தவச்சலம் அறிமுகப்படுத்தி ஒரு இளம் பெண்ணின் வாழக்கை பூப்படைவது வரை விவரிக்கப்பட்டிருப்பதை இந்தியப் பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை விளக்கினார்.இதை மொழிபெயர்த்தவர் எம்.கோபாலகிருஷ்ணன்.
 எழுத்தாளனின் கருத்து/படைப்பு சுதந்திரமும், திரைப்படமும்: என்ற தலைப்பில்இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற கோர்ட்மராத்தி படத்தை முன்வைத்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசினார். தமிழகச்சூழலை முன்வைத்து எழுத்தாளர்கள் மீதான வன்முறை மற்றும் எழுத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிப் பேசினார் .படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் போலவே எதிர் தரப்பில் உள்ளவர்களின் சுதந்திரத்தையும் எழுத்தாளர்கள் மதித்து எழுத வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார். கவிஞர்கள் ஜோதி, அழகுபாண்டி  அரசப்பன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
செய்தி : உதயம் பக்தவச்சலம் 98422 27505