சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

புரியவில்லை

                             சுப்ரபாரதிமணியன்




புரியவில்லை என்று சொல்கிறபோதே கற்றுத் தர முடியுமா என்றக் கேள்வியும் வந்து விடகிறது. ஆனால் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறவர்களிடம் இக்கேள்விகள் இருக்காது.
            புரியாமல் போய் விடுகிறது என்று எழுத்தாளர்களிடம் சொன்னால் அவர்கள் பதறித்தான் போய் விடுகிறார்கள். 'நான் என்னளவில் விளங்கிக் கொண்டதை சரியாகத்தான் வெளிப்படுத்துகிறேன். இதில் புரியாமல் போய் விடுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் நானாக இல்லை என்பது முக்யமாகி விட்டது. அய்யய்யோ நானும் உங்களுக்கும் புதிய வேண்டும் என்று ஆசைப்பட்டே எழுதுகிறேன். புரிகிற மாதிரி எழுதுகிறவர்களைப் போல என் எழுத்தும் புரிய வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி எழுத முடியவில்லையே என்று கூக்குரலும் இருக்கிறேன் என்று செய்ய" என்று புலம்புவார்கள்.
            எழுதுகிறவன் பெரும்பாலும் பத்திரிகைகளை மனதில் கொண்டு எழுத வேண்டியிருக்கிறது. பத்திரிகையின் தரமும், அவை வெளியிடும் படைப்புகளின் தரமும் அவனுக்கு. பல சமயங்களில் விரோதமாய் போய் அவனை வெகு தூரம் துரத்தி விடுகிறது.
            சம காலத்தைப் பிரதிபலிக்கச் செய்வதில் பத்திரிகைகளுக்கு பெரும் பங்கும் கடமையும் இருக்கிறது. இதில் சம காலத் தன்மையை எந்த விதத்தில் வெளிப்படுத்துவது என்பதில் பத்திரிகைகளின் கோணம் என்பது ஒன்று. செய்திகள், பரபரப்புக் கட்டுரைகள் என்று அவை விரித்துக் கொண்டு போகின்றன. இதையே கூட எழுத்தாளன் வேறு வகையில் படைப்புக்குள் கொண்டு வருகிறான். ஒருவரையொருவர் தவிர்த்து விட்டு பயணம் செய்து விட முடியாது. அப்படி தனித்தனியாக இயங்கும்போது வெளியில் பத்திரிகைக்கு மரியாதை இல்லாமல் போய்விடகிறது. தீவிர விசயங்களுக்கும், வாசகர்களுக்கும் இடைவெளி நிறைய என்று மலைகளைக் கொண்டு வந்து நிறுத்தி பிளவுபடுத்தும் பத்திரிகைகளை யாராவது தண்டிப்பார்கள். இலக்கிய தார்மீகக் கோபம் என்பது பத்திரிகைகளை மட்டும் சாம்பலாக்காமல் போய் விடுமா என்ன... சமகால அரசியலை, கலாச்சாரக் கூறுகளை உள் வாங்காதவனும் சமகால இலக்கியப் படைப்புகளையும் புரிந்து கொள்ளவும் இயலாது.
            தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற சமகால வடிவங்களில் முக்யமானது நாவல் என்று சொல்லலாம். நாவலாசிரியன் எழுதும் புதுக்களங்களால் அவனின் சாதாரண எழுத்தின் அர்த்தமே அனுபவமாகிறது. வெவ்வேறு தலைமுறை அனுபவங்களுக்கு ஏற்ப நாவல் தலைமுறை கடந்த அனுபவமாகிறது.
            பழமையின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரத்தைத் தேடும் படைப்புகள் சமூகவியல் சார்ந்ததால் இருந்தாலும் அறிவுத் தளம் சார்ந்ததாக இருந்தாலும் வெற்றி பெறும். புரிந்து படிக்கப்பட்டு உள்வாங்கப்படும். பெருமூச்சினூடே அடுத்த கல்லை எடுத்து வைத்து கட்டிடத்தை உறுதியாக்கும். ஞாபகத்தின் தொடர்ச்சிச் செயல் முறைமைகளும், வாழ்வியல் சிக்கல்களும், அனுபவங்களும் ஒரு படைப்பின் மூலம் புரிந்து கொள்ளப்படுகிற போது வாசகன் தன் உலகத்தின் வெறுமையைத் தவிர்த்துவிட்டு தன்னை விரிவாக்கிக் கொள்கிறான்.
            மீன் என்பதால்
            நீந்துகிறது
            நிறைய நீர்
            துள்ளி அலைகிறது அது.

            ஏதோ நிகழ்ந்து
            வடிகிறது குளம்
            நீந்த முடியாது மீன்

            மழை
            நிரம்பி வழிகிறது குளம்
            நீர்வெளி எங்கும்
            பாய்கிறது மீன்

            நீந்துவது
            நீரா... மீனா?
                        -.வை. பழனிச்சாமி (உடலோடும் உயிர்)

            நீர், மீன் இவற்றுக்கு இடையில் நீந்துதல் என்னும் நிகழும் உறவின் ஓட்டம் போல், படைப்பும் தன்னைப் புதுப்பித்து புதுத் தலைமுறை அனுபவங்களை உள் வாங்கும்.