சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 27 மே, 2015

இருள் சூழும் சுற்றுச்சூழல் : படித்ததில்

கார்ப்பரேட்களின் கனவு இல்லங்களாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாற்றப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் விதி முறைகளை மீறி, தொழில் வளர்ச்சி என்ற பெயரில்கார்ப்பரேட்களின் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீ காரம் அளிக்கிறது மோடி அரசு. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், தமிழ்நாடு, கோவா, கர்நாடகம் என்று 6 மாநிலங்களில் சுமார் 1600 கிலோமீட்டர் நீளத்திற்கு பரந்துவிரிந்திருக்கிறது.
மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 280 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுடன் உலகின் பல்லுயிர் வளம் மிக்க 8 பகுதியில் ஒன்றாகவும் திகழ்கிறது. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிறுவாணி, பவானி, நொய்யல் என தென் இந்தியாவின் முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும் இந்த மேற்கு தொடர்ச்சி மலை விளங்குகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள், பண்ணை வீடுகள், கேளிக்கை பூங்காக்கள், ஈஷா மையம் போன்ற ஆன்மிக தலங்கள் என கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமும், ஆக்கிர மிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் முப்போகம் விளைந்த மலையடிவார விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறி விட்டன. மலைப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப் படும் கான்கிரீட் காடுகளால் வன விலங்குகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. வலசை பாதைகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் திசைமாறி ஊருக்குள் நுழைய ஆரம் பிக்கின்றன. இதனால் மனித- விலங்கு மோதல் அன்றாட நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கிறது.
வனங்கள் அழிக்கப்பட்டு வருவதன் பாதிப் பினால் பருவம் தவறிய மழை, கடும் வெயில் என்றுபருவகால மாற்றங்கள் தொடர்ந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இன் றைக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த வெயிலின் கொடூரத்திற்கு வனங்கள் அழிக்கப்பட்டதும் ஒரு முக்கியக் காரணம் என்பதையும் மறுக்கவியலாது.
உலகின் மிகவும் மாசடைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன எனஐ.நா சுகாதார நிறுவனத்தின் ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் சுற்றுச்சூழல் அழிவின் பொருளாதார மதிப்பு நிகர உள்நாட்டு உற்பத்தியில் 5. 7 சதவிகிதம் என உலக வங்கி கூறுகிறது. இந்நிலையிலேயே தான் மோடி அரசு தொழில் வளர்ச்சிக்கு சுற்றுச் சூழல் அனுமதி மிகப்பெரிய தடையாக இருக்கிறது;அது உடைத்தெறியப்படும். தொழில் நிறுவனங்களுக்கு இலகுவான, அனுசரனை யான சட்டம் உருவாக்கப்படும் என அறிவித்து செயல்பட்டு வருகிறார்.
ஒட்டு மொத்தத்தில் மோடி சொல்லும் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்தியாவின் இயற்கை வளத்தின் அழிவு விகிதம்தான் அதிகமாக இருக்கும். அதன் மூலம் ஏற்படும் பாதிப்பை எந்த தொழில் வளர்ச்சியாலும் ஈடுகட்ட முடியாது. இந்திய இயற்கை வளப் பயன்பாட்டு சிக்கல் என்பது பற்றாக்குறை சார்ந்தது அல்ல. ஆளுகை, அணுகுமுறை சார்ந்தது; அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. நாம் அமைக்கும் தொழிற்சாலைகள் நமது தேவையை ஒட்டி அமைய வேண்டுமேயன்றி, லாபத்தை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடாது.
உணவுச் சங்கிலியின் ஆதாரமாக விளங்கும் மலைவளம், வன வளத்தையும் அழியாமல் காப்போம்.( தீக்கதிர்)