சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சிபாரிசு : ஒரு குறும்படம்

அது ஒரு செல்வம் கொழிக்கும் பணக்கார வீடு. அதில் பத்துப் பதினொரு வயதுடைய சிறுமி     லட்சுமி. வீட்டு வேலை செய்கிறாள். வீட்டில் ஒரு விருந்து. அதுவும் பிரியாணி விருந்து. லட்சுமி சமையலறைக்கு வந்தவள் பிரியாணிச்சட்டியைத் திறந்து பார்க்கிறாள். இன்னும் நிறைய இருக்கிறது. அவள் மனதில் சந்தோசப் பெருமூச்சு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் தண்ணீர் பரிமாறுகிறாள். அந்தப் பணக்காரக் குடும்பத்தின் பணக்கார நண்பர்கள், குடும்பத்தினரோடு உணவருந்திக் கொண்டிருக்கின்றனர். அதில் டாக்டர் ஒருவர். ஓர் அம்மா, சாப்பிட அடம் பிடிக்கும் தன் மகனுக்கு வலுக்கட்டாயமாகப் பிரியாணியை ஊட்டமல்லுக் கட்டுகிறாள். அந்நேரம் அங்கே வீட்டுஎஜமானியம்மாள் வருகிறாள். எல்லோரையும் நன்கு உணவருந்தச் சொல்கிறாள். அடம் பிடிக்கும் மகனின் தாயைக் கண்டு புன்னகைக்கிறாள். என்ன சாப்பிட அடம் பிடிக்கிறானா? என்கிறாள்.

அங்கு உணவருந்திக் கொண்டிருக்கும் டாக்டரைக் காட்டி, “என் மகளும் இப்படித்தான் அடம் பிடிப்பாள். நம்ம டாக்டர் தான் ஒரு டானிக் கொடுத்தார். இப்போ அவ நல்லா சாப்பிடுறாஎன்கிறாள். அந்த அம்மாவும் தன் மகனுக்கும் அதுபோன்ற ஒரு டானிக்கைத் தரும்படி டாக்டரை வேண்டுகிறாள். டாக்டரோ நானே அதைக் குடித்துவிட்டு வந்துதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்என்கிறார். இவளுக்குள் இந்த உரையாடல் கவனம் பெறுகிறது. இவள் வயதொத்த ஒரு பெண் அந்த விருந்தில் இலையில் பிரியாணி அருந்திக் கொண்டிருக்கிறாள். இவள் ஒதுங்கி நின்று கவனிக்கிறாள்.

சாப்பிட்டு முடித்த டாக்டர் கைகழுவும் இடத்திற்கு வந்து கைகழுவி நிமிர்கையில், லட்சுமி அவரிடம், ‘டாக்டர்என்று தயங்கித் தயங்கிஅழைக்கிறாள். அவர் என்னம்மா என்று கேட்க,டாக்டர் பசிக்காம இருக்க ஏதாச்சும் டானிக் இருக்கா டாக்டர், அதுவும் மூணு பேருக்கு வேணும். எனக்கு, என் தம்பிக்கு, என் அம்மாவுக்கு என்று கேட்கிறாள். டாக்டர் ஒரு கணம்திடுக்கிடுகிறார். அவருக்குள் விசனம் தலைதூக்குகிறது. அதற்குள் வீட்டு எஜமானி அம்மாவின் குரல்இலையைச் சுத்தம் செய்யச் சொல்லி ஒலிக்கிறது. இவள் சுத்தம் செய்யும் போது பார்க்கிறாள். இலைகளில் உணவு அப்படி அப்படியே கிடக்கிறது.

பாதிப் பாதி சாப்பிட்டு விட்டு, எழுந்து போனபின் மீந்த உணவுகள்.. ஒரு இலையில் கறித்துண்டுகளோடு, அப்படியே முழுமையாகக் கிடக்கிறது. இவளுக்குள் வீட்டு நினைவு. இருமிக் கொண்டிருக்கும் அம்மா. அக்கா சோறுஎன்றுகேட்கும் தம்பி. இவள் சட்டியில் உள்ள சிறிதளவு பழைய சோற்றை எடுத்து, தம்பியிடம் ஒரு தட்டில் வைத்து, ஊறுகாய்ப் பொட்டலத்தில் இருந்து சிறிது ஊறுகாயை நுனியில் தடவி விடுகிறாள். அம்மாவுக்கும் அதே மாதிரி. மீதமுள்ளவற்றைச் சுரண்டி இவள் தட்டில் போடுகிறாள். ஒரு வாய்எடுத்து வைக்கும் போது, தம்பியிடம் இருந்து மீண்டும் குரல், ‘அக்கா சோறு’. இவள் தட்டிலிருப்பதை அப்படியே அவனுக்குத் தருகிறாள்.

அம்மா இவளுக்குத் தர இவளோ மறுத்து, முதலாளி வீட்டில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்கிறாள். சொம்பிலிருந்த தண்ணீரைக் குடித்துப் பசியாற்றுகிறாள். இப்போது மன வலியோடு இலைகளை அள்ளிக் கூடையில் போடுகிறாள். அவற்றைச் சுமந்து சென்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வருகிறாள். மதியம் மூன்று மணி இவள் தம்பியை ஒத்த முதலாளியம்மாவின் குழந்தை சோபாவில்படுத்துறங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளிஅம்மாவும், அவளது கணவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவள் பசியோடுமாடிப்படிக்கட்டருகில் நின்று கொண்டிருக்கிறாள். குழந்தை சாப்பிட்டு விட்டாளா என்கிறார் கணவர். அவள் அப்பவே சாப்பிட்டுத் தூங்கிவிட்டாள் என்கிறாள் முதலாளியம்மா.

கணவர் ஓய்வெடுக்கச் செல்ல, இவளைப் பார்க்கும் முதலாளியம்மாள், “ஏய், போய்த் தட்டெடுத்துட்டு வாஎன்கிறாள். இவள் முகத்தில் புன்னகை மலர வேகமாக ஓடிச் சென்று தன்னுடைய சாப்பாட்டுத் தட்டை எடுத்து வருகிறாள். சனியனே மெதுவா வாஎன்றபடியே பிரியாணிச்சட்டியில் மீந்திருந்த பிரியாணியைச் சுரண்டி இவள் தட்டில் போடுகிறாள். அப்புறம் ஒட்டச் சுரண்ட அடிப்பிடித்துச் சற்று நிறம் கருத்த பிரியாணி வருகிறது. சட்டியிலுள்ள எல்லாமும் சுரண்டிப் போட்ட முதலாளியம்மா, “இதக் கொண்டுபோய் டாமிக்குக்(நாய்க்கு) குடுஎன்கிறாள். இவள் உடைந்து நொறுங்கிப் போகிறாள். ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்புடாம இருக்கான், இதையாவது சாப்புட்றானான்னு பாப்போம். எடுத்துட்டுப் போஎன்கிறாள் முதலாளியம்மா. இவள் கண்கலங்கிப் பார்க்க, “ஏண்டி நின்னுக்கிட்டு இருக்கே விறுவிறுன்னு போன்னு விரட்டுகிறாள் முதலாளியம்மாள். இவள் மனவலியோடு நாயை நோக்கி நகர்கிறாள். நாய் சாப்பிடும் சட்டியில் தன் வட்டில் பிரியாணியைக் கொட்டுகிறாள். நாய் எழுந்து வந்து சாப்பிடுகிறது. அதுவும் பாதி தின்றுவிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு மூலையில் போய் முடங்கிப்படுத்துக் கொள்கிறது. இவளுள் ஆயிரம் துன்பம் பெருக்கெடுக்கிறது. ஓர் உயர்சாதி நாய்க்குக் கிடைக்கிற மரியாதைகூட ஏழை சாதியான எனக்கு?” என்று அவளுள்கிளைத்தெழுகிறது கேள்வி. அவள் முகத்தில் இருள் கவிகிறது. படம் முடிகிறது.கேள்வி நம்முள் பற்றிப் படருகின்றது.லட்சுமிஎன்கிற சுமார் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் தமிழ்க் குறும்படம் விஜயவர்மன் இயக்கியதாகும். பாக்யாஞ்சலி குளோபல் மீடியாதயாரித்துள்ள இந்தப்படம், மெலோ டிராமாவகையைச் சார்ந்ததாக இருப்பினும், இசை,கேமிரா என்று எல்லாவற்றிலும் சுமார் தரத்தில்இருந்தாலும், படத்தின் கருப்பொருள் பார்ப்பவருள் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைத் தொழிலாளர்களின் அதுவும் வீட்டு வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களின் ஒரு முகத்தைப் பட்டவர்த்தனமாக்குகின்றது. வர்க்கம், சாதி இரண்டும் கலந்த மயக்கமான நமது சமூக அமைப்பில் கீழ்த்தட்டினரின் உழைப்பு, அதுவும் வறுமையின்பாற்பட்ட குழந்தை உழைப்பு மேல் தட்டினரால் ஈவு இரக்கமின்றி மனிதத்துவமின்றி உறிஞ்சப்படுவதை, இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகளில் கீழ்த்தட்டுக் குழந்தைகள் சிதைவுறுவதைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது.குழந்தை உழைப்புச் சட்டத்தில் அயோக்கியத்தனமான திருத்தம் கொண்டு வரும் மோடித்தனங்கள் இந்தப்படத்தின் வாயிலாகப் பல்லிளிக்கின்றன. படம் ஒரு பரிதாபத் தன்மையை விளைவிக்கும் நோக்கோடு எடுக்கப்பட்டிருந்தாலும், அதனையும் மீறி, சமூகத்தின் வர்க்க வேறுபாடுகள் துல்லியமாகின்றன. இருவேறு உலகத்துஇயற்கை தெளிவாகப் பதிவாகியுள்ளது. மனிதரைச் சாதிகளாகச் சிதைத்து மேல் கீழாகப் பன்னெடுங்காலம் அடுக்கி வைத்து, அடக்கி வைத்த சமூகத்துள், வர்க்க வேறுபாடுகளும் ஊடறுத்தபடி தன் சிதைவுகளை நிகழ்த்தும் தன்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பணம் மனிதத்தை மறந்ததைப் பட்டவர்த்தனமாக்குகிறது. ( நன்றி தீக்கதிர்)