சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 9 ஆகஸ்ட், 2017

Review by Subrabharathimanian : Kadal marangal book

                                    காலத்தால் மாற்ற முடியாத புண்கள் :
வெள்ளியோடனின் “ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு

                                                         - சுப்ரபாரதிமணியன் 


வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்கள் வாசிப்பில் வெகு சுவாரஸ்யம் கொண்டதற்குக் காரணம் அந்தந்த நாடுகளின் வேறுபாடான கலாச்சார அம்சங்களும் அனுபவங்களும். மலையாள படைப்பிலக்கியத்தில் வெளிநாட்டு அனுபவக்கதைகள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது . ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்லலாம்.அதற்க்குக்காரணம், கணிசமான அளவில் கேரளத்துக்கார்ர்கள் வளைகுடா உட்பட வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமீபத்தில்         “ ஆடு ஜீவிதம் “ என்ற நாவல் 1 லட்சம் பிரதி  விற்றிருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி ( இதைத் தமிழில் உயிர்மெய் வெளியிட்டுள்ளது )
வெள்ளியோடன் கேரளத்துக்காரர். வெளிநாட்டில் வசிக்கிறார்.  வெள்ளியோடன் இலங்கை, தாய்லந்து, ஈரான், பர்மா  போன்ற நாடுகளின் களத்தில் பல சிறுகதைகளை இத்தொகுப்பில் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். கூடவே இந்தியாவில் கேரளா, பம்பாய் சார்ந்த கதைகளையும்.
இதன் தலைப்பை மையமாக்க் கொண்ட கதை ஏதோவொரு வகையில் அகதியாக்கப்பட்ட  இந்தியர்களையோ, மற்ற் நாட்டினரையோ பொதுமைப்படுத்தியிருக்கிறது எனலாம். எந்த எல்லையை அடைவது, எங்காவது அடைக்கலம் பெற வேண்டும் என்று  படகில் அலையும் மனிதர்களைப்பற்றிப் பேசுகிறது. இந்நூற்றாண்டு அகதிகளின் நூற்றாண்டாக உலகம் முழுக்க அகதிகளைக் கொண்டிருப்பதை குறியீடாக்கியிருக்கிறது. உலகளவிலான மலையாள எழுத்தாளர்களுக்கான் ஒரு போட்டியில் முக்கியப் பரிசு பெற்றது இக்கதை எனபது குறிப்பிடத்தக்கது.  ஒரு  முதிய எழுத்தாளரை மையமாகக் கொண்ட கதையில் வாழ்வு பற்றிய பல விசாரணைகள் உள்ளன. வயதான அரபு நாட்டவர்கள் இங்கு வந்து இளம் பெண்களை மணந்து விட்டு கர்ப்பம் அடைந்த பின்போ, வியாபார நிமித்தம் முடிந்த பின்போ இளம் பெண்களை கைவிட்டுப்போகிற அவலத்தை சொல்லும் முத்அ  இதெல்லாம் தமிழ் நாட்டில் இல்லையென்று சொல்வது தவறானதுதான். ஆனால் கேரளா அளவு பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் .
இதில் பலகதைகள் உலகளவிலான பல அரசியல் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றன என்பது முக்கியமானது.ஈராக், பாலஸ்தீனம், ஈழம், உட்பட பல விசயங்கள் தொடப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுக்களத்தில் சொல்லப்பட்ட மஜாஜ் கதையைச் சொல்லக்கூட  பெரும்பான்மையோருக்கு தயக்கம், கூச்சம் இருப்பதை உடைக்கிறது.  அக்கதையின் பிரதி அரசியல் சார்ந்த உரையாடலாக ஒரு பெண்ணுடன் அமைந்திருக்கிறது. அக்கதையின் இறுதியில் வெளிப்படும் மஜாஜ் செய்யும் பெண்ணின் செயற்கை மார்பகத் தகவல்கள் போல் அந்த உரையாடலில் பல அரசியல் சார்ந்த அதிர்ச்சிகள் உள்ளன.  
ஈழத்துத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் பற்றியக் கதையில் ( மரண வேர்) இது போல் ஈழம் அரசியல் பிரச்சினைகள் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அக்கதையினை கேரள அரசு சார்ந்த கிரந்த லோகம்  “என்ற இதழ் வெளியிட்டிருப்பது  மலையாளச்சூழலில் எழுத்தாளனின் சுதந்திரம் பற்றிக் கொண்டாட வைக்கிறது.. சிங்கள் இனவாதத்தின் உச்சம் பற்றி பேசும் அக்கதை போல் பல கதைகள் வெவ்வேறு நாடுகளின் எதேச்சதிகாரம் பற்றிப் பேசுகின்றன கதாபாத்திரங்களின் உரையாடல் மூலம்.
இக்கதைகளின் ஊடாகத் தென்படும் வன்முறை பல வடிவங்களில் தென்படுகிறது.  வயதான அரபு நாட்டவர்கள்  இளம் பெண்களின் மீது செலுத்தும் பாலியல் விசயம் கூட அவ்வகையில் வன்முறையானதே.  ஆசிரமத்திலிருந்து பாலியல் தொல்லைகளால் வெளியேறும் பெண் இணையதள நட்பால் ஒருவனிடம் மாட்டிக் கொள்ளும் அவலம்  ( பலி ) இந்த வன்முறையின் உச்சமாக உள்ளது. இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்களே என்று தயக்கமில்லாமலும் ஒரு கதை வடிவமைக்கிறது.நிராகரிக்கப்படும் தேசிய இனங்களின் சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். ( சிரியர்களின் விசா பிரச்சினை சான்று-சாறுண்ணி  ),. கதைகளோடு இயைந்து போயிருக்கிற முஸ்லீம் கலாச்சார வார்த்தைகள், தொன்மங்கள் இவரின் உரைநடையில் பலம் சேர்க்கிரது.  பல கதைகள் அரசியல் சமூகம் சார்ந்த விமர்சனங்களாக அமைந்துள்ளன. அதில் தமிழனும் அவனின் மொழி பற்றிய அக்கறையின்மை, சின்னத்திரை ஈர்ப்பு போன்றவை விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.தமிழ்மொழிபெயர்ப்பில் இருக்கும் தவறுகள்  கலாச்சாரக்குழப்பங்களாகி விடுகின்றன..பல இடங்களில் கவித்துவ வார்த்தைகள் மினுங்கி உள்ளிழுக்கின்றன. இக்கதைகளை தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ஆர். முத்துமணி. கேரளத்தில் வசிக்கும் தமிழர். நடைபாதை வியாபாரி.
         காலத்தால் மாற்ற முடியாத புண்கள் உண்டா ( சிண்ட்ரெல்லா )  என்று ஒரு கதை  கேட்கிறது. அவ்வகைப்புண்கள் மலையாளிகளின் பார்வையில் மலிந்திருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. 
( வெள்ளியோடனின் “ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு.
முதற்சங்கு பதிப்பகம், 19 மீட் தெரு , கல்லூரி சாலை , நாகர்கோயில் 1 (94420 08269 ) 88 பக்கங்கள் 70 ரூபாய்- )

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003




 .