சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 25 டிசம்பர், 2017

போருக்குப் பின்னே ...
இரா.உதயணன்  எழுதிய வலியின் சுமைகள்  சமீபத்திய நாவல்.
சுப்ரபாரதிமணியன்

போர்க்கால இலக்கியம் என்ற பிரிவில் ஈழத்தில் நடைபெற்ற போருக்கு முன்பும்
போரின் போதும் நடந்தவற்றை பதிவு செய்து நிறைய  படைப்பிலக்கிய முயற்சிகள்
சமீப ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.போருக்குப் பின்பான நடவடிக்கைகள், அந்த
மக்களின் வாழ்க்கையை அழுத்தமான பதிவுகள் மூலம் வ்வுனியூர் இரா.உதயணன்
வெளிப்பட்டு வருகிறார். அதிலொன்றுதான் வலியின் சுமைகள்  என்ற அவரின்
சமீபத்திய நாவலாகும்.
போர்க்காலத்தில் உயிர் ஆசை காரணமாக ஈழத்தை விட்டுச் சென்றவர்கள் மேல்
சுமத்தப்படும் வசவுகளைச் சுமந்து கொண்டு அவர்கள் புழுக்களாய் நெளிவதையும்
சொல்லியிருக்கிறார், போருக்குப் பணம் தந்தவர்கள் அதற்குப் பின்னான ஈழத்து
வாழ்க்கை பற்றியும் அக்கறை கொண்டிருக்க வேண்டிய அவசியங்கள் பற்றியும்
கேள்விகள் எழுப்புகிறார். அதன் பின் ஏற்பட்டிருக்கும் கலாச்சார
சீரழிவிற்கு  அவர்களின் உதவி இல்லாததும் ஒரு காரணம் என்று குற்றம்
சாட்டப்படுகிறது.இது ஒரு புதிய கோணத்தில் பிரச்சினைகளை அணுக வைக்கிறது.
இன்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனிநாடு கேட்கும் நமது மக்கள்
அங்கே நமது மண்ணில் வாழும் மக்களைப் பற்றிச் சிந்திக்கா விட்டால்
எமக்கென்று ஒரு தீர்வு கிடைக்கும் நேரம் எமது மண்ணில் வாழும் தமிழ் இனம்
மற்றைய சிறுபான்மை இளைஞர்ககளை விட  எண்ணிக்கையில் குறைந்ததாகி
எமக்கென்றிருந்த கலாச்சாரத்தை இழந்த இனமாக மாறி விடும் என்று நினைத்த
போது வரும் எண்ணங்களும் அவர்களுள் உறுத்தல்களைக் கிளப்புகின்றன.
 “ போர் நடந்தா நாட்டை விட்டு ஓடிப் போவீங்க. போர் முடிஞ்சா திரும்ப
எங்கட நாடு என்று சொல்லிக் கொண்டு ஓடி வருவீங்கள் என்று சாட்டையடி
கேள்விகள் கேட்கப்படுகின்றன. இலங்கைத் தமிழன் என்ற சொந்த அடையாளத்தை
இழந்துவிட்டு பிரிட்டிஷ் பிரஜையாக சொந்த நாட்டிற்குப் போக வேண்டிய
அவலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள்
அப்படி ஊர் திரும்பியவர்களை அதிகாரிகளால் கேட்கப்படும் கேள்விகள்
விசாரணைகள் அவர்களை அதிர வைக்கின்றன. சொந்த ஊருக்கு வருவது தப்பா.
உறவுகளைப் பார்க்க வருவது பிழையா என்று தங்களுக்குள் கேள்விகள் எழுப்பிக்
கொள்ள வேண்டியிருக்கிறது. தங்கள் நாடு என்று சொல்லிக் கொள்ளும் போது
இது ஒரு பவுத்த நாடு . உங்கள் நாடு என்று எப்படி சொல்ல முடியும்
என்றும் கேட்கப்படுகிறது . நானும் இலங்கைதான் பிறந்து வளர்ந்தனன். என்ர
பெற்றோரும் இங்கைதான் பிறந்தவைகள் “ “ நீங்கள் இந்த நாட்டிலை
பிரந்திருந்தால் இந்த நாட்டுப் பற்று இருந்தால் ஏன் இந்த நாட்டை விட்டு
ஓட வேண்டும். நாட்டைப் பிரிக்க போராடியவர்களுக்கு எதிராய் போராடி
இருக்கலாமேஎன்ற கேள்விகளால் நிலைகுலைந்து போகிறார்கள்.
அங்கு எந்த வகையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள்.இது ஒரு உதாரணம்; “
இங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாட்டினை விட்டு ஓடிப்போய்
அங்கு வாழும் சிலருக்கு தாங்களும் வெள்ளைக்காரகள் என்ற நினைப்பு உண்டு.
இதை ஒரு அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பிள்ளைகள்
தமிழில் பேசினால் பிடிக்காது  எந்த நேரமும் ஆங்கிலத்தில் தான் பேச
வேண்டும். தமிழில் வெளியில் பேசினால் தங்களுக்கு ஒரு கவுரவக்க்குறைவு
இவ்வகையான உறுத்தல்களைச் சுமந்து கொண்டுதான் தன் சொந்த் மண்ணில் உள்ள
உறவுகள்எவர் எவர் மிஞ்சி இருக்கிறார்கள், எவர் பிச்சைக்காரர்களாக
மாறிப் போயிருக்கிறார்கள், எவர் ஊனமுற்றோராக இருக்கிறார்கள், எவர் சாவின்
விளிம்பில் இருக்கிறார்கள் என்பதைக்காணும் பயணமாகத்தான் பிரவீனுக்கும்
லண்டனிலிருந்து அப்பயணம் அமைகிறது.
 “ வரும் போது துணையோடு வரவேண்டும்என்ற நண்பர்களின் அறிவுரை  வேறு
அவனைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . ஆனால் புலம்பெயர்ந்தவர்கள்
ஈழத்திற்கு வந்து பெண்களை திருமணம் செய்து விட்டு ஏமாற்றிச் செல்லும்
அவஸ்தை வள்ளி பெண் போன்றவற்றால் காட்டப்பட்டிருக்கிறது. கவுசல்யாவின்
காதலன் போராளி போரில் சாகிறான். அவளுக்கு மறுவாழ்வு தர பிரவீன் எண்ணும்
போது வள்ளி பெண்ணின் துயரம் முன்வைக்கப்படுகிறது. செழியன் போன்ற
போராளிகள் போருக்குப் பின் விரக்தியில் குடிகாரர்களாகவும்
பிச்சைக்காரர்களாகவும் ஆகிறார்கள்.  ஆனால் மனமாற்றங்கள் எல்லோரிடமும்
நிகழ்கிறது. கவுசல்யா விடுதி ஒன்றில் நடனமாடுபவளாக தன்
குழந்தையைக்காப்பாற்ற செய்யும் வேலையை உதறி விட்டு பிரவிண் மீது
நம்பிக்கை வைத்து திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறாள். செழியன் தன்
விரக்தி நிலையிலிருந்து பிரவின் போன்றவர்களின் அறிவுரையால்  சகஜ
வாழ்க்கைகுத் திரும்ம்புகிறார்கள். போருக்குப் பின்னதாக விதவைகளின் மறு
வாழ்க்கை பற்றி முன்பே பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார் உதயணன். அதை இந்த
நாவலிலும் நீட்சியாகக் கொண்டிருக்கிறார்.
ஒரு விதவையானவள் வாழ்க்கை என்ற போராட்டத்தில் சாதாரணப் பெண்களை விட
எவ்வளவு போராட வேண்டியிருக்கு என்பது உனக்குப் புரியுமா அக்கா.. கசப்பான
வார்த்தைகளும் ஏளனமான காமப்பார்வைகளும் காம இச்சையைத் தீர்க்க விதவைகளை
வற்புறுத்தும் காமுகர்களும் இந்த வன்னியிலே போருக்குப் பின் அதிகமாக
நடமாடத் துவங்கியிருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரிந்திருந்தும்  நான்
சிறுவயதிலிருந்து விரும்பிய கவ்சல்யா என்ற விதவையை மணம் முடிபதில் என்ன
தப்பு இருக்கிறது அக்கா. நான் எனக்குள்ளேயே காதலித்தவளுக்காக எத்தனை
சொல்லடிகள்,” என்கிறான்.யுத்த காலத்திற்குப்பின் வன்னிப்பகுதியில்
மட்டும் அரை லட்சம் இளம் விதவைகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு பெரும்
சவலாக இருக்கிறார்கள். அவர்களீன் மறுமணம், வாழ்வாதார உதவிகள் முக்கிய
உதவிகளாக இன்று தெரிகின்றன. வெறுப்புகள் கசப்பான அனுபவங்களின் மையமாகி
விரிகிறது.. அவனுடன் படித்த பலர் மாவீரர்களாவி விட்டதற்கான மறு அஞ்சலியாக
 தன்னைச் சுற்றியிருக்கும் பலருக்கும் உதவி செய்யும்  அவனின் நோக்கில்
அவன் உயர்ந்து நிற்கிறான். சாகசகாரனாக இல்லாமல் சாதாரண மனிதனாகவே..
      இவ்வகை போர்க்கால, அதன் பின்னதான் இலக்கியப்பிரதிகளைப் படிக்கும்
போது வாசகன் வெகுண்டெழுவதும் எழுச்சிபெறுவதும் நிகழக்கூடும் . இதில்
கற்பனைப் பிரதி இணையவே வாய்ப்பில்லை.. வாதங்களும் தர்க்கங்களும்
பிரச்சினைகள் சார்ந்து எழுவது வழக்கம். இதை உதயணனும் கையாண்டிருக்கிறார்.
வடிவம் என்பது யதார்த்தக் கதை சொல்லும் அம்சமாகவே இருந்தாலும் குறுக்கும்
நெடுக்குமாக வேறு பிரதிகளும் ஓடிக்கொண்டிருக்கும். சமகாலத்தோடு வாசகன்
தொடர்ந்து தொடர்பு கொண்டு இலக்கிய வாசிப்பை கடத்துவான். நவீன உலகில்
இழந்து போன தனிமனித சுதந்திரம் சார்ந்து இதில் வரும் கதாபாத்திரங்கள்
ஒடுங்கிப் போகிறார்கள்.  இந்த வடிவமைப்பு வெளிபடையாக பிரச்சாரத் தன்மை
கொள்ளாமல்  அரசியல் சார்பை முழுக்க வெளிப்படுத்தாமல் பல வகைகளில்
மவுனத்தின் ஊடாக் செல்கிறது.பல கதாபாத்திரங்கள் தாங்கள் எதிர்கொள்ளும்
பிரசினைகள், பிரச்சினைகள் எதிர்கொண்டு ஒடுங்கிப்போனது ஆகியவற்றால் அவை
வெகுண்டெழ சாத்தியங்கள் உள்ளன.  ஆனால் அவ்வாறு அமையாமல் அடிமனதின்
சலனங்களாகவே அமைந்திருக்கிறது இந்நாவல்

( வ்வுனியூர் இரா.உதயணன்  எழுதிய வலியின் சுமைகள்  நாவல், இலங்கை
தமிழ் இலக்கிய நிறுவகம், மொழும்பு