சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 26 டிசம்பர், 2018

சுப்ரபாரதிமணியன் : அலைவு இலக்கியம்  பற்றிய அலசல்
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ( பனுவல்களும் மதிப்பீடுகளும்)

ஆசிரியர்.:  முனைவர் பா. ஆனந்த குமார் .என்சிபிஎச் வெளியீடு-
ஈழப்பிரச்ச்சினைக்குப்பின் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் படைப்பிலக்கிய முயற்சிகளால் தமிழ் இலக்கியப் படைப்புகளில்  புலம் பெயர்ந்தோர் இலக்கிய வகை காத்திரமான இடத்தை அடைந்துள்ளது. அது ஒருவகையில் ஈழத்துத் தமிழிலக்கிய மரபின் தொடர்ச்சியாக விளங்குகிறது. ஆரம்பத்தில் டொமினிக்ஜீவா, டேனியல், செ.கணேசலிங்கன், கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரே அறியப்பட்ட நிலையில் இன்றைக்கு எண்ணற்றப்படைப்பாளிகள் எழுதி  வருகிறார்கள்.புலம்பெயர்ந்த இலக்கியத்தின் ஆரம்ப கால முயற்சிகளின் தேடலை காலனி ஆட்சியிலிருந்து தொடங்கி இந்நூற்றாண்டின் தீவிரமான முயற்சிகள் வரை அறிமுகப்படுத்தும் நூலாக இது விளங்குகிறது. இதில் புலம்பெயர்ந்தோரின் கவிதைகள், சிறுகதைகள் மூலம் அவர்களின் புலம் பெயர்வு வாழ்க்கை பற்றிய இலக்கியப்படைப்புகளை பேரா. ஆனந்தகுமார் எடுத்துக்காட்டுகிறார்.. நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை.அது விரிவான தளம் .
புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் அயல்நிலம் ,தாய்நிலம் என்ற கண்ணிகள் விரவிக்கிடப்பதை பல கவிதைகளின் மூலம் எடுத்துக் காட்டிர்யிருக்கிறார். அகதிகள் வாழ்நிலை அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.பல நாடுகளில் அடிமைத்தனமும் நிறவெறியும் அவர்களைச் சிறுமைப்படுத்தியிருப்பதை மேற்கோள்கள் மூலம் காட்டுகிறார்,இதில் பெண்ணுரிமை சார்ந்த குரல் குறிப்பிடத்தக்கதாயும் விளங்கிகிறது.இந்த வகையில் வ.அய்.ச.ஜெயபாலன் , கலாமோகன், தீபச்செல்வன் முதற்கொண்டு தமிழ்நதி ., மல்லிகா வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
 புகலிட இலக்கியத்தில்( அலைவு இலக்கியம் ) சிறுகதைகளின் பங்கு முக்கியமானது.அவை யாதார்த்தப்பாணி, பின்நவீனத்துவப்பாணியில் அமைந்திருப்பதை வகைப்படுத்துகிறார்.படித்தவர்களாக இருந்தாலும் கூலி உழைப்பில் அவர்கள் ஈடுபடுவதைச் சுட்டிக்காடுவது ஒரு முக்கிய அம்சம்.நாடு, தெருக்கள் அல்லாத மிதவை வெளியில் அவர்கள் வாழ்கிறார்கள் என்கிறார் ஆசிரியர். புலம்பெயர்ந்தவர்களின் தேசியம் மற்றும் சமீபத்திய நாடு கடந்த தேசியம் பற்றிய அவதானிப்புகளும் இதில் உள்ளன.   நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை  இதோடு தொட்ர்புடைய மீரான் மைதீனின் நாவ்ல்களில் இந்த அம்சங்கள் இருப்பதை ஊடாகக் காட்டுகிறார். இந்த வகையில் கலாமோகன் முதற்கொண்டு அ.முத்துலிங்கம், மாத்தளை சோமு , வரை பலரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.போர் சூழல், அகதி வாழ்க்கை, கயறு நிலை போன்றவற்றை அவை கோடிட்டாலும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை லவுகீக வாழ்க்கையில அதன் தாக்கம் பற்றிய மாறுபட்டப் பார்வையைச் சொல்கிறது.மாத்தளைசோமுவின் சிறுகதையில் தோட்டத்தில் உழைத்து அங்கேயே செத்தவர்களைப் புதைப்பதற்கு இட தேடும் அவலம் தமிழர்களின் அவலக்குறியீடாய் இன்னொரு கோணத்தில்  அமைந்திருக்கிறது. 1980ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்ட்த்தில் இடம்பெற்ற போத்திரெட்டியின் அயலஇலக்கியம் நூல் ஆரம்ப முயற்சி.. அதன் நீட்சியாகவும் ஆழமாகவும் தீவிரமாகப்பயணப்பட்டிருக்கிறது இந்நூல் . அந்த வகையில் கவிதை, சிறுகதை தவிர்த்து நாவல், நாடகம், சுயசரிதம்  உட்பட பல பிரிவுகள் பற்றியவை  இந்நூலில்  இடம்பெறவில்லை
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ( பனுவல்களும் மதிப்பீடுகளும்)
ஆசிரியர். முனைவர் பா. ஆனந்த குமார் .என்சிபிஎச் வெளியீடு- ரூ 80 பக்கங்கள் 94
சுப்ரபாரதிமணியன்


3 அபிப்ராயங்கள் :

ஜெயமோகன் : .
சுப்ரபாரதிமணியனை எனக்கு அவர் ஹைதராபாதில் இருக்கும் போதே தெரியும். இருவரும் ஒரே ஆண்டில்  ஜனாதிபதி வழங்கிய கதா விருதை ’’ ப் பெற்றோம்.  தொடர்ச்சியாக கடிதங்கள் வழியாக இலக்கிய உரையாடலில் இருந்தோம். அவர் கனவு “ என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். நான் அதில் பங்குபெற்றேன்.
அப்போதுதான் தமிழில் மிகைபுனைவு எழுத்துமுறைகள் பெரும் ஆர்வத்துடன் அறிமுகமாயின. நேர்கோடற்ற எழுத்துமுறை ஆவேசத்துடன் முன்வைக்கப்பட்டது. மொழி திருகலாக இருந்தால்தான் அது எழுத்து என்னும் எண்ணம் சிறிய சூழலில் வலுப்பெற்றது.
நானும் அந்த அலையில் ஆர்வம்கொண்டிருந்தேன். நேர்கோடற்ற கதைசொல்லும் முறை, மிகைபுனைவு, படிமங்கள்செறிந்த மொழி ஆகியவை எனக்கு அன்றும் இன்றும் உவப்பானவை. ஆனால் அதையே ஒரே எழுத்துமுறையாகக் கொள்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.
அன்று அசோகமித்திரனை எளிமையான யதார்த்தவாத எழுத்தாளர்என நிராகரிக்கும் ஒரு மனநிலை நிலவியது . அதற்கேற்ப அசோகமித்திரன் அன்று சாவி போன்ற வணிக இதழ்களில் சாதாரணமான பல கதைகளை எழுதிக்கொண்டும் இருந்தார். சிற்றிதழ்சாந்த இலக்கியம் அவரைக் கடந்து நெடுந்தூரம் சென்றுவிட்டது என்ற பேச்சு அன்றைய இலக்கியச்சூழலில் அதிக ஓசையிட்டவர்களால் அடிக்கடி முன்வைக்கப்பட்டது
ஆனால் அசோகமித்திரன் தமிழிலக்கியத்தில் ஒரு சிகரம் என்னும் எண்ணம் எனக்கிருந்தது.  மௌனமாகச் சொல்லப்பட்ட அவரது கதைகள் வாசகனின் கூர்ந்த கவனிப்பைக் கோருபவை என்று வாதிட்டேன்
அதை சுப்ரபாரதிமணியனிடம் சொன்னேன். அவரும் அசோகமித்திரன் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அசோகமித்திரனுக்கு அப்போது அறுபது வயதாகியது. அதையொட்டி அவருக்காக ஒரு மலர் வெளியிடலாமென நினைத்தோம். நான் பலரிடம் கட்டுரைகள் கோரி பெற்று ஒருவழியாக ஒரு விமர்சன மலரைத் தயாரித்தேன்.
அது பரவலாகக் கவனிக்கப்பட்டது. உண்மையில் இலக்கியத்தில் ஒரு திசைமாற்றத்தை உருவாக்கியது. அசோகமித்திரன் மீதான கவனம் மீண்டும் வலுவாக உருவாகியது.
அவரின் முதல் நாவல் மற்றும் சிலர் “ குறிப்பிடத்தக்கது.:

மற்றும் சிலர் “ நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம்  உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது  தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது  நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில்  ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும்.  இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன.  ஆற்றூர் ரவிவர்மாசார் நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது என்றார். பாராட்டக்கூடிய முயற்சி.  எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்  அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே.  சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----




சுப்ரபாரதிமணியன்  நாவல்கள் : முருகேசபாண்டியன்: சமூகப் போராளியாக அவரின் 15 நாவல்கள் இன்றைய சூழலின் விமர்சனங்களாக வெளிப்பட்டுள்ளன, சமகாலப்பிரதிபலிப்பு, உலகமயமாக்கலின் நாசம் , விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று வெவ்வேறு தளப் பரிமாணங்களில் கலைத்தன்மையுடன் எழுதி வெற்றி கண்டிருக்கிறார்.இவரின் குரல் கார்ப்பரேட் உலகின் வன்முறைக்கு எதிரான முக்கியமான குரல்.விளிம்பு நிலை மக்களின் குரல்
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் :, சு.வேணு கோபால் ,
250  சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும். பலவகை அனுபவங்கள், பெண்களின் இயல்புகள், பிரச்சினைகள். சுற்றுச்சூழல், சாதாரண மக்களின் இயல்புகள், நிலத்தோடு தொடர்புடைய அனுபவங்கள்., மனிதர்களின் தன் வெறுப்பு, வன்மம் என்று விரிவான தளங்களில் உளவியலோடு ஊடாடி இருக்கிறார். சிறுகதைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன அவரின்  ......
தொடர்ந்த இயக்கத்தால் . சில சிறந்த சிறுகதைகள்:

ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும், மிச்சம், எதிப்பதியம், கை குலுக்க சில சந்தர்ப்பங்கள்,விமோசம், வாக்கு.., தொலைந்து போனக் கோப்புகள்......
நம்மாழ்வார் நினைவு தினம்  இன்று டிச.31
காலம் தந்த வேளாண் போராளி
எனது சாயத்திரைநாவலின் ( திருப்பூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய நாவல்). ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்குச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு நம்மாழ்வார் அய்யாவும் வந்திருந்தார் ( தி கலர்டு கர்டெய்ன்என்றத் தலைப்பில் அது ஆங்கிலத்தில் டாக்டர் ராஜ்ஜா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது). அந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோவை கூட்டமொன்றில் அவரைச் சந்தி்த்த போது அது கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்திருப்பதை அறிந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நீங்கள் சாயத்திரை நாவலில் எழும்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன. தீர்வுகள் கிடைத்தபாடில்லைஎன்றார்.
     தீர்வு, மாற்றம் குறித்து அக்கறை கொண்டால் அந்த மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக அவர் இருந்தார். ரசாயன உரங்கள் பற்றிய பிரச்சாரம், பசுமைப் புரட்சி போன்றவற்றை தன் அரசு தொழில் சார்ந்து இயங்குதலில் முரண்பாடு கொண்டு அரசு பதவியிலிருந்து வெளியேறியவர் நம்மாழ்வார். அதன் பின் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரிந்தாலும் சுதந்திரமானப் போக்கையே மனதில் கொண்டு மனதில் கொண்டு செயல்பட்டவர்.
     இந்திய வேளாண்மை முறையில் அதிகம் பேசப்பட்ட பசுமை புரட்சிஏற்படுத்திய மோசமான விளைவுகள், ரசாயனம் சார்ந்த உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் பொதுவுடைமை இயக்க வட்டாரங்களுக்கு  வெளியில்தான் பெருமளவில் நடந்தன. என் சாயத்திரைநாவல் பற்றி பொதுவுடைமை சார்ந்த எழுத்தாளர் ஒருவர் திருப்பூர் கூட்டமொன்றில் தன் கட்சி சார்ந்த இலக்கிய பிரிவின் விவாதத்தில் எடுத்துக் கொண்டு சாயத்திரைநாவல் பற்றிய மையத்தை பொதுவுடைமை  கட்சி சார்ந்த உள்ளூர் எழுத்தாளர்கள் அதற்கு முன் நாவல் என்ற அளவில் கைக் கொள்ளாததும்,அந்த நாவல் வந்த பின் அதை முன் எடுத்துப் பேசாததும் குறித்து விவாதத்தை எழுப்பியிருக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பெரிதுபடுத்தி 10,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும்தொழிலாளர் நலத்தையும் புறக்கணித்து முன் செல்ல முடியாது என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது. இது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சனைகளின் மீதான் பொதுவுடைமை இயக்கவாதிகளின் முன்னெடுப்புகள் இருந்தன. இந்தச் சூழலில்தான் மண்மீதும், இயற்கை வேளாண்மையை முன் வைத்தும் நம்மாழ்வார் தனது செயல்பாடுகளயும், பரப்புரைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். கிராம் அனுபவங்களும், கிராமந்தோறும் சென்று நுண்ணறிவால் சேகரித்துக் கொண்டதையும் உலக அளவில பேசப்பட்ட ஜப்பானிய புகோகோவின் ஒற்றை ஐக்கோல் புரட்சி நூலும், ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் நூலும் அவரை முன்னெடுத்திச் செல்ல பயன்பட்டன. மரபணு மாற்றப்பயிர்கள் இந்தியாவில் வேகமாகப் புக ஆரம்பித்தபோது, தமிழகத்தில் பலரையும் முன் நிறுத்திக் கொண்டு அதைஎதிர்த்துப் போராடினார். இந்திய மக்களை பலிகடாவாக்கும் மரபணு தொழில்நுட்பம் பற்றிய பரப்புரைகளின் மூலம் பசுமை இயக்கங்களை ஒன்றிணைத்து அது பற்றிய எதிர்ப்பை சரியாகவே வெளிப்படுத்தி வெற்றி கண்டார். இயற்கை வேளாண்மை சார்ந்த பாதுகாப்பையும், சத்துணவு அவசியமும், சுத்தமான குடிநீர் உரிமை என்பதையும் வலியுறுத்தி சக மனிதனின் விடுதலை குறித்த முன்னெடுப்புகளாக அவரின் போராட்ட இயங்கு முறை இருந்தது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் முறைகளுக்கு எதிராக கடைசி காலத்தில் போராடி அங்கேயே மரணமடைந்தார். ஆயிரக் கணக்கான இளைஞர்களின் நல்லாசிரியராக இருந்து இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பாய்  முன் நின்ற போராளியாக விளங்கினார்.
     ஹைதராபாத்தில் நான் வசித்து வந்த போது கத்தாரின் நடமாட்டம் அதிகம் இருந்த செகந்திராபத் பகுதியில் அவரின் உடம்பு மீதான துப்பட்டா துப்பாக்கியைப் போல செயல்பட்டதை அறிந்திருக்கிறேன். அதே போல் தலையில் முண்டாசாகக் கட்டி கொள்ளும் வெள்ளை துண்டும், பசுமை வாழ்வை முன்னிருத்தும் பச்சை நிற சால்வையும், பற்றற்ற வாழ்க்கையின் குறியீடான காவி வேட்டியும் அவரை இயற்கை காப்புப் போராளியாக வெளிக்காட்டியிருக்கிறது.


     அவரை உசுப்பிய விடுகதை ஒன்றை பல மேடைகளில் சொல்லுவார்: பழமாகி காயாவது எது? காயாகிப் பூவாவது எதுஅவர் பழமாகவும், காயாகவும், நெஞ்சில் நிறைந்த அற்புத மலராகவும் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க பல ஆயிரம் இளைஞர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் கண்கூடாகும். அவர் 2013 டிசம்பர் கடைசி நாளில் மறைந்து நம்மை வெகுவாக பாதித்து விடைபெற்று விட்டார்.
Kasu velayutham From Facebook
ஆளுமை 22: சுப்ரபாரதிமணியன் (1)
‘‘என் தாய்மண்ணின் ரீங்கார ராகம்’’
-----------------------------------------------------------------
எண்பதுகளின் தொடக்கம். கல்கியில் வெளியான தன் முதல் சிறுகதை சார் ரேசன் கார்டு!க்கு அந்த மாதத்திற்கான இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்திருப்பதாக, அப்போது அறிமுகமான எழுத்தாள நண்பர் பாரிஜாதன் தெரிவித்தார்.
அப்போது வரை எனக்கு இலக்கிய சிந்தனை என்ற ஒரு அமைப்பு இருக்கிறது; அது மாதந்தோறும் தமிழ் இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை படித்து சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து ரூ. 50 பரிசு தருகிறது. வருட முடிவில் தேர்வாகியுள்ள 12 சிறுகதைகளில் ஒன்றிற்கு அந்த வருடத்தில் சிறந்த கதை என அறிவித்து ரூ. 500 பரிசு அளிக்கிறது. அதற்கு விழா நடத்தி வருடந்தோறும் நூலாகவும் வெளியிடுகிறார்கள். அது தவிர அந்த ஆண்டின் சிறந்த நாவலுக்கும் விருது அறிவித்து பரிசு தருகிறது என்பதெல்லாம் சுத்தமாக தெரியாது.
இப்போது போல் தடுக்கி விழுந்தால் விருது தரும் அமைப்புகள் எல்லாம் அப்போது இல்லை. அதேபோல் இதற்கு மாதந்திரம், வருடாந்திர நடுவர்கள் கூடுவதெல்லாம் வெளிப்படை நிகழ்வு. ஒருவர் மற்றவரை செறிவாக சொறிந்தாலன்றி விருது இல்லை என்ற நிலையும் அன்று இல்லை. அப்படி இலக்கிய சிந்தனையை பற்றி நான் அறிந்த வருடத்தில் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக இன்னமும் மீதமிருக்கிற பொழுதுகளில்சிறுகதை பரிசு பெற்றிருந்தது.
அந்த சிறுகதை இனிஎன்ற சிற்றிதழில் பரிசு பெற்றதாக நினைவு. அந்த கதையின் சாரமும், ஆழமும் இன்னமும் என் நினைவு அடுக்கில் இருக்கவே செய்கிறது. முதுமை தள்ளாட்டத்துடன் ஒரு முதியவர் கிராமத்து வீட்டுத் திண்ணையில் சுவர் தேய அமர்ந்து, அது மொழு,மொழுப்பாக மாறி அவர் வாழ்ந்ததன் அடையாளத்தை அற்புதமாக சொல்லும் கதை. ஒற்றை சருகை எடுத்து வைத்துக் கொண்டு அப்படியொரு யதார்த்தவாத, உணர்வுகளை மீட்டிய கதையை நான் படித்ததில்லை என்றே சொல்லுவேன்.
அதே காலகட்டத்தில்தான் கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசோ, மூன்றாவது பரிசோ பெற்றிருந்தார் சுப்ரபாரதி மணியன். அதே வேகத்தில் லில்லி தேவிசிகாமணி பரிசுத் திட்டத்தில் அவர் சிறுகதைத் தொகுப்பு தேர்வு பெற்றதும் நினைவு அடுக்கில்.
அவர் விவரணைகளை தேடியதில் கிடைத்த அபூர்வ விஷயம். அவர் கோவையை சேர்ந்தவர்; அதிலும் சோமனூர் செகுடந்தாளி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் என்பதுதான். அதற்கு ஒட்டியே இருக்கும் சேடபாளையம் கிராமம்தான் என் அப்பா, தாத்தாவின் சொந்த ஊர்.
என் அப்பத்தா, அத்தை எல்லாம் சேடபாளையத்தில் வசித்து வர, என் பெரியப்பத்தா செகுடந்தாழியில்தான் இருந்தார். சின்ன வயசில் முழுப்பரிட்சை லீவில் சின்னப்பத்தா, பெரியப்பத்தா வீட்டிற்கு போவதும், அங்கே எல்லாம் ஓயாமல் நெசவு நெய்யும் சத்தம் கேட்பதும், எந்நேரமும் பெரியப்பத்தா வீட்டு மண்ணு மொடாவில் முருக்கு, அதிரசம், சீடை போன்ற திண்பண்டங்கள் இருப்பதும், அதை அள்ளி, அள்ளி சட்டைப் பாக்கெட், டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வாயிலும் அதக்கிக் கொண்டு திரிந்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
அப்படியான நினைவுகளாலும், மீட்டப்பட்ட உணர்வுகளாலும், தாய் மண்ணை கண்டது போல் அதையொட்டிய வாஞ்சையும், பாசமும் சக எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனை பார்க்காமலே எனக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லைதான். அவர் எழுத்துக்களை படிக்கும்போது என் மண்ணுக்கான ஏதாவது ஒரு ரீங்காரம் எழாமல் போனதில்லை.
அந்த ரீங்கார ராகத்துடன்தான் கோவை அன்னபூர்னா ஓட்டல் அரங்கில் அப்போது வெகுதடபுடலாக நடந்த லில்லி தேவசிகாமணி பரிசளிப்பு விழாவிற்கு சென்றேன். சுப்ரபாரதி மணியன் மட்டுமல்ல,. மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி ராமசாமி, கந்தர்வன், சூர்யகாந்தன், சி.ஆர்.ரவீந்திரன், சிற்பி என ஒரு பெரிய எழுத்தாளர் படையே அங்கே முகாமிட்டிருந்தது.
என்னை மேலாண்மை பொன்னுசாமி சுப்ரபாரதி மணியனிடம் அறிமுகப்படுத்தியதும், நீண்ட காலம் பழகியது (அக்காலகட்டத்தில் எனது கதைகள், சுப்ரபாரதிமணியன் கதைகள் கல்கியில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வந்தது) போல் அவர் தனக்கே உரிய பண்போடு அரவணைத்துக் கொண்டு, தன்னுடன் இருந்த தனுஷ்கோடி ராமசாமியை அறிமுகம் செய்ததும், அத்தனை எழுத்தாளர்களும் ஒரு சேர அளவளாவி விருந்துண்டதும் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள்.
அன்றிலிருந்து இன்று வரை அவருக்கும் எனக்குமான நேசம் நெருக்கமாகியிருக்கிறதே ஒழிய குறைந்ததில்லை. அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு சிறுகதை நூல் கொண்டு வருவதே பெரும் சிரமம். 1300 பிரதிகள் அச்சடித்தே ஆக வேண்டும். அதில் 500 பிரதிகள் நூலகப்பிரதி எடுத்தால்தான் ஆச்சு. இல்லாவிட்டால் பதிப்பகத்தார் தலையில் துண்டை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அதனால் பெரும்பான்மை எழுத்தாளர்கள் கதைகள் வெகுஜன இதழ்களில் வெளியாகி இருந்தாலும் தொகுப்புகள் போட முடியாது தவிப்பார்கள். அப்படி தொகுப்பு என்று ஒன்று போடாத ஒரு எழுத்தாளரை எழுத்தாள மேடைகள் அங்கீகரிக்கவும் செய்யாது. அப்படி ஒரு தொகுப்பு கூட போடாத நிலையில் கூட என்னை எழுத்தாளன் என்று அந்தக் காலத்தில் அங்கீகரித்து திருப்பூர் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்து உரிய கெளரவம் கொடுத்து அனுப்பியவர் சுப்ரபாரதிமணியன்.
அப்போது இருந்து இப்போது வரை அவர் தோளில் ஜோல்னா பை இல்லாதிருந்ததில்லை. அப்படியே பை மாறியிருந்தாலும் கனவு இலக்கிய இதழ் இல்லாமல் அவர் வந்ததில்லை. யாரைப் பார்த்தாலும் தான் அச்சடித்து வெளியிடும் அந்த மாத கனவு இதழை கொடுத்து பார்த்தீங்களா? படிச்சீங்களா?’ என்று கேட்டு விடுவார்.
தொலைபேசித்துறையில் அதிகாரி. எஞ்சினியர். மனைவியும் கவிஞர். எழுத்துலகப் பிதாமகர் சுந்தரராமசாமியின் செல்லப் பிள்ளை. அவர் பரிந்துரைத்ததன் பேரில் அந்தக் காலத்திலேயே ஜெயமோகனுடன் சென்று கதா விருது பெற்றவர். ஓயாமல் எழுதிக் கொண்டே இருப்பவர். துளி பந்தா இல்லை. என் சிறுகதைத் தொகுப்புகள் பொய்த்திரை, தணிவது வந்தபிறகு, அதை தன் தொகுப்புகளாகவே கொண்டாடினார். போகிற மேடையில் எல்லாம் அதைப் பற்றி பேசினார். அதை கேட்கும்போது எனக்கு கூச்சமாகவே இருக்கும்.
மேடையில் பேசக் கூப்பிட்டால் நான் நடு, நடுங்கி விழும் காலம் அது. திருப்பூரில் மூன்று நாட்கள் குழந்தைத் தொழிலாளர் எழுத்தாளர் முகாம். தோப்பில் முகம்மது மீரான், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், என 30க்கும் மேற்பட்ட தமிழகத்து முன்னணி எழுத்தாளர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்ட அந்த நிகழ்வில் நானும் ஒருவன். அதில் என் கன்னிப் பேச்சு உருண்டது இன்னமும் மறக்க முடியாது.
கல்கியில் பணியில் சேரும் முன்பு கல்கி திருப்பூர் சிறப்பிதழ் வெளியிட்டு, அதற்கான வாசகர் வட்டத்தை நடத்தியபோதும் முன்னிலை வகித்தவர் சுப்ரபாரதி மணியன். அதில் என் பங்களிப்புக்கும் அவரே காரணியாக நின்றார். கல்கியில் பணியில் சேர்ந்த பின்போ அந்த நெருக்கம், இன்னமும் கூடுதல் ஆனது.
திருப்பூர் செய்தி ஏதும் என்றால் உடனே போன் செய்து விடுவார். யோசனைகள் சொல்லுவார். அப்போது திருப்பூரின் சாயக்கழிவு, சாக்கடைக் கழிவு இந்த அளவு விஸ்வரூபம் எடுக்கவில்லை. ஆனால் பனியன் கம்பெனிகளில் குழந்தைத் தொழிலாளர் என்பது நீக்கமற நிறைந்திருந்தது. அதை அகற்ற பெரும் இயக்கத்தையே எடுத்தது சேவ் அமைப்பு. இப்போது மாதிரி அப்போது அந்த அமைப்பு பெரிய கட்டிடத்தில் இல்லை.
அவிநாசியில் சேவூரில், திருப்பூரில் என சிறு, சிறு தென்னங்கீற்று ஓலைக்குடிகள்தான். அவர்கள் அறிமுகப்பட்டதும், அந்த அமைப்பின் தன்னார்வலர்களை அழைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றி செய்தி எடுத்ததும் இப்போதும் இனிக்கும் நினைவுகள். அதில் எனக்கு அப்போதே படு நெருக்கம் ஆனவர் அலோசியஸ்.
அமரர் கல்கி நூற்றாண்டு விழா. அதற்காக நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை என இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் நாவல் போட்டிக்கான காலக் கெடு முடியும் நேரத்தில் நான் திருப்பூரில் இருந்தேன். ஒரு ஸ்டோரிக்கு சென்றவன் வழக்கம் போல் சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கும் சென்றேன்.
என் வேலாயுதம். கல்கியில் நாவல் போட்டிக்கு டைம் முடிஞ்சுடுச்சா?’ பேச்சு வாக்கில் கேட்கிறார் அவர்.
ஒரு நாளோ, ரெண்டு நாளோதான் இருக்குன்னு நினைக்கிறேன். ஏன் கேட்கிறீங்க?’
இல்லே, டைம் தள்ளி வைப்பாங்கன்னு கேள்விப்பட்டேன். எத்தனை நாளோ, மாசமோ தெரியலை. அதை உங்க ஆபீஸ்ல கேட்டு சொல்ல முடியுமா?’
அதற்கென்ன கேட்டுட்டா போச்சு!
அப்போது கல்கி துணையாசிரியர் பா.ராகவனுடன்தான் இயல்பாக பேசுவேன்.
அவருக்கே போன் செய்தேன்.
அவருடன் பேசும் முன்னே ரிசீவரை பொத்தினார் சுப்ரபாரதி. என்ன காரணமோ,‘வேலாயுதம் நான் கேட்டேன்னு சொல்லாதீங்க. யாருக்கோ கேட்கிற மாதிரி கேளுங்க!என்றார் தாழ்ந்த குரலில். ராகவன் போனை எடுத்தார். கேட்டேன்.
ஏன் கேட்கறே வேலாயுதம்? நீ நாவல் எழுதப்போறியா?’
இல்லை. ஒரு நண்பர் கேட்டார். அதுதான்!
அது யாருன்னு சொல்லு!’ ‘அது உங்களுக்கு சொன்னா தெரியாது. என்ன நாவல் போட்டிக்கு கால நீட்டிப்பு செய்யப்போறாங்களா?’ ‘யோவ் சும்மா சொல்லுய்யா. நீதானே எழுதப்போறே!
சரி, உங்க வாய் முகூர்த்தம். அப்படியே ஆகட்டும். சொல்லுங்க!
எழுதுய்யா. நல்லா வரும். எத்தனை நாளைக்குத்தான் சிறுகதையே எழுதீட்டிருப்ப? நாவல் போட்டிக்கு டைம் நல்லாவே கொடுக்கப் போறாங்க. எப்படியும் ஒன்றரை மாசமாவது கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்த வார கல்கி இதழ்ல அறிவிப்பு வந்துடும் பாரு!
பட, படவென்று இன்னும் நிறைய பேசினார். ரிசீவரை வைத்து விட்டு சுப்ரபாரதிமணியனிடம் விஷயத்தை சொன்னேன்.
ஏன் உங்க பேரை சொல்ல வேண்டான்னீங்க?’
காரணமாத்தான்!என்றவர்,
ஏன் வேலாயுதம். ராகவன் சொன்ன மாதிரி நீங்களே ஒரு நாவல் எழுதுங்களேன்!
யோசித்தேன்.
என் மனசுல ஒரு நாவலுக்கான கரு பத்து வருஷமா ஓடிட்டுத்தான் இருக்கு. இருந்தாலும் எழுத முடியுமான்னு தெரியலை. பார்ப்போம்!அப்போதுதான் அதற்கான யோசனை முளை விட்டது.
நிச்சயம் முடியும். செய்யுங்க!
அவர் சொன்னதன் எதிரொலியில் அப்போது உருவானதுதான் பொழுதுக்கால் மின்னல்!என்ற நாவல்.
(தொடரும்)


கவிநிலா பதிப்பகம், திருப்பூர்
புதியவெளியீடுகளில்..சுப்ரபாரதிமணியனின்3 நூல்கள்
*புறாவும்,  அரசியல்வாதியும்  
                           ( இந்திய, வெளிநாட்டு  மொழிபெயர்ப்புக்கவிதைகள் ரூ60)
* பேசாத.. -லாமியா அஞ்சும் ( இளம் பெண் கவிஞரின் கவிதைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழில். ரூ 30 )
*
நெசவை இழந்து விட்டு இந்த தேசம் நிர்வாணமாகப்போகிறதா. ( கட்டுரைகள் ரூ 25 )



திங்கள், 3 டிசம்பர், 2018

சுப்ரபாரதிமணியன்  நாவல்கள் : முருகேசபாண்டியன்: சமூகப் போராளியாக அவரின் 15 நாவல்கள் இன்றைய சூழலின் விமர்சனங்களாக வெளிப்பட்டுள்ளன, சமகாலப்பிரதிபலிப்பு, உலகமயமாக்கலின் நாசம் , விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று வெவ்வேறு தளப் பரிமாணங்களில் கலைத்தன்மையுடன் எழுதி வெற்றி கண்டிருக்கிறார்.இவரின் குரல் கார்ப்பரேட் உலகின் வன்முறைக்கு எதிரான முக்கியமான குரல்.விளிம்பு நிலை மக்களின் குரல்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் :, சு.வேணு கோபால் ,
250  சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும். பலவகை அனுபவங்கள், பெண்களின் இயல்புகள், பிரச்சினைகள். சுற்றுச்சூழல், சாதாரண மக்களின் இயல்புகள், நிலத்தோடு தொடர்புடைய அனுபவங்கள்., மனிதர்களின் தன் வெறுப்பு, வன்மம் என்று விரிவான தளங்களில் உளவியலோடு ஊடாடி இருக்கிறார். சிறுகதைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன அவரின்  ......
தொடர்ந்த இயக்கத்தால் . சில சிறந்த சிறுகதைகள்:
ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும், மிச்சம், எதிப்பதியம், கை குலுக்க சில சந்தர்ப்பங்கள்,விமோசம், வாக்கு.., தொலைந்து போனக் கோப்புகள்......
சுப்ரபாரதிமணியன் படைப்புலகம்;
( காந்தி கிராம பல்கலைக்கழக்க் கருத்தரங்கில் )



நூல் வெளியீட்டு  விழா:
1.* சுப்ரபாரதிமணியனின்  நாவல்   ரேகை   நூல் வெளியீட்டு  விழா:
                  டிஜிட்டல் யுகத்தில்  புத்தக வாசிப்பு  “ :
இது டிஜிட்டல் யுகம். இன்னும் புத்தக வாசிப்பைக் கைக்கொள்ளும் மனிதர்கள் இயல்பாக இருக்கிறார்கள் .வாசிப்பு மனிதர்களை ஆசுவாசப்படுத்தக்கூடியது. அதன் தொடர்ச்சியான சிந்தனைகளை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லக்கூடியது. வாசிப்பை மூச்சுக்காற்றாக, ஆசுவாசமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களால் உலகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன “ என்று உலகப்புத்தக்கண்காட்சி : 37வது உலக ஷார்ஜா அமீரகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவம்    பற்றி சுப்ரபாரதிமணியன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர்  மாதக்கூட்டம் 02/12/18.ஞாயிறு மாலை.5 மணி..          பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடந்தது.
தலைமை : தோழர் சண்முகம் .,முன்னிலை: தோழர்கள்  ரவிச்சந்திரன், சசிகலா கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடந்தன, சுப்ரபாரதிமணியனின் ரேகை நாவல் வெளியிடப்பட்ட்து
நூல் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியனின்  நாவல்   ரேகை  
: உரை : படைப்பு அனுபவம்
 “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்  “                  –  : திருப்பூர் குணா

* நூல்கள் அறிமுகம் .: * கா.ஜோதியின் “ ஒரு சாமானியனின் கவிதைகள் “ ( மருத்துவர் முத்துசாமி )
* மதிக்கண்ணனின் “ ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்  “ சிறுகதைத் தொகுப்பு ( குணா )
* சத்யாவின் “ அன்பின் துணை வழி “ சிறுகதைத் தொகுப்பு
*  சீதாராம் யேச்சோரியின் மார்க்சீயம் : மாற்றத்துக்கான ஒரே சக்தி ”  ( ஜோதி )
: * இதழ்கள் அறிமுகம் :  கோடுகள் ( தேனி ), தொழிலாளி(  கோவை ) , சிந்தனையாளன் ( சென்னை ) - சுப்ரபாரதிமணியன்
உரை : உலகப்புத்தக்கண்காட்சி : 37வது உலக ஜார்ஜா அமீரகப் புத்தகக் கண்காட்சி : சுப்ரபாரதிமணியன்
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பில் துசோபிரபாகர், காதர் கலந்து கொண்டனர். தர்மன்,ரவிச்சந்திரன் ..கருத்துரைகள் வழங்கினர் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488
சுப்ரபாரதிமணியனின் ரேகை நாவல் வெளியிடப்பட்ட்து. அந்நாவல் பற்றி :

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்   70104 84465 ) )
ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் : பேரா.க இராமபாண்டி
நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும்   அடுத்த நிலையிலான சிந்தனையையும்  எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.
சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறதுஅதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல்  போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்படுவதும், சமூக விடயங்களை நாடகப்படைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது.
கணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வேலையாலும் தொடர்வது புதிய சமூக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பையா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேருவது கூட அவ்வகையில் சிறு வெளிச்சம் தான்.
இழிவாக கருதப்படும் சோதிடம் பார்க்கும் சாதி . ஆனால் பண  மதிப்பால் உயர்வதும் காட்டப்படுவது இன்னொரு கோணம்..அமலா என்ற் பூக்காரி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக்கல்வியில் ஈடுபடுவது ஆங்கிலமோகம் பற்றியதை சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிரான செயல்களில்  ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளைக்கொண்டாடுவதும் சிறந்த சித்தரிப்புகள். .
   முதல் அத்யாயத்தில் மர நாற்காலியும் பிளாஸ்டிக் நாற்காலியுமான தீச்சம்பவமே அதிர்ச்சி தரகூடியது. சாதி சார்ந்த வன்முறையைச் சொல்லிப்போகிறது.இயற்கை விவசாயம், தமிழ்க்கல்வி சார்ந்த கதாபாத்திரங்கள் சொல்லும் செய்திகள் அபாரமானவை. அவை சமூகத்தில் வாழும் மனிதர்களின் முன் மாதிரிகளைக்கொண்டே அவற்றை அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு புதினம் சமூகம் சார்ந்த நிறைய அனுபவங்களை, மனிதர்களை உள்ளடக்க முடியும் என்ற ஆச்சர்யத்தையும் இந்த ரேகை தருகிறது.

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ( பேரா.க இராமபாண்டி, மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக்க் கல்லூரி, சங்கரன் கோவில்  627754(  ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்   70104 84465 ) )